வெள்ளி, 24 நவம்பர், 2017

திருப்பதிக்கு போலாம் வாங்க ?



திருப்பதிக்கு போலாம் வாங்க ?

திருப்பதிக்கு சென்றோம் என்ற சொன்னவுடன் நம்மை நோக்கி அடுத்த வரும் கேள்வி ?
எவ்வளவு நேரம் ஆயிற்று ?
எத்தனை கூண்டுக்குள் அடைத்தார்கள்
என்பது தான்.

பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப,இக்காலத்திற்கு ஏற்றால் போல் பல மாற்றங்களை நடைமுறை படுத்தி தரிசனத்தை எளிமை படுத்தி பக்தர்களின் நேரத்தையும் மிச்ச படுத்தி உள்ளது திருப்பதி தேவஸ்தானம். அந்த நிர்வாக திறமைக்கு ஒரு சல்யூட் 👏🏻👏🏻👏🏻.

நடந்து வரும் பக்தர்களுக்கு சில சலுகைகளை கொடுத்து உள்ளது அதில் ஒன்று தான் “ஶ்ரீவாரி மெட்டு” பாதை.

திருப்பதியிலிருந்து 19KM தொலைவில் உள்ளது இந்த ஶ்ரீவாரி மெட்டு. காலை 4 மணியிலிருந்து பேருந்துகள் இயக்க படுகிறது.
சென்னையிலிருந்து காரில் வருபவர்கள் திருப்பதிக்கே செல்லும் முன்னே பைபாஸில்
 “சீனிவாச மங்காபுரம்” வழியாக இங்கு வந்து விடலாம். இங்கே கார் நிறுத்தும் வசதியும் உள்ளது.

அதி காலை 6 மணிக்கு தான் அப்பாதையை திறக்கிறார்கள் இரவில் நடந்து செல்ல அனுமதி கிடையாது. (forest area) என்பதால் இங்கிருந்து திருமலை க்கு செல்ல 2388 படிகட்டுகளே அதை கடந்து சென்றால் திருமாலை கண்டு விடலாம்.

அது என்ன சலுகை ?

தினமும் 6000 டோக்கன் இவ்வழியில் வருபவர்களுக்கு வழங்க படுகிறது. இந்த நுழைவு சீட்டு கிடைப்பது
1200 வது படிக்கட்டில் அதில் எந்த நேரத்தில் பார்க்க வேண்டும் (Timing slot ) என்ற விவரங்களுடன். இதற்கு பெயர்( த்வ்ய தர்ஷன்).

முதலில் நடப்பதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கும் படிகளுக்கு இடையே பாதைகள் இருப்பதால், 1200 படியிலிருந்து தொடர் படிகட்டுகள் இருப்பதால் இலகுவாக கடந்து விடலாம்.

அதிக பட்சமாக 2 மணி நேரம் அவ்வளவு தான். செல்லும் வழியில் நாம் இழைப்பாற குளிர்பானம் மற்றும் நொறுக்கு தீனிகளுக்கு பஞ்சமிருக்காது.

காலை 6 மணிக்கு  நடை பயணத்தை தொடங்கினோம். எங்களுக்கு கிடைத்ததது காலை 10 மணி (slot). 8 மணிக்கெல்லாம் திருமலைக்கு சென்றடைந்து விட்டோம்.

2 மணி நேரத்தில் தயாராகி சரியாக 10 மணிக்கெல்லாம் வரிசையில் நின்றோம், 11.30 மணிக்கெல்லாம் பாலாஜியை தரிசித்து விட்டு வெளியில் வருகையில் நெய் மணக்கும்
லட்டு கவுண்டர் எங்களை இன்முகத்துடன் வரவேற்றது.

பின் வந்த வழியிலேயே இறங்கி வந்து விட்டோம் படிகட்டுகளில் ஏறுவதை ஒப்பிடுகையில் இறங்குவது தான் சுலபம் ஆயிற்றே !!!

பயணங்கள் தொடரும்....
ராஜா.க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக