நாச்சியார்களின் காலமா இது ?
சினிமாவிற்காக எந்த வித சமரசமும் செய்து கொள்ளாமல் தன் மனதில் உள்ளதை கேமராவின் கண்கள் வழியாக இவ்வுலகிற்கு எடுத்து காட்டும் இயக்குனர்கள் சிலரே அதில் திரு.பாலாவும் ஒருவர்.
அதற்கு சான்று பாலா வின் முந்தைய திரைப்படங்கள். சேது வில் தொடங்கிய பயணம் தாரை தப்பட்டை வரை ஒவ்வொரு திரைப்படத்திலும் இப்படியெல்லாம் இருப்பார்களா இவ்வுலகில் மனிதர்கள் என்று பல தரப்பு மக்களையும் ஆச்சரியபடவைக்கும் கதாபாத்திரங்களை படைத்திருப்பார்.
சமீபத்தில் பாலா இயக்கியிருக்கும் நாச்சியாரும் அதில் விதிவிலக்கல. சமீபத்தில் வெளியான அப்படத்தின் டீஸர் பலரையும் விவாதிக்க வைத்துள்ளது அதில் இடம் பெற்றிருக்கிம் ஒரு வார்த்தை
“தே..பயலே”.
வழக்கம் போல் கலாசார காப்பாளர்கள் நாம் தான் என்று நம்பிகொள்ளும்
“நாம் (மட்டும் தான் )தமிழர்கள்” கூட்டம் போல் பொங்கி எழுகின்றனர்.
ஒரு பெண் எப்படி இந்த வார்த்தையை பேசலாம் ? பிரச்சனை அந்த வார்த்தையிலா இல்லை அதை பெண் பேசினால் என்பதிலா?
அதே வார்த்தையை ஆண் பேசினால் அவனை கண்டு ஒதுங்கும் இதே சமூகம், பெண் கூறினால் சமூக சீரழிவு என்று முகம் சுழிக்கிறது.இரண்டு விதமான முக சுழிவுகள் ஆணுக்குளுக்கு ஒரு வகை
பெண்களுக்கு ஒரு வகை.
சமீப காலமாக தமிழ் சினிமா
இது தான் பெண் சுதந்திரம் என்று தவறாக காட்டுகிறது என்று ஒரு கும்பல் .
இது தான் பெண் சுதந்திரம் /
இதுவல்ல பெண் சுதந்திரம்
என்று வரையறுக்க பட்டாலே சுதந்திரம் என்பது காற்றில் கரையும் கற்பூரமாகி விடுகிறது.
அக்காலத்தில் உள்ள பெண்கள் இப்படி இல்லையே பிறகு ஏன்? , அக்காலத்தில் உள்ள ஆண்களும் அப்படி இல்லை. கால மாற்றத்துக்கு ஏற்ற படி மாறவில்லையெனில் அடித்து செல்ல படுவோம்.தன்னை பாதுகாத்து கொள்ள இது ஒரு ஆயுதம் என்றால் அதை அந்த பெண் பிரயோகிப்பதில் தவறேதும் இல்லை.
காலத்துடன் பயணிப்போம்
ராஜா.க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக