ஞாயிறு, 24 மார்ச், 2019

அஷ்டமியும்,நவமியும் !!!

எல்லோருக்கும் அருள் புரிபவர் பெருமாள்

இந்து மதத்தில் அஷ்டமி, நவமி நாட்களை  பெரும்பாலோனோர் புறக்கணிப்பார்கள்;

எங்குள்ளான உண்டான நாட்களை யாரும் கொண்டாடுவதேயில்லை எங்களை அனைவரும் புறக்கணிக்கின்றனர் என்று அஷ்டமியும், நவமியும் பெருமாளிடம் முறையிட்டனர்.

அதற்கு பெருமாள் என் அவதாரங்களில் ஒன்றான  (இராமன் )பிறப்பது நவமி திதி தினத்தன்றும், (கிருஷ்ணா) பிறப்பது அஷ்டமி திதி  தினத்தன்றும் அவதரிக்கிறேன் என்றார்.

அன்று முதல் இராமன் அவதரித்த நாளை இராம நவமி என்றும், கிருஷ்ணன் அவதரித்த நாளை கோகுல  அஷ்டமி என்றும் கொண்டாடுகிறோம்.

ஜெய் ஶ்ரீராம் !!!

புதன், 20 மார்ச், 2019

குல தெய்வ வழிபாடு நாள்

இன்று பங்குனி உத்திரம்

இந்நாள் குல தெய்வ கோயிலுக்கு செல்லும் நாள். பெரும்பாலான கோயில்கள் ஊருக்கு வெளியே தான் இருக்கும். இக்கோயிலுனுள் இருக்கும் சிலைக்கு(கல்) உருவம் (முகம்) இருக்காது. இக் கடவுளை சாஸ்தா என்று அழைப்பார்கள்

இவ்வழிபாட்டை நம் முன்னோர்கள் வழிபாடு எனவும் கூறலாம். அவர்கள் நினைவாக நட்ட கல்லை வணங்கி அவர்களின் ஆசியை பெறலாம். “ஆலயம் தொழுவது சாலவும் நன்று
குல தெய்வ வழிபாடு உன் குலத்துக்கே நல்லது !!! 

எங்களுக்கு குல தெய்வம் இவ்வூரில்  இல்லையே என நினைப்பவர்கள். நம் முன்னோருக்கெல்லாம் முன்னோர் ஆன முருக பெருந்தகையை வணங்கி வழிபடலாம்

இவண்

ராஜா. 

வியாழன், 14 மார்ச், 2019

காரைடையான் நோன்பு

காரைடையான் நோன்பு 

சத்யவாண் - சாவித்ரி தம்பதியரை கேள்வி பட்டிருப்போம். சாவித்ரி தன் கணவனுக்காக எமதர்ம ராஜனுடன் வாதிட்டு அவன் உயிரை மீட்டு கொண்டு வந்த நாள் இன்று. 

அந்த நாளின் நினைவாக தான்  ஒவ்வொரு பங்குனி மாதம் 1ம் தேதி பெண்கள் தன் கணவனின் ஆயுள் விருத்திக்காக புதிய மஞ்சள் சரடில் (கயிறு) கட்டிகொள்கிறார்கள். 

இந்த ஒரு வரியை வைத்து தான் நம் மணிரத்னம் ரோஜா என்ற மிகபெரும் காவியத்தை தமிழக திரையுலகத்திற்கு பரிசளித்தார் என்பது கொசுறு தகவல். 

ஆண்மிக பதிவில் எதற்கு சினிமா போஸ்டர் என்ற கேள்வி வரும். என்ன  செய்ய ? எல்லாவற்றிலும் மசாலா கேட்கறாங்கோ !!

#சாவித்ரி #சத்யவாண் #ரோஜா #காரைடையான்நோன்பு 

செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

எடப்பாடியார் கில்லாடி

எடப்படியார் சிறந்த அரசியல்வாதி தான்.
மத்தியில் பலமான கட்சி,
பத்தொன்பது மாநிலத்தில் ஆளும் கட்சி என மிதப்புடன் இருந்த பாஜக விற்கு 
தமிழகத்தில் வெறும் 5 தொகுதி மட்டுமே ஒதுக்கியுள்ளார். 

இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் அறிவித்துவிடுவார்கள் அறிவித்தவுடன் மத்திய அரசு காமந்து அரசாகிவிடும். எடப்பாடியார் அரசை எதுவும் செய்ய முடியாது என்ற கணக்கு தான். 

ஒரு பழமொழி உண்டு.
கையில் வைத்திருக்கும் கம்பும் ஒடிந்துவிடக்கூடாது,
தாக்க வரும் பாம்பையும் தாக்க வேண்டும்.

எடிப்பாடி அரசு அதனை செவ்வனே செய்கிறது. 

#எடப்பாடியார் #தமிழ்நாடு

திங்கள், 14 ஜனவரி, 2019

பேட்ட என் பார்வையில்

ஒரு திரைப்படத்தில் கதாநாயகனுக்கு நிகராக வில்லன் கதாபாத்திரம் படைக்க பட்டிருந்தால் அத்திரைப்படம் விறுவிறுப்பாகவும்,சுவாரசியமாகவும்
இருக்கும்

அந்த சூட்சமத்தை அறிந்த நடிகர் ரஜினி அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார். அவரின் சூப்பர்,டூப்பர் ஹிட் படங்களை பார்த்தாலே அது தெரியும்.

மாப்பிள்ளையில் தொடங்கி மன்னன்,அண்ணாமலை,பாட்ஷா,
படையப்பா,சந்திரமுகி,சிவாஜி என நீளும் இந்த பட்டியல்.

எஜமான்,வீரா,அருணாச்சலம்,
உழைப்பாளி இதில் வில்லன்களுக்கு பெரிய அளவில் வேலை இருக்காது இவையெல்லாம் சுமார் ரகம் தான்

ரஜினி ரசிகராக சிறு சிறு விஷயங்களை பார்த்து பார்த்து reference ( ,பாம்பு பாம்பு,)
அழகாக வைத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் தடுமாறிவிட்டார். ஜித்து கதாபாத்திரத்திற்கும்,சிங்காரம் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவமே கொடுக்கவில்லை. இவர்களை பார்த்து பயம் வரவில்லை மாறாக பரிதாபமே வருகிறது

படத்தின் பலம் அனிருத்தின் பின்னனி இசை பின்னி பெடல் எடுத்துள்ளார்
த்ரிஷா,சிம்ரன்,விஜய் சேதுபதி போன்றோர் தங்கள் கலைபயணத்தில் ரஜினியுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளனர்.  

 படத்தின் கதையில் (பாட்ஷா,கிரி,ஊர்காவலன்) சாயல்கள் தெரிந்தாலும் தன் திரைக்கதையால் (உத்திரபிரதேசம்,காதலர் தின வன்முறை,பசு மாடு,காவி கொடி) உதவியுடன் ஒட்டு போட முயல்கிறார் இயக்குனர். மிசா நடந்தது 1977 அப்பொழுது செல்போனெல்லாம் இந்தியாவில் வந்ததா?சரி ரஜினிக்காக மன்னிப்போம் மறப்போம்.  

பலமில்லாத வில்லன்,இரண்டாம் பாதியின் நீளத்திற்கு கத்திரி போட்டிருந்தால் ரஜினிக்கு இன்னொரு மணி மகுடமாக சூட்டபடவேண்டிய இந்த  பேட்ட முந்தைய மகுடத்தின் மயில் இறகாக மட்டுமே அலங்கரித்துள்ளது #பேட்ட  

வெள்ளி, 28 டிசம்பர், 2018

அடங்கமறு

ஜெயம் ரவி நடித்த படத்தில் ஒரு காட்சியை கூட தொலைகாட்சியில் பார்க்காமல்,
திரையரங்கிற்கு சென்று பார்த்த படம் அன்று  #தனிஒருவன்
இன்று #அடங்கமறு;

இன்னொரு தனி ஒருவனாக இருக்குமா இந்த அடங்கமறு என்று எதிரபார்ப்பில் அமர்ந்தேன்.

எளிமையான கதை தேர்வு.பெண்களை கற்பழிக்கும் காமுகர்களை கதாநாயகன் எப்படி தண்டிக்கிறான் ? என்பதை விறுவிறுப்பான தன் திரைக்கதையால்  சொல்லி  வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர்.

ஒரு திரைப்படத்தில் கதாநாயகனுக்கு மிக முக்கிய தேவை பலமான வில்லன்கள் அவர்கள்  உதவியுடன் படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது;
கதாநாயகன் பழி வாங்குவதாக சவால் விடுகிறான்.

எப்படி சவாலில் வெல்கிறான் என்பதை நம்மை அறியாமல் ரசிக்க வைக்கிறான்.ஒரு சில லாஜிக் மீறல்கள்,
தமிழ் படம்னா அப்படி தான் இருக்கும்.

கதாநாயகிக்கு பெரிய வேலை இல்லை வந்து போகிறார். அழகம் பெருமாள் அழகாக நடித்திருக்கிறார். பாடல்களுக்கு பெரிய வேலை இல்லை, பின்னனி இசை பலம் தான்.

தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.”ஜெயம்” ரவிக்கு இன்னொரு “ஜெயம்”கொடுக்க முயற்சித்திருக்கிறது இந்த #அடங்கமறு

ரசிகன்
ராஜா.க

செவ்வாய், 25 டிசம்பர், 2018

ஐயப்பனும்,கம்யூனிசமும்

ஐயப்பனும்,கம்யூனிசமும்

கம்யூனிசத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கிடையாது என்றாலும் இப்படி இருந்தால் நன்றாக தான் இருக்கும்  என நான் உணர்ந்த இடம் சபரிமலை.

கடந்த 12 வருடங்களாக சபரிமலைக்கு செல்கிறேன். ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு வசதிகளை பக்தர்களுக்கு தருவது கேரள தெவசம் போர்ட்;ஆட்சியில் யார் மாறினாலும் (காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்) இந்த சேவைகள் தொடர்வது கவனிக்கதக்கது.

அதில் சில
Online ticket booking , plastic free, சுற்றுபுற தூய்மை,நடந்து செல்லும் பாதையில் அமரும் அறை அமைத்தல்,சுத்தமான (தானியங்கி) தண்ணீர்,பேருந்து வசதி (பம்பை-நிலக்கல்).

அது என்ன கம்யூனிசமும்,ஐயப்பனும் ?
தமிழகத்தில் பல கோயில்களுக்கு சென்றிருக்கிறேன், இங்கு பணம் இருப்பவர்களுக்கு ஒரு வரிசை,பணம் இல்லாமல் இருப்பவர்களுக்கு ஒரு வரிசை. பெரும்பாலான கோயில்களில் இது தான் நடைமுறை.

சபரிமலையில் இன்று வரை கட்டண தரிசனம் கிடையாது. Online Ticket கூட இலவசம் தான்.  வடிவேலு பாணியில் காவலரிடம் 20₹ கொடுத்தால் 40₹ திருப்பி கொடுத்து ஒடி விடு என்பார்கள். இப்படி கட்டணம் இல்லாததால் தான் என்னவோ, கோயில் உண்டியல்களில் கட்டணம் குவிகிறது. அதை கொண்டு பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய முடிகிறது.

குழந்தைகளிடமும்,
வயதானவர்களிடமும் கேரள காவல்துறை நடந்து கொள்ளும் விதத்திற்கு தனி சல்யூட் அடிக்கலாம்.

இந்த வருடம் கேரளாவில் பெய்த கனமழை யில் பாதிக்கபட்ட பகுதிகளில் சபரிமலையும் அடக்கம்.
சேதமடைந்த சாலைகளை எல்லாம் சரி செய்து விட்டார்கள். இது போன்ற  சுவடிலிருந்து இவ்வளவு வேகமாக மீண்டு வருவதெல்லாம் சேட்டன்களால் மட்டுமே முடியும் போல.

பக்தர்களின் வேண்டுதலை தீர்ப்பதால் தான் என்னவோ, வருடா வருடம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடி கொண்டே செல்கிறது. பக்தர்களின் வேண்டுதலை உணர்ந்த ஐயப்பன் தன் திருத்தலைத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கும் தீய சக்திகளுக்கு தக்க பாடம் புகட்டுவார் என்று நம்புவோமாக!

நம்பிக்கையுடன்