செவ்வாய், 20 மார்ச், 2018

நான் சந்தித்த ரத யாத்திரை

நான் சந்தித்த ரத யாத்திரை

கேரளாவில் ஐயப்பனை தரிசித்து விட்டு  அங்கிருந்து ஊருக்கு வருகையில் ராணி,கோணி ஊர்கள் வழியாக தமிழகம் வருவது வழக்கம்.

வழக்கமாக  December 26ல் சபரிமலையில் திரும்புவது வழக்கம்; இந்த முறை 25ம் தேதியே திரும்பிகொண்டிருந்தோம்.

அன்று ஏசு நாதரின் பிறந்த நாள் என்பதால் நாங்கள் வரும் வழியில் யாத்திரை நடக்கும் போலும்; கார்களில் இரு பக்கமும் சாலையை அடைத்து 1கிலோ மீட்டர் தொலைவிற்கு கார்கள் ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.

சரி இந்த வழியாக செல்ல முடியாது என்பதை அறிந்து மாற்று வழிக்கு தயாராகி ; எங்கள் காரை மாற்று திசையில் திருப்ப முயன்ற போது நன்கு படித்த , நாகரீகமான இளைஞன் இந்த வழியாக செல்ல கூடாது என்று நிறுத்தினார்.நாம் பேசுவதை காது கொடுத்து கூட கேட்க மனமில்லை; சரி பேசி பயனில்லை என்பதை உணர்ந்தோம்.

எங்களால் நேராக செல்ல முடியாது என்பதும் அவருக்கு தெரியும், சரி மாற்று பாதை வழியாக திரும்பலாம் என்று நினைத்தால் இந்த ஊர்வலம் கடக்கும் வரை நீங்கள் திரும்ப கூடாது என்ற அதிகார குரல்;

சரி காத்திருந்து பொறுமையாக திரும்பினோம்; இது போன்ற ம(ன) வெறி பிடித்தவர்கள் அனைத்து இடங்களிலும் உள்ளனர், இவர்களை கடந்து செல்வது தான் நம்
யாத்திரையின் வெற்றி எங்கள் ரதத்தை செலுத்தினோம்.

பயணிப்போம்
ராஜா.க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக