திங்கள், 11 மே, 2020

கோவிந்தா கோவிந்தா

தனது வங்கியில் சேமிப்பு கணக்கு
வைத்துள்ள ஒருவருக்கு மாதாமாதம் வட்டி கொடுக்க பணம் இல்லாத காரணத்தால், பணத்துக்கு நிகரான தங்கமாக வரவு வைத்துள்ளது அந்த வங்கி.

வங்கியின் பெயர் நினைவில்லை,
அந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தவர் திருப்பதி தேவஸ்தானம்.

இன்று அவர்களால் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலவில்லை என்ற செய்தி படிக்கையில், வருத்தம் கலந்த சிரிப்புடன்
இந்த பாட்டு
தான் நினைவுக்கு
வருகிறது.

"திருப்பதி, ஏழுமலை,வெங்கடேசா என்ன இது ?"
"இந்த காசு எல்லாம் வைச்சு என்ன பண்ணறது "

கொரானா என்ற கொடூரனை கூட தங்கள் தேவைக்கு உபயோக படித்தி கொள்கிறார்கள் நம் கலியுக சக்கரவர்த்திகள்.

புதன், 6 மே, 2020

மகிழ்மதியும் அஸ்தினாபுரமும்...

மகிழ்மதியும் அஸ்தினாபுரமும்...

அஸ்தினபுர நகரத்தின் கட்டமைப்பு, மன்னர்கள்,நாட்டின் இராணுவ படை,மக்கள் இவைகளை படித்து இருக்கிறேன். அதை  கண்ணுக்கு விருந்தாக்கிய "கலை இயக்குனர்" சாபு சரீல் க்கு முதல் சபாஷ்.

கதை: பங்காளி சண்டை அரியனையில் அமர்வதற்கு, (மகாபாரதம்)தான்.
அந்த ஒரு வரி கதையை தனக்குரிய தனித்துவத்துடன்; திரைக்கதையை வேகமாகவும்,விவேகமாகவும் காட்சிகளை அமைத்து; ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தன் திரைக்கதையால் வலிமை சேர்த்து,  ரசிகனை இறுதி வரை இருக்கையில் அமர வைத்த இயக்குனர்.
"இராஜ மெளலி" யே மகிழ்மதியின் சக்கரவர்த்தி.

கதா நாயகனின் வெற்றி தன்னை விட பலமுள்ள, அழுத்தமான தனக்கு நேரெதிரான எண்ணம் கொண்ட (வில்லனை) எதிரியை வெற்றி கொள்வதே; அப்படி ஒரு வாய்ப்பை நாயகனுக்கு நல்கிய
 "பல்வாள் தேவன்" ராணா வும் நாயகனே.(துரியோதனின் குணாதிசியம்).

அரசன் என்பவன் இப்படி தான் இருந்திருப்பான் என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டாக தன்னை உடலளிவிலும்,மனதளவிலும் வடிவமைத்து  கொண்ட கதையின் நாயகன் பிரபாஸ். (அர்ச்சுனனை நினைவு கூறுகிறான்)

 "ராஜ மாதா"சிவகாமி தேவி,
"இளவரசி" தேவைசேனை
நெடு நாட்களுக்கு பிறகு சினிமாவில்  ஆண்களுக்கு நிகராக அல்ல,
அதற்கும் மேலான கதாபாத்திரத்தில்
"இரட்டை குழல்" துப்பாக்கியாக
வெடிக்கின்றனர்.

கட்டப்பா கதாபாத்திரம் பிதாமகர் பீஷ்மரைய நினைவுபடுத்துகிறது. அரசின் அடிமை. மனிதர் கலக்கியிருக்கிறார் தன் வழக்கமான நக்கல் பேச்சில்.

வீரம் கலந்த விவேகமான போர் கள காட்சிகள்,கார்க்கியின் வசனம்,கீரவாணியின் பிண்ணனி இசை படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது.

பாடல்கள் மனதில் நிற்கவில்லை
தமிழ் கவிஞர்களுக்கும், தமிழ் வரிகளுக்கும் பஞ்சமா என்ன பாடல்களுக்கு ??கட்டப்பா கதாபாத்திரத்தை "நாய்" என்ற வார்த்தையை (பல முறை )தவிர்த்திருக்கலாம்.

திரைப்படம் முடிந்து எழுந்து செல்கையில் ரசிகனையும்
 "ஜெய் மகிழ்மதி" என கோஷம் போட வைத்துவிட்டான்.

இந்த "பாகுபலி ..."

அட்சய திருதியயை

அட்சய திருதியயை

சித்திரையின் வளர்பிறை இரண்டாம் நாள்
(வளர் துவிதையை).

"அட்சய" உணவு;
இந்நாளில் மாதவியின் மகள் மணிமேகலை உணவில்லா ஏழைகளுக்கு உணவு வழங்கினாள்.

கால வாக்கில் அதை அப்படியே மாற்றி தங்கம் வாங்குங்கள் எங்களிடம்
"செய்கூலி இல்லை,சேதாராம் இல்லை .." ஏனைன்றால் இது தங்கமே இல்லை !!!என்ற அளவிற்கு விளம்பர படுத்தி வரலாற்றேயே மாற்றி விட்டனர் நம் வியாபார காந்தங்கள்(Business Magnates).

ஆதலால் அட்சய திருதியை நாளான இன்று இயலாதவர்களுக்கு உணவு கொடுத்து அவர்களின் மனமும், வயிறும் நிரம்பும் படி செய்வோம்.

#அட்சயதிருதியை

இவண்
ராஜா.க

செவ்வாய், 5 மே, 2020

வியட்நாம் வீடு

பொதுவாக பழைய (MGR,Sivaji)
Black & white காலத்து திரை படங்களை விருப்பப்பட்டு பார்த்ததில்லை இயக்குனர் திரு.பாலச்சந்தர் படங்கள் மட்டும் விதிவிலக்கு.

“வியட்நாம்காலனி” காமெடி என்று YouTube தேடுகையில் “வியட்நாம்வீடு” என்று படம் கிடைத்தது; தலைப்பு கொஞ்சம் வித்யாசமாக உள்ளதே என முடிவெடுத்த்து சரி கொஞ்ச நேரம் பார்ப்போம் என அவ்வீட்டிற்குள் சென்றேன்.

கதையின் நாயகன் கடுமையாக உழைத்து புதிய வீட்டிற்கு கிரஹ பிரவேசத்துடன் நம்மையும் அவன் வீட்டிற்குள் அழைத்து செல்கிறான். படம் ஆரம்பமாகிறது.

வீட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று விவாதம் நடக்கிறது,.
ஒவ்வொருவரும் ஒரு பெயர் சொல்ல சிறிய போரே நடக்கிறது. எப்போதும் சண்டையும், சச்சரவுமாக இருப்பதால் “வியட்நாம்” வீடு என்று வைத்து விடுகிறான் வீட்டின் தலைவன் பத்மநாபன் sorry “prestige”பத்மநாபன்.

சிறு வயதிலேயே தந்தையை இழந்து, தாய் வீட்டு வேலை செய்து இருக்கும் வீட்டை விற்று அவனை வளர்க்கிறாள், ஒரு கட்டத்தில் அவளும் இல்லை அத்தையின் உதவியுடன் வாழ்க்கையில் கரை சேர்ந்து விற்ற வீட்டயே  வாங்குகிறான். கைமாறாக அத்தையின் மகளையே மணக்கிறான்.
(அந்த காலத்தில மாப்பிள்ளைக்கு அவ்வளவு டிமாண்ட் போல).

ஒழுக்கம்,நேரம் தவறாமை, அலுவலகத்திற்கு போன் செய்கிறாள் மனைவி, இது வீடு என்று நினைத்தாயா இது office no personal என கடித்து prestige பத்மநாபனாக வாழ்கிறார் சிவாஜி. ஒரு இடத்தில் கூட மிகையான நடிப்பு என்று கூற முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பு.

இந்த சத்யவானுக்கு உற்ற துணையாக சாவித்ரியாகவே வாழ்கிறாள் பத்மினி. மடிசார் புடவையும்,கண்களை உருட்டுவதும்,சிரிப்பு,அழுகை என கொள்ளைஅழகு.

மனைவியை கண்டு பம்மும் ஒரு மகன், படித்து கொண்டே (பெயிலாகி ,பெயிலாகி) இருக்கும் இன்னொரு மகன், செல்ல மகள் என நாயகனுக்கு மூன்று பிள்ளைகள்.

மனைவிக்கு பெட்டிலேயே காபி கொடுப்பது அவள் சொல்லிற்கு தலையாட்டுவது என இக்கால கணவனாகவே வாழ்கிறார்(ஶ்ரீகாந்த்).

காலேஜ் கட் அடித்தல்,வீட்டிலேயே திருட்டு, வட்டி காரனிடம் கடன்,
பொய் என மாணவனாக பின்னுகிறார் இன்னொரு மகன் (நாகேஷ்).

கல்லூரி காலத்தில் காதலில் விழும் செல்ல மகள் என மூவரும் முக்கோனம்.

தன் வேலையிலிருந்து வயது மூப்பின் காரணமாக ரிட்டையர்டு ஆகிறார் பத்மாநாபன். தனிமை வாட்டுகிறது.

லஞ்சம் வாங்கி மாட்டி கொள்கிறார் ஶ்ரீகாந்த். மாமனார்( நீதிபதி )உதவியுடன் தப்பித்து விடுகிறார்.  வீட்டில் prestige தான் போய்டுத்து என நினைத்தேன், Justice உம் போய்டுத்து போலயே என Sharp வசனங்கள்.

இவை அனைத்தும் எப்படி சீறானது  இறுதியில் என்ன நடந்தது ? என்பதை
மிக அழகாகவும்,ரசிக்கம்படியும் கூறி பார்க்கும் நம் இதயத்தையும் சற்று பலவீனப்படுத்திவிட்டார்
Prestige பத்பநாபன்.

ரசிகன்

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

புரிதல்

புரிதல்  !!!

இன்று நடக்கும் பல குழப்பங்களுக்கு இது இல்லாததது தான் முதல் காரணமே. அந்த  புரிதல் இருந்து இருந்தால் நடக்கும் சம்பவங்கள் சுவாரசியமாகவும், என்றும் மனதில் அழியா காட்சியாக நினைவில் இருக்கும்.

என் கல்லூரி காலத்தில் நடந்த இரு சம்பவங்கள் புரிதலுக்கு உண்டான சான்றுகள்..

செல்வா,டேவிட் இவர்கள் இருவரும் என் நெருங்கிய நண்பர்கள் கல்லூரி காலம் முதல் இன்று வரை.
யார் ?எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கல்லூரி இறுதி ஆண்டை கல்லூரி விடுதி விடுத்து வெளியே தங்க முடிவெடுத்தோம்.

சிவகாசியில் உள்ள சசி நகரில் ஒரு அழகான வீடு. எங்களுடன் ECE மாணவர்கள் 7 நபர்கள் தங்கும் பெரிய வீடு. கூட்டினுள் கிளிகளாக இருந்தவர்களுக்கு இந்த விடுதலை ரெக்கை கட்டி பறக்கும் பறவைகளின் உற்சாகத்தை தந்தது.

நாங்கள் இருக்கும் வீட்டை சுற்றி compound சுவர் கட்டப்பட்டிருக்கும் அதில் அமர்ந்து வெட்டி கதை பேசி மகிழ்ந்த தருணம்.

ஒரு முறை அந்த குட்டி சுவரில் உட்காந்திருக்க, ECE நண்பர்கள் ஏதோ serious ஆக பேசிக்கொண்டிருந்தார்கள். நான் ஏதோ நகைச்சுவையாக சொல்ல செல்வாவும் , டேவிட் டும் சிரித்தார்காள். அதில் கடுப்பான நண்பன் ஒருவன் நாங்க இங்க serious பேசறோம் என முகத்தை சுறுக்க,

நான் அந்த சுவரினுள் இருந்து கீழே குதித்த அதே தருணத்தில் மேலும் நான்கு கால்கள் தரையில் பதிந்தது. மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.அடுத்த இரண்டு மணி நேரத்தில் முகத்தை சுறுக்கிய நண்பன் அளவளாவியது ஒரு புறம்.

எங்கள் மூவருக்கும் உண்டான புரிதல் அன்று வெளிப்பட்ட தருணம். நான் அந்த இடத்தை விட்டு கிளம்ப தயாரானது ஒரு புறம் நான் கூறமாலே அவர்கள் இருவரும் என்னுடன் வந்தது எங்களுக்குள் இருந்த புரிதல்.

இரண்டாவது நிகழ்வு.

8வது செமஸ்டர் பெரும்பாலும் வகுப்புகளே இருக்காது. இருந்தாலும் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவர்களின் வருகை ஆதலால்
A & B section ஒன்றாக அமர்ந்திருந்தோம்.
A section ஆசிரியர் வகுப்பை எடுத்தார் , எங்களை பார்த்தவுடன் இது  A sectionக்கு உண்டான வகுப்பு மற்றவர்கள் விருப்பம் இருந்தால் இருக்கலாம் என்றார்.

நாங்கள் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை, சிறிது நேரம் கழித்து அதே வசனம் பேராசிரியிடமிருந்து. அலட்டிகொள்ளவில்லை.
மூன்றாவது முறையும் கூற சற்றும் தாமதிக்காமல் செல்வா எழுந்து விட்டான்,அவன் திரும்பி பார்பதற்குள் நானும், டேவிட்டும் எழ மூவரும் எதிர்கட்சியினை போல வெளி நடப்பு செய்தோம்.

இந்த புரிதல் ஒருவருக்கு ஒருவர் இருக்குமேயானால் பல பிரச்ச்னைகளை தவிர்த்து இன்புற்றிருக்கலாம்.

புரிதலுடன்
ராஜா . க

சனி, 11 ஏப்ரல், 2020

IPl ம் மசாலாவும்

சினிமாவில மட்டுமல்ல எல்லாவற்றிலும்   மசாலா கேட்கறாங்க நம் மக்கள் என்று கூறுவார் நம்மவர் கமல்
வசூல் ராஜா MBBS திரைப்படத்தில்.

அது போல் IPL கிரிக்கெட்டிலும் cheers girls, dance,வீரர்களுகிடையே சண்டை,அழுகாட்சி என மசாலாக்களை தூவி திறம்படி வெற்றிகரமாக நடத்தி வருகிறது IPL நிர்வாகம்.

இது மட்டும் போதாது என்று நினைத்து உள்ளது போலும், மேலும் சில பல சுவாரசிய நிகழ்ச்சிகளை அறங்கேற்றுகிறது. எந்த ஒரு விளையாட்டிலும் சில rules and regulations இருக்கும் அதையும் மீறுகையில் தான் அது விவாத பொருளாகிறது.

நமக்கு பிடித்த அணி, நமக்கு பிடித்த ஆட்டகாரர் என்பதால் அவர் செய்தது சரி என்றாகிவிடாது.

அவுட் ஆகி சென்றவர் மீண்டும் மைதானத்துக்குள் வருவதே தவறு. அதிலும் ஒரு கேப்டன் உள்ளே வந்து அம்பையரிடம் வாக்குவாதம் செய்வது தவறான எடுத்துகாட்டு .

பிறகு களத்தில் எதற்கு இரண்டு நடுவர்கள் ? 3ம் நடுவர் எதற்கு ?  வெறும் 50% அபராதத்துடன் அதிலிருந்து வெளியே வரவேண்டுமெனில், அந்த கேப்டன் தோனியாக இருக்க வேண்டும். மேட்ச் இந்தியாவில் தான் நடக்க வேண்டும்.

கிரிக்கெட்டில் பல நல்ல நுட்பங்களை சக வீரர்களுக்கு கற்று கொடுக்கும் வீரர் இது போன்றவைகளை தவிர்த்துருக்கலாம். நாளை இது போல் மற்ற அணி வீரர்களும் இதை பின் தொடர்ந்தால் gentlemen game சிறுபிள்ளை விளையாட்டாகி விடும்.

விசில் போடுவோம்

ஞாயிறு, 29 மார்ச், 2020

கெ(கே)ட்ட வார்த்தைகள்

ஒரு பிரபலமான ஜவுளி கடையில் நடந்த சம்பவம்.
 Lift உதவியுடன் 5வது மாடிக்கு செல்கையில் ஒரு அழகான பெண் குழந்தை அதற்குறிய பாணியில் அதன் அன்னையை இம்சை செய்த்தது.

கடுப்பான அந்த அன்னை அவளுக்குரிய பாஷையில் “ஏய் சாவ அடிச்சுடுவேன்” என்று தன் முகத்தை அஷ்ட கோணலுடன் கூறினாள்..
அதற்கு என்ன அர்த்தம் என்று கூட தெரியாமல் அக்குழந்தை விழித்தது. தந்தையும் எதுவும் பேசாமல் இருந்தார்.

இதே கெ(கே)ட்ட வார்த்தையை தான் நாளை இக்குழந்தை மற்ற இடத்திலும் பிறயோகிக்கும்.

யாருக்கு தெரியும் ? சிவா,சிவா என்று
எதிர்காலத்தில் நீங்கள்
“சங்கரா புராணம்” பார்க்கும் வயதில்
இதே வார்த்தையை உங்களிடமே கூறி உங்களை உரைய வைக்கலாம்.

கெட்ட வார்த்தை களை தவிர்ப்போம்