வெள்ளி, 21 ஏப்ரல், 2023

DeivaMachan தெய்வ மச்சான்

 ஒரு சிம்பிள் ஸ்டோரி , ஆர்ப்பாட்டம் இல்லாத கதாநாயகன்(விமல்) அவன் தங்கைக்கு எப்படி கல்யாணம் செய்து வைக்கிறான் ? என்பதை எவ்வளவு க்கு எவ்வளவு சிரிப்புடன் சொல்ல முடியுமோ  சொல்ல முயற்சி செய்து , வெற்றி யும் பெற்றுள்ளது #DeivaMachan படக்குழு.

நடிகர் பால சரவணன் படத்துக்கு மிக பெரிய பலம். படம் முழுவதும் அவர் வரும் இடங்களில் நன்றாகவே சிரிக்க வைக்கிறார். 


சினிமாவில் செண்டிமெண்ட் மிக முக்கியமானது. விமல் - பால சரவணன் #விலங்கு  வெப் சீரிஸ் வெற்றி க்கு பிறகு மீண்டும் கை கூடியுள்ளது. 

கார்த்திக் -கவுண்டமணி , 

பார்த்திபன்-கவுண்டமனி மாதிரி. விமல்- @Bala_actor காம்போ நல்ல செட் ஆகியுள்ளது. 

இந்த லாஜிக் எல்லாம் பார்க்காமல் , காலை 4 மணிக்கு ஷோ க்கு எல்லாம் செல்லாமல் , வார இறுதி நாட்களில் ஒரு தியேட்டர் க்கு சென்று கவலை எல்லாம் மறந்து சிரித்து விட்டு வரலாம். சிரிக்க வைக்கிறான் இந்த தெய்வ மச்சான். 

 #DeivaMachan


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக