ஞாயிறு, 7 மார்ச், 2021

Happy Women's Day

 நான்கு சுவரினுள் AC அறையில் அமர்ந்து ஆண்களுக்கு நாங்கள் சமமானவர்கள் ஈடு இனையற்றவர்கள் என்று வெட்டி பெண்ணியம்  பேசாமல் , 

பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் சென்னை போன்ற நகரங்களில் எந்த முகவரியும் இன்றி தான் படித்த படிபுக்கு ஏற்ற / ஏற்காத வேலையை தன் குடும்ப 

சூழ்நிலை கருதி ஏற்று, பேருந்துகளிலும்,இரயில்களிலும் படும் சிரமங்களை உள்ளுக்குள்ளேயே புழுங்கி கொண்டு,

அலுவலகத்தில் உள்ள அரசியல்களை அனுதினம் அனுசரித்து,

கவிதை,கற்பனை,காதல் என இக்காலத்தில் பூக்கும் பூக்களை சூடாமல்  உதட்டில் மட்டும் புன்னகை சூட்டிக்கொண்டு,  

நாளை எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை விதைத்து நடமாடும் பெண்களே,

நான் கண்ட வேலு நாச்சியார்களே அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻

Happy Women's Day #HWD

இவன் 

ராஜா.க

வியாழன், 18 பிப்ரவரி, 2021

என்ன தவம் செய்தேனோ

 மோடி ஜீ மைண்ட் வாய்ஸ் :  " என்ன தவம் செய்தெனே " இது போன்ற மக்கள் கிடைக்க !!!

என்ன செய்தாலும் ஏற்று கொள்கிறார்கள். 

ரூபாய் நோட்டு செல்லாது என்று சொன்னாலும் கால் கடக்க நின்று புதிய நோட்டுகளை பெறுகின்றனர்.

GST வரி என்று கூறினால் ஏற்று கொள்கிறார்கள்,

ஊரடங்கு என்று கூறினால் விட்டுக்குள்ளேயே இருந்து ஒத்துழைப்பு தருகிறீர்கள்,நடந்தே பல ஊருக்கு சென்றிர்கள். 

கைகளை தட்டுங்கள், விளக்குகளை ஏற்றுங்கள் என்று கூறினாலும் தவறாமல் செய்தீர்கள்.

பெட்ரோல்,டீசல், கேஸ் விலை யை தினம் தோறும் ஏற்றினாலும் ஏற்று கொள்கிறீர்கள்.

வங்கிகளில் சேமிப்பு கணக்கிறான வட்டியை குறைத்தாலும் ஏற்று கொள்கிறீர்கள்.எல்லா பொருட்களுக்கான  விலை வாசி உயர்வுயையும் ஏற்று கொள்கிறீர்கள். 

"என்ன தவம் செய்தெனோ"

 இது போன்ற குடிமக்கள் கிடைக்க.

#India #ModiSarkar #PetrolDieselPriceHike #GST #COVID19 #Demontisation

திங்கள், 8 பிப்ரவரி, 2021

நான் ரசித்த முத்துக்கள்

 ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையில் பயணத்தின் பங்கு அதிகம். அப் பயணத்தில் திரைப்பட பாடல்களின் பங்கு அதிகம். சிலர் இசையை ரசிப்பார்கள் சிலர் பாடல் வரிகளை ரசிப்பர். நம் மன நிலையை பொறுத்து இரண்டும் வேறுபடும்.

விவரம் தெரிந்த நாள் முதல் கவிஞர் வைரமுத்து win வரிகளை கேட்டு ரசிக்கும் வைரமுத்துக்களில் அடியேனும் ஒருவன். அப்படி ரசித்த பாடல்கள் பல அதில் சில ஒற்றுமையை  உணர்ந்துள்ளேன்.அது பற்றிய ஒரு பதிவு. 

வைரமுத்து(க்களி)வின் பாடல்களில் இருக்கும்  உவமைகள்,வேறு ஒரு பாடலில் மீண்டும் இடம்பெறும்.

ஆனால் வார்த்தைகள் மட்டும் சிறுது  வேறுபட்டிருக்கும். 

அதில் சில பாடல் வரிகள்.  

பாடல் : திருமண மலர்கள் தருவயா(பூவெல்லாம் உன் வாசம்) 

வரிகள் : ஞாயிறுக்கும்,திங்களுக்கும் தூரமில்லை,

பாடல் : போராளே பொண்ணு தாய்(கருத்தம்மா) 

வரிகள் : அது சரி வியாழனும்,வெள்ளியும் இருப்பது தூரமில்லை..

பாடல் : கொஞ்சம் நிலவு(திருடா திருடா)

வரிகள் : கொஞ்சம் கடவுள்,

கொஞ்சம் மிருகம்

பாடல் : கடவுள் பாதி (ஆளவந்தான்)

வரிகள் : கடவுள் பாதி,

மிருகம் பாதி..

பாடல் : என்னை பந்தாட பிறந்தவளே

வரிகள் : மண்ணில் உள்ள வளம் என்ன என்ன வென்று செயற்கை கோல் அறியும் பெண்ணே.

உன்னில் உள்ள வளம் என்ன வென்பெதுன்று உள்ளம் கை அறியும் பெண்ணே.

பாடல் : இளமை விடுகதை (வரலாறு) 

மண்ணில் இருக்கும் புதயலை செயற்கை கோல் அறியும்,

பெண்ணில் இருக்கும் புதயலை இயற்கை தான் அறியும்..

வைரமுத்துகளுடன்

புதன், 20 ஜனவரி, 2021

வாங்க சாப்பிடலாம்

 வாங்க சாப்பிடலாம்

இம்முறை சென்றது “ஆந்திரா மெஸ்” இந்த பெயரை கேட்டாலே சாப்பாடு பிரியர்களின் கண்களில் ஒரு மகிழ்ச்சி தெரியும். குறிப்பாக Bachelorகளின் ஆபத்பாந்தவன். நாம் போதும் போதும் என்று கூறும் அளவுக்கு சாதம் பரிமாறுவது இதன் ஸ்பெஷல்.

 சென்னையில் பல இடங்களில் இதன் பெயர் பலகையை பார்த்திருப்போம் இந்த மெஸ் இருப்பது சென்னை Parries (பாரிமுனை,ப்ராட்வே). 

இங்கு என்ன ஸ்பெஷல் என்று பார்ப்போம். 

சைவ ஹோட்டல்கள் பல இருந்தும்  சங்கீதா,சரவணபவன்கள்,வஸந்த பவன் கள் தனித்து தெரிவது போல் பல ஆந்திரா மெஸ் இருந்தும் இதுவும் தனித்து தெரிகிறது( “Pure & Perfect authentic Andhra mess “ )அதன் சுவையே அதனை உணர்த்துகிறது.

சாப்பாடு டோக்கனை வாங்கி கொண்டால் நாம் எங்கு உட்கார வேண்டும் என்பதை ஒருவர் கூறுகிறார் சிறிது நேரம் காத்திருப்புக்கு பிறகு ஒரு அறை முழுவதும் அனைவரும் உட்காரவைக்க படுகிறார்கள். 

முதலில் வாழை இலை வைக்கபடுகிறது முறையே ஒரு பொறியல்,கூட்டு,கோங்ரா சட்னி,சாதம்,பருப்பு பொடி,நெய் என வரிசையான அணிவகுப்புகள். 

சாதத்தையும்,சட்னியையும் 

சேர்த்து கொள்ளுங்கள் என உத்தரவு பிறப்பிக்கபடுகிறது அட சாப்பிட சொல்லிகொடுப்பாங்க போலயே என்கிறது “மைண்ட்வாய்ஸ்”. சாதத்துடன்,பொடி,நெய்யுடன் அந்த கோங்ரா சட்னி சேர்கையில் இதன் கூட்டணி முதல் சுற்றில் அசாத்திய வெற்றி பெறுகிறது.

பின் நெய்யின் கூட்டோடு சாம்பாருடன் பொறியல் சேர்த்து இரண்டாவது சுற்றும்,பின் கார கொழம்பு,மோர் குழம்பு என நான்காம் சுற்றை முடித்தால் கிரிக்கெட்டில் நான்கு ரன்கள் எடுத்த திருப்தியுடன் வரலாம். இல்லை,இல்லை எனக்கு சிக்ஸர் அடிக்கும் திறமை உண்டு என்றால் இரசம்,மற்றும் தயிருடன் களத்தில் நின்று ஆடி விட்டு வரலாம்.

இங்குள்ள உள்ள பிரச்சனை என்னவென்றால் பரிமாறுபவர்களின் சிறுது சத்தம் அதிகமாக இருக்கும் மேலும் மதிய நேரம் 1.30 to  3.00 மணி கூட்டம் அதிகம் வருமென்பதால் கொஞ்சம் வேகமாக சாப்பிட வேண்டும். 

சாப்பாடு பிரியர்களின் பேட்டை 

இந்த ஆந்திர கோட்டை 

சுவையுடன் 

ராஜா.க

#Andhramess #Meals #Andhrameals 

வியாழன், 14 ஜனவரி, 2021

ராஜாஜீயும், சுஜாதவும்

 நண்பன் ஓருவன் எழுத்தாளர் உங்கள் சுஜாதாவிற்கும் இனப்பற்று உள்ளது என்று கூறினேன்..

எப்படி கூறுகிறாய் என கேட்டதற்கு ?

முதல்வன் திரைப்படத்தில் ஓரு காட்சியில் அர்ஜூன் தந்தை உனக்கு ராஜாஜி ஜாதகம் என கூறுவார். எத்தனையோ தலைவர்கள் இருக்கையில் ஏன் இராஜாஜி பெயரை உபயோகபடுத்தினார் என்று கேட்டான்?

அந்த காட்சியில் ஏன் ராஜாஜி பெயரை உபயோகபடுத்தினார் சுஜாதா? இதற்கு சற்று சிந்தித்தால் விடை கிடைக்கும்.. உன் கூற்று படி அண்ணா,காமராஜர் போன்றொர்கள் மக்களை (தேர்தலை)சந்திந்து முதல்வர் ஆனவர்கள்.. ராஜாஜி தேர்தலை சந்திக்காமல் முதல்வர் ஆனவர்.. 

இத்திரைப்படத்தில் அர்ஜீன் கதாபாத்திரமும் முதன் முதலில் மக்களை சந்திக்காமலே முதல்வர் ஆவார் ஆதலால் ராஜாஜி ஜாதகம் என்று எழுதியிருப்பார்.. 

சாதி வெறி ஊறிபோய் விட்டால் யார் என்ன சொன்னாலும் தவறாக தான் தெரியும் என்றேன்..

மேன்மக்கள் மேன்மக்களே 

சுஜாதா always great 👍🏻

#Sujatha #Mudhalvan #Shankar

செவ்வாய், 12 ஜனவரி, 2021

பொங்கலும் வாழ்த்துகளும்

 என் சிறு வயதில் தீபாவளி என்றவுடன் சட்டென்று நம் மனதில் மத்தாப்பாய் மலர்வது பட்டாசு தான். இன்றைய நாள் வரை இதன் மேல் உள்ள ஈர்ப்பு சிறிது குறைந்திருக்குமே தவிர முழுவதுமாக இல்லை. 

அது போல் பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருவது பல வண்ணங்கள் கொண்ட  

“பொங்கல் வாழ்த்து அட்டைகள்” பொங்கலுக்கு இரு வாரங்களுக்கு முன் இதன் சீசன் தொடங்கி விடும்.  

எங்கள் ஊரில் உள்ள 

அன்பு ஸ்டோர்,வள்ளுவன் ஸ்டோர்,லதா ஸ்டோர் கடைகள் இதற்கு பெயர் பெற்றது. கடைக்கு வெளியே பெரிய பலகைகள் அமைத்து அதில் அனைத்து விதமான வாழ்த்து அட்டைகளை பரப்பியிருப்பார்கள். 

MGR தொடங்கி ரஜினி, கமல், என அனைத்து நட்சந்திரங்களும் நம் பார்வைக்குள் அடங்கியிருப்பார்கள்.

50 பைசா முதல் ஐந்து ரூபாய் வரை வித வித மான அட்டைகள். 

சிறு வயதில் அனைவர் போல ரஜினி வெறியன் நான் . எனக்கு பிடித்த ரஜினி அட்டைகள் தான் பெரும்பாலும்

நான் என் நண்பர்களுக்கு கொடுப்பது. பள்ளி ஆசிரியர்களுக்கு பொங்கல் பானையுடன் கூடிய அட்டைகள் நடிப்பை அப்பொழுதே தொடங்கி ஆயிற்று. 

நமக்கு மிகவும் பிடித்த,எதிர்பார்த்த நபர்களிடமிருந்து வரும் அட்டைகள் தரும் மகிழ்ச்சியை எத்தனை increment கடிதத்தாலும் தர இயலாது.

நண்பர்களுக்கிடையே யாருக்கு அதிகமாக அட்டைகள் வந்துள்ளது என்ற சிறு போட்டியும் இருக்கும்.

அன்று மனமும்,நேரமும் நிறையவே இருந்தது பணம் கம்மியாக இருந்தது. இன்று பணம் இருக்கிறது மனமும்,நேரமும் இல்லை. 

சுஜாதா கூறியதை போல் வாழ்க்கையிலும் TV remote  இல் உள்ளது போல் rewind பட்டன் இருந்தால் எவ்வளவு அழகாக இனிக்கும். 

நண்பர்கள் அனைவருக்கும் இனிப்பான பொங்கல் வாழ்த்துகள். 

இனிப்புடன் 

திங்கள், 11 ஜனவரி, 2021

தூள் திருநெல்வேலி

 ஜனவரி 10 

இது போன்றதொரு ஒரு ஞாயிறு வருடம் 2003 பொங்கலுக்கு முந்தின வாரம்.

நீண்ட நாளாக செய்ய வேண்டிய கடமை அதை ஆசை,  இலட்சியம் என்று கூட சொல்லலாம். அன்று   திருநெல்வேலி சீமை தான் எனக்கு நகரம். 

அன்றைய திருநெல்வேலி டவுனில் ஒரு மணி நேரத்திற்கு இன்டர்நெட்  browsing க்கு 50₹. நண்பர்கள் மற்றும் Browsing centre அண்ணன் துணையோடு rediff mail account துவங்கினேன். Gmail இல்லாத காலம்.

ஏதோ சாதித்தது போன்ற உணர்வு. படிப்பிற்கான நேரம் முடிந்தது. இப்போது சினிமா விற்கான நேரம். 

அன்றைய பொங்கல்  ரேசில் கமலின் அன்பே சிவம்,

விஜயின் வசீகரா, 

விக்ரமின் தூள். "தில்" லின் தில்லான வெற்றிக்கு பிறகு இணைந்த விக்ரம்-தரணி கூட்டணி. பலத்த எதிர்பார்ப்பு. ஏற்கனவே பாடல்கள் அனைத்தும் வித்யாசகர் இசையில் ஹிட். 

தூள் மட்டும் பொங்கல் க்கு ஒரு வாரத்துக்கு முன்னே ரிலீஸ் செய்துவிட்டனர். தூள் திரைப்படம்  பூர்ணாகலா வில் திரையிட்டிருந்தனர். 

டவுனில் இருந்து ஜங்க்ஷன் வந்தாயிற்று. 

தியேட்டரில் கட்டுக்கடங்காத கூட்டம் , அடித்து பிடித்து டிக்கெட்டை வாங்கி நன்பர்களுடன் ஆடி,பாடி 

குதூகளித்த பொழுது. 

அடுத்த இரண்டு மாதங்களில் பட்டய படிப்பின் (Diploma) கடைசி செமஸ்டர் , நண்பர்களில் பலருக்கு அது தான் படிப்பின் கடைசி காலகட்டம் ஆதலால் மிகுந்த மகிழ்ச்சியுடன் கல்லூரி யின் இறுதி நாட்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தோம்.

#Rediffmail #Dhool #Collegedays 

நாட்கள் தொடரும்