செவ்வாய், 5 டிசம்பர், 2017

தொட்டு தொடரும் பாரம்பரியமா ???

தொட்டு தொடரும் பாரம்பரியமா ???


அகில இந்தியா தேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுபேற்க  உள்ள  திரு.ராகுல் காந்தி அவர்களுக்கு வாழ்த்துகள்

இன்று இந்தியாவை உலக அரங்கில் 
ஜனநாயக நாடாக தலை நிமிர செய்ததில் காங்கிரஸின் பங்கு இன்றியமையாதது.
அக்கட்சியின் மத சார்பின்மை கொள்கை, சிறுபான்மை மக்களின் நலன் பேணுதல் அதன் மணிமகுடத்தில் ஒருவைரக்கல்

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவர்கலால் நேரு அக்கொள்கையில் சிறிதும் சமரசம் செய்து கொள்ள வில்லை.
அகதிகளாக இந்தியா வந்த பார்சிகள்,யூதர்கள்,திபெத்தியர்கள் என அனைவரையும் அன்புடன் வரவேற்று  அடைக்கலம் கொடுத்த அற்புத பூமி

இத்தகைய பெருமைகள் கொண்ட இக்கட்சியின் தலைமை பண்பும்,
இந்திய நாட்டின் உச்ச பட்ச 
அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியும் 
ஒரு குடும்பத்தில் உள்ள ஓருவருக்கே வாழையடி வாழையாக கிடைப்பது சிறிது மன்னராட்சியை நினைவுபடுத்தினாலும் ஆச்சர்யபட ஏதேதுமில்லை!!! 

நேரு தொடங்கி அவரின் மகள் திருமதி.இந்திரா அவரின் மகன் 
அமரர் திரு.ராஜிவ் அவரின் மகன்
திரு.ராகுல் என தொடர்கிறது

அக்கட்சி வரலாற்றை படிக்கையில் அதீத திறமை உள்ள நபர்களுக்கு பஞ்சம் இல்லை. திரு.வல்லபாய் படேலில் தொடங்கி, திரு.லால் பகதூர் சாஸ்திரி,திரு.காமராஜ்,
திரு.மன்மோகன் சிங்,பா.சிதம்பரம்,திரு.ராஜசேகர ரெட்டி இவர்கள் தம் தம் துறையில் சாதித்தாலும் முழுதான தலைமை பண்பை அடையவில்லை என்பதே நிதர்சன உண்மை.

நாட்டின் மற்றொரு கட்சியான பா.. இதில் சிறிது வேறு பட்டுள்ளது. தலைமையும் சரி,பிரதமர் பதவியும் சரி கட்சியிலும் மக்கள் மன்றத்திலும் தன் திறமையை நிருபித்தால் தனி அங்கிகாரம் கிடைக்கிறது

காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் நிகழ்கையில்
காங்கிரஸ் மட்டும் என்ன 
விதிவிலக்கா என்ன !!! 

காலத்துடன் பயணிப்போம்
ராஜா. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக