வியாழன், 17 மே, 2018

ஒரு முறை சொர்க்கத்தில்

ஒரு முறை சொர்க்கத்தில் 
நாரத மாமுனியும், கர்ணனும் சந்திக்கிறார்கள். கர்ணன் கூறினான் எனக்கு இங்கே வெகுவாக பசிக்கிறது ஆனால் உணவே கிடைக்காமல் அவதி படுகிறேன் என கூறினான்


அதை கேட்ட நாராதர் சிரித்து கொண்டே உன் ஆட்காட்டி விரலை கடி என்கிறார். கர்ணனும் கடிக்க அவன் பசி எல்லாம் அடங்கி போகிறது. கர்ணனுக்கோ வியப்பாக உள்ளது !! எப்படி என் பசி அடங்கியது என வினவுகிறான்

நாரதர் கூறினார் பூலோகத்தில் நீ அனைவருக்கும் பொன்னையும்,பொருளையும் உன் கையால்  வாரி வழக்கினாய். ஆனால் அன்னம் (உணவு) கேட்டவர்களுக்கு உன் ஆட் காட்டி விரலை காட்டி அங்கு உணவழிக்கிறார்கள் என்று கூறினாய்

புண்ணியங்கள் அனைத்தும் உன் ஆட்காட்டி விரலுக்கு தான் சென்றது அதனால் தான் இன்று அதை கடிக்கையில் உன் பசி போய் விடுகிறது
பொன்னையும் , பொருளையும் போன்று அன்னத்தையும் உன் கையால் கொடுத்திருந்தால் அதன் சுவையை முழுவதுமாக அடைந்திருப்பாய் என்றார்.


ஆதலால் இப்பூலோகத்தில் வாழும் நாட்களில் நம்மால் முடிந்த அன்னதானத்தை இயலாதவர்களுக்கு நம் கையால் கொடுத்தால் இந்த பூமியிலேயே ஒரு சொர்க்கத்தை காணலாம்.

இவண்
ராஜா. 





Attachment.png

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக