ஞாயிறு, 24 ஜூன், 2018

தமிழ் சினிமாவின் புற்று நோய்

தமிழ் சினிமாவின் புற்று நோய்

சினிமாவில் காட்டும் நல்ல காட்சிகள் மனதில் பதிவதை விட,அதில் இடம் பெறும் சில தீய காட்சிகள் ஆழ் மனதில் பதிந்துவிடும்.

அன்றைய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரையில் புகை பிடிப்பதை அறவே தவிர்த்தார். அதன் பலன் அவரின் ரசிகர்களும்  புகை பிடிப்பதை தவிர்த்தனர்.

அதன் பிறகு ரஜினியின் கொடி பறக்கிறது தமிழ் சினிமாவில். குறிப்பாக அவரின் ஸ்டைல் அனைவரையும் வசிகரித்தது. ஆனால் அதில் அவரின் புகை பிடிக்கும் பழக்கமும் ஸ்டைலானது தான் துரதிர்ஷடம் .
சினிமாக்களில் வெற்றி பெற எம்.ஜி.ஆர் formula க்களை பயன்படுத்திய ரஜினி இப்பழக்கத்தில் நேரெதிர்.

விளைவு இன்றைய தமிழகத்தில் 40-50 வயது உடையவர்கள் சிகரெட் (புகை)பிடிப்பதற்கு இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் ஒரு காரணம்.

இன்று தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு படையை வைத்திருக்கும் தளபதி
நடிகர் “விஜய்”. அவருக்கென்று சமூக பொறுப்புக்கள் உள்ளது அதை சில சமயங்களில் திறம்பட செயல்படுத்துவார்.

விஜயின் சமீபத்திய திரைப்படமான “சர்கார்” முதல் போஸ்டரில் கையில் சிகரெட் உடன் இருப்பது போல் உள்ளது சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.
புகை பழக்கத்திற்கு எதிராக இன்றைய காலகட்டத்தில் அதை கடுமையாக எதிர்ப்பவர் மருத்துவர் திரு.அன்பு மணி ராமதாஸ்.

இது தொடர்பாக அவரிடம் கேட்டதற்கு அந்த சிகரெட் கையில் இல்லாமல் இருந்தாலும் கூட விஜய் ஸ்டைலாக இருப்பார் என்று கூறியிருந்தார் அவரின் கருத்து வரவேற்க்கதக்கது.

பெற்றோர்களை விட கண்மூடித்தனமாக தனக்கு பிடித்த கதாநாயகனை மதிக்கும் ரசிகர்களை கொண்டது தமிழகம்.

விஜய் போன்ற உச்ச நட்சத்திரம் திரையில் புகைபிடிப்பதை தவிர்த்து,
புகை பிடிக்காதீர்கள் என்று கூறினால் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை உயராது மாறாக ஸ்டைலாக புகை பிடித்தால் கண்டிப்பாக அதன் எண்ணிக்கை உயரும்.

இந்த விஷயத்தில் இன்னொரு ரஜினியாக விஜய் வர வேண்டாம்.
புகைப்பதை தவிர்ப்போம்,
புற்று நோயை ஒழிப்போம்.
#Vijay #NoSmoking

இவண்
ராஜா.க

சனி, 9 ஜூன், 2018

காலா என் பார்வையில்

அறிமுக காட்சி முதல் இறுதி காட்சி வரை நான் இயக்குனரின் நடிகன்  என்று நிருபணம் செய்த “super star” சினிமாவில் தன் வெறுப்பாளர்களை  
 “க்ளீன் போல்ட்செய்திருக்கிறார்.

கரிகாலனின் அடுத்த தலைமுறைக்கான பார்வையை அகிம்சை,வன்முறை,சுயநலம் என்று மகன்கள் கதாபாத்திரத்தால் இன்றைய சமூகத்தின் இயக்குனர் பார்வைநச்”.

மனைவி,முன்னாள் காதலி கதாபாத்திரத்தின் வலிமையை நகைச்சுவையாக,கவிதையாக,நேர்த்தியாக காட்சிபடுத்திய விதம் அழகியஹைகூ”.

கதையில் வில்லனின் பலத்தை பொறுத்து நாயகனின் பலம் புலப்படும். அந்த வகையில் தன் நடிப்பால்,வசனங்களால் ஒரு காட்சியில் நாயகனை தன் நடிப்பால் அடித்து தன் அசுரபலத்தை (இராவணன்) நிருப்பிக்கிறார் நானா படேகர்.

கதையுடன் கூடிய பாடல்கள்,பிண்ணனி இசை படத்திற்கு பலம்

விஷமிகளின் விமர்சனங்களை துறந்து,
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
பற்றற்று பார்க்கையில் 
காலா என்கிற கருப்புமேலும் அழகாகிறது

ரசிகன்
ராஜா.  

வியாழன், 17 மே, 2018

ஒரு முறை சொர்க்கத்தில்

ஒரு முறை சொர்க்கத்தில் 
நாரத மாமுனியும், கர்ணனும் சந்திக்கிறார்கள். கர்ணன் கூறினான் எனக்கு இங்கே வெகுவாக பசிக்கிறது ஆனால் உணவே கிடைக்காமல் அவதி படுகிறேன் என கூறினான்

அதை கேட்ட நாராதர் சிரித்து கொண்டே உன் ஆட்காட்டி விரலை கடி என்கிறார். கர்ணனும் கடிக்க அவன் பசி எல்லாம் அடங்கி போகிறது. கர்ணனுக்கோ வியப்பாக உள்ளது !! எப்படி என் பசி அடங்கியது என வினவுகிறான்

நாரதர் கூறினார் பூலோகத்தில் நீ அனைவருக்கும் பொன்னையும்,பொருளையும் உன் கையால்  வாரி வழக்கினாய். ஆனால் அன்னம் (உணவு) கேட்டவர்களுக்கு உன் ஆட் காட்டி விரலை காட்டி அங்கு உணவழிக்கிறார்கள் என்று கூறினாய்

புண்ணியங்கள் அனைத்தும் உன் ஆட்காட்டி விரலுக்கு தான் சென்றது அதனால் தான் இன்று அதை கடிக்கையில் உன் பசி போய் விடுகிறது
பொன்னையும் , பொருளையும் போன்று அன்னத்தையும் உன் கையால் கொடுத்திருந்தால் அதன் சுவையை முழுவதுமாக அடைந்திருப்பாய் என்றார்.

ஆதலால் இப்பூலோகத்தில் வாழும் நாட்களில் நம்மால் முடிந்த அன்னதானத்தை இயலாதவர்களுக்கு நம் கையால் கொடுத்தால் இந்த பூமியிலேயே ஒரு சொர்க்கத்தை காணலாம்.

இவண்
ராஜா. 

Attachment.png

திங்கள், 2 ஏப்ரல், 2018

தமிழனின் குமுறல்

மீத்தேன்,நியூட்றீனோ,
ஸ்டெர்லைட்,காவிரி,கச்சதீவு , ஆந்திரா சிறப்பு அந்தஸ்து, பெட்றோல்&டீசல் விலையை தனியாரிடம் ஓப்படைத்தது என அனைத்து பிரச்சனைகளுக்கும் திமுகவும்,காங்கிரஸ் தான் காரணம்.

சரி அவர்கள் செய்தது தவறு என்று வைத்து கொள்வோம். 2011ல் திமுக ஆட்சியை இழந்தது, அதன் பிறகு இன்று வரை ஆள்வது  தமிழகத்தை ஆள்வது அதிமுக.

அவர்களின் (திமுக) தவறை திருத்த வேண்டியது தான் ஆளும் கட்சியின் கடமையே தவிர, அவர்களையே குறை கூறுவது ஆளும் தரப்பின் கையாளகாத தனத்தை காட்டுகிறது.
சரி அம்மையாரின் பழக்கத்தை அவரின் அடி,பொடிகள் பின்பற்றுவது ஆச்சர்யபடுவதற்கில்லை.

மெத்த படித்த மேதாவிகள் உள்ள BJP யும், பதவிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் திமுக வையும், காங்கிரசையும் குறை சொல்வது தான் வேடிக்கையாக உள்ளது.

என்ன சொல்லி வாக்கு கேட்டீர்கள் ? முந்தைய ஆட்சியாளர்களின் தவறை திருத்துவோம் என்று தான். இன்று வந்து இது அவர்கள் செய்தது , எங்களால் எதுவும் செய்ய முடியாது என்றால் அவர்களே ஆளட்டுமே !!! நீங்கள் எதற்கு ? அந்த 56 inch மார்பு எதற்கு ?

அறிவு ஜீவி ஆடிட்டர் குருமூர்த்தி எம் மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் அவரின் ஆட்சியை பற்றி கூறிய வார்த்தைகளை மத்திய மோடி சர்காருக்கு வழிமொழிகிறேன்.

#ModiSarkar

செவ்வாய், 20 மார்ச், 2018

நான் சந்தித்த ரத யாத்திரை

நான் சந்தித்த ரத யாத்திரை

கேரளாவில் ஐயப்பனை தரிசித்து விட்டு  அங்கிருந்து ஊருக்கு வருகையில் ராணி,கோணி ஊர்கள் வழியாக தமிழகம் வருவது வழக்கம்.

வழக்கமாக  December 26ல் சபரிமலையில் திரும்புவது வழக்கம்; இந்த முறை 25ம் தேதியே திரும்பிகொண்டிருந்தோம்.

அன்று ஏசு நாதரின் பிறந்த நாள் என்பதால் நாங்கள் வரும் வழியில் யாத்திரை நடக்கும் போலும்; கார்களில் இரு பக்கமும் சாலையை அடைத்து 1கிலோ மீட்டர் தொலைவிற்கு கார்கள் ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.

சரி இந்த வழியாக செல்ல முடியாது என்பதை அறிந்து மாற்று வழிக்கு தயாராகி ; எங்கள் காரை மாற்று திசையில் திருப்ப முயன்ற போது நன்கு படித்த , நாகரீகமான இளைஞன் இந்த வழியாக செல்ல கூடாது என்று நிறுத்தினார்.நாம் பேசுவதை காது கொடுத்து கூட கேட்க மனமில்லை; சரி பேசி பயனில்லை என்பதை உணர்ந்தோம்.

எங்களால் நேராக செல்ல முடியாது என்பதும் அவருக்கு தெரியும், சரி மாற்று பாதை வழியாக திரும்பலாம் என்று நினைத்தால் இந்த ஊர்வலம் கடக்கும் வரை நீங்கள் திரும்ப கூடாது என்ற அதிகார குரல்;

சரி காத்திருந்து பொறுமையாக திரும்பினோம்; இது போன்ற ம(ன) வெறி பிடித்தவர்கள் அனைத்து இடங்களிலும் உள்ளனர், இவர்களை கடந்து செல்வது தான் நம்
யாத்திரையின் வெற்றி எங்கள் ரதத்தை செலுத்தினோம்.

பயணிப்போம்

வெள்ளி, 16 மார்ச், 2018

சபாஷ் சந்திரபாபு சார் 👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻

தன் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து என்று கூறி மாநிலத்தை பிரித்த பின்பு வாக்குறுதியை நிறைவேற்றாதது மத்திய அரசின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது ?

விளைவு

நடுவன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமே இல்லாமல் ஐந்தாண்டு நடத்தியது என்ற வரலாற்று சாதனையை முறியடித்த பெருமை
திரு. ஜெகனையும் , திரு. நாயுடுவை யும் சாரும்.

மோடி அரசாங்கத்திற்கு எதிரான இந்த தீர்மானத்தால் ஆட்சி கவிழாது என்பது அனைவரும் அறிந்ததே.

பிறகு ஏன் இந்த தீர்மானம் ?

தன் மாநில மக்களின் ஏமாற்றத்தையும் , எதிர்ப்பையும் ஜனநாயக ரீதியில் வெளிகொணர்ந்துள்ளார்கள் இவ்விருவர்கள்.

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி தமிழகமும் நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்ற இந்நேரத்தை தமிழகமும் சரியாக பயன்படுத்தி கொண்டு அரசுக்கு எதிராக தீர்மானத்தில் வாக்களித்து தன் எதிர்ப்பை காட்டலாம்.தமிழக மக்களின் எதிர்பாகவும் அமைந்திருக்கும்.

மாறாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளிக்கும் என பேசிய  கே.சி.பழனிசாமி யின் நீக்கம்
எதை காட்டுகிறது ?

அடிமைதனத்தின் உச்சம் என்பதை தவிர வேறு என்ன கூற ?

சபாஷ் நாயுடு , ஜெகன்
உங்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
உங்களால் ஜன நாயகம் தழைக்கட்டும்.

நன்றியுடன்
தமிழன் ( ராஜா.க )

வியாழன், 8 பிப்ரவரி, 2018

கரம் கொடுக்குமா அரசு ??

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள கோயில்களில் சில விரும்பதகாத , வருத்தபட கூடிய சம்பவங்கள் நடந்து வருகின்றது..

1. திருச்செந்தூர் முருகன் கோயிலின் கிரிபிரகார சுவர் இடிந்து விழுந்தது.
2.  மதுரை மீனாட்சி அம்மன்  கோயில் பிரகாரத்தில் தீபிடித்தது.
3. திருவாலங்காடு வண்டார்குழலி அம்மன் ஆலயத்தில் விருட்சம் (ஆலமரம்) தீபிடித்து எரிந்தது.

இந்த சம்பவங்கள் விபத்தா இல்லை  இயற்கை இவ்வுலகத்திற்கு கொடுக்கும் சமிக்ஞையா ?

எதுவாகினும் பாதிக்க பட்ட மக்களின்  எதிர்பார்ப்பு
அரசின் உதவிக்கரம் மட்டுமே.

கரம் கொடுக்குமா கழக அரசு ??
க.ராஜா