திங்கள், 6 பிப்ரவரி, 2023

இரண்டு ஜாம்பவான்களும் இசை யும் !!

 இரண்டு ஜாம்பவான் களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் புதிய இரண்டு ஜாம்பவான்கள் கிடைக்கும் இது காலத்தின் விளையாட்டு ; ஆம் காலம் தனக்கு தேவையான வற்றை எடுத்து கொள்ளும்; நாம் நினைபோம் நம்மால் தான் என்று , அது வல்ல நிதர்சனம் நாம் அதில் ஒரு காரணியே.


1989 ஆம் ஆண்டு இயக்குனர் சிகரம்  பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் புதுப்புது அர்த்தங்கள். இப்படத்தில் பின்னணி இசை சேர்ப்பதில் கால தாமதம் ஏற்பட இயக்குனர்  பாலச்சந்தர் க்கும் இசை அமைப்பாளர் இளையராஜா பிரச்சினை ஏற்பட்டது.


ஆம் ; அது இளையராஜா வின் காலம் எப்போதும் பிசியாகவே உள்ள காலம் ; ஆதலால் , புதுப்புது அர்த்தங்கள் படத்துக்கு கால தாமதம்.  இசைக்கு எப்படி இளையராஜா உச்சமோ , இயக்கத்தில் சிகரம் பாலச்சந்தர்.



அதன் பின் அவர் இயக்கிய மூன்று படங்கள் "ஒரு வீடு ஒரு வாசல்' ,இப்படத்தில் பாடல்கள் கிடையாது இசை V. S. Narasimhan. 

"அழகன்", "வானமே எல்லை" இந்த இரு  படங்களுக்கு மரகதமணி என்கிற இசையமைப்பாளர் அறிமுகம் செய்தார் பாலச்சந்தர்.இந்த 

மரகதமணி தான் பின்நாளில்.


காலங்கள் கடந்தன ஆம் 1992 ஆம் ஆண்டு பிறந்தது , தமிழ் சினிமா வின் மறக்க முடியாத வருடம் மூன்று படங்களுக்கு பூஜை போட பட்டது பாலச்சந்தர் தயாரிப்பில்.


முதல் படம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் அண்ணாமலை , 

இரண்டாம் படம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா ,

மூன்றாவது படம் பாலச்சந்தர் இயக்கத்தில் முகேஷ் ,குஷ்பு நடிப்பில்  ஜாதி மல்லி.


அண்ணாமலை க்கு தேவா இசை ,

ரோஜா க்கு ரகுமான் என்கிற புதிய இசை அமைப்பாளர்.

ஜாதி மல்லி க்கு மரகதமணி இசை  இந்த மரகதமணி தான் பின்நாளில் கிறவானி யானர் (பாகுபலி ,RRR இசை அமைப்பாளர்).



இளையராஜா இல்லாமல் மூன்று முக்கிய படங்கள் முதல் மாடியில் அண்ணாமலை , இரண்டாம் மாடியில் ரோஜா என படங்கள் பரபரப்பாக தொடங்கியது. 

முதலில் வெளிவந்தது.



அண்ணாமலை படம் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களும் சூப்பர் அப்போதும் இன்றை போல பட விமர்சகர்கள் தேவா குறை கூறினார்கள் படம் அண்ணாமலை , பாடல்கள் 

தம்பி மலை என்று ஆனால் படத்தின் வெற்றியை பாதிக்க வில்லை.


அண்ணாமலை ஓடி கொண்டே இருக்கும் போது மணிரத்னத்தின் ரோஜா வெளியானது.

படம் வெளியாகும் முன்னே ரகுமான் என்னும் இளம் இசை புயல் விச தொடங்கியது  பாடல்கள் ஹிட் , ரேடியோ வில் சின்ன சின்ன ஆசை பாடலுக்கு repeat audience. 


படம் வெளியான பின்பு அந்த இசை புயல் தமிழ் சினிமாவில் மிக பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என எவரும் நினைத்து இருக்க மாட்டார்கள் தமிழ் சினிமா பாடல்களை கிமு , கிபி போல ரோஜா க்கு முன் , ரோஜாக்கு பின் என்று கேட்கும் படி அமைந்தது. 


1993 ஆம் ஆண்டு மூன்றாம் படமான ஜாதி மல்லி வெளியானது இசை கிரவாணி பாடல்கள் கேட்க்கும் படி அமைந்தது. 


தமிழ் சினிமாவிற்கு பாலச்சந்தர் கொடுத்த பல துறைகளில் வித்தகர்களை அறிமுகம் செய்து தன் பங்கை ஆற்றினார். இசையமைப்பாளர்கள் ரகுமான் & மரகதமணி. இந்த மரகதமணி தான் RRR படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் க்ளோப் விருது வாங்கிய கீரவாணி. 


இளையராஜாவை எதிர்த்து பாலச்சந்தரால் களமிறக்கப்பட்ட இருவரும் ஆஸ்கார் வாங்கி விட்டார்கள் என்று ஒரு யூட்யூப் வீடியோ பார்த்தேன்!..சற்று வருத்தமாக இருந்தது , காலம் தனக்கு தேவையான வற்றை எடுத்து கொண்டு சுழன்று கொண்டே இருக்கும்.


















#ilayaraja #Balachander #maniratnam #Rahman #Keervani #Annamalai #Roja

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக