திங்கள், 2 ஏப்ரல், 2018

தமிழனின் குமுறல்

மீத்தேன்,நியூட்றீனோ,
ஸ்டெர்லைட்,காவிரி,கச்சதீவு , ஆந்திரா சிறப்பு அந்தஸ்து, பெட்றோல்&டீசல் விலையை தனியாரிடம் ஓப்படைத்தது என அனைத்து பிரச்சனைகளுக்கும் திமுகவும்,காங்கிரஸ் தான் காரணம்.

சரி அவர்கள் செய்தது தவறு என்று வைத்து கொள்வோம். 2011ல் திமுக ஆட்சியை இழந்தது, அதன் பிறகு இன்று வரை ஆள்வது  தமிழகத்தை ஆள்வது அதிமுக.

அவர்களின் (திமுக) தவறை திருத்த வேண்டியது தான் ஆளும் கட்சியின் கடமையே தவிர, அவர்களையே குறை கூறுவது ஆளும் தரப்பின் கையாளகாத தனத்தை காட்டுகிறது.
சரி அம்மையாரின் பழக்கத்தை அவரின் அடி,பொடிகள் பின்பற்றுவது ஆச்சர்யபடுவதற்கில்லை.

மெத்த படித்த மேதாவிகள் உள்ள BJP யும், பதவிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் திமுக வையும், காங்கிரசையும் குறை சொல்வது தான் வேடிக்கையாக உள்ளது.

என்ன சொல்லி வாக்கு கேட்டீர்கள் ? முந்தைய ஆட்சியாளர்களின் தவறை திருத்துவோம் என்று தான். இன்று வந்து இது அவர்கள் செய்தது , எங்களால் எதுவும் செய்ய முடியாது என்றால் அவர்களே ஆளட்டுமே !!! நீங்கள் எதற்கு ? அந்த 56 inch மார்பு எதற்கு ?

அறிவு ஜீவி ஆடிட்டர் குருமூர்த்தி எம் மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் அவரின் ஆட்சியை பற்றி கூறிய வார்த்தைகளை மத்திய மோடி சர்காருக்கு வழிமொழிகிறேன்.

#ModiSarkar
இவண்
ராஜா.க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக