சென்னையின் பிரபல ரவுடியை warning செய்யும் கமிஷனர் அவரை அசட்டு செய்யாமல், அவர் டிவிஷனுக்குள் அடுத்த கொலை செய்கிறார். பதிலுக்கு கமிஷனர் என்ன செய்கிறார்? உயிர்களை நேசிக்கும் நாயகன், அசைவ உணவை தவிர்த்து வாழ்பவன், ஆட்களை கொலை செய்கிறான்.
ஏன்? எதற்கு?
இந்த கேள்விகளை முதல் பாதியில் சுவாரஸ்யமாக சொல்லிய இயக்குனர், இரண்டாம் பாதியில் கதை முடிச்சுகளை நுணுக்கமாக அவிழ்த்துச் சரியான திரில்லர் படம் பார்த்த உணர்வை கொடுத்துள்ளார்.
கமிஷனராக @realsarathkumar –
அவரின் உடல் உறுதியும் குரலின் கர்ஜனையும் மாபெரும் பிளஸ் பாயிண்ட்.
நாயகனாக Vijay Kanishka –
அப்பாவி முகத்துடன் ஆத்திரம் கலந்த நடிப்பில் கலக்குகிறார்.
ரவுடிக்கும் நாயகனுக்குமான சண்டைக் காட்சிகள் மிகவும் தீவிரமாகவும் ரசிக்க வைக்கும் வகையிலும் உள்ளன.
நாயகனை கொலை செய்ய தூண்டும் Mask Man யார்?
இந்த மர்மத்தை சுவாரஸ்யமாக பதிலளித்த இயக்குனர் சென்டிமெண்ட், ஆக்ஷன், பழிவாங்கல் ஆகியவை கலந்து கட்டி ஒரு முழுமையான கமர்ஷியல் திரில்லர் படத்தை உருவாக்கியுள்ளனர்.
இயக்குனர் சூர்யா மற்றும் கார்த்திகேயன் பரிமாணங்கள் மாறும் திரைக்கதை மூலம் வெற்றி பெற்றுள்ளனர்.
தயாரிப்பாளர் @ksravikumardir –
இவரின் தயாரிப்பில் முந்தைய படங்களுக்கு இணையாக இந்த படமும் ரசிகர்களை கவரும் என முழு நம்பிக்கை தருகிறது.
#KSRavikumar #Thriller #CommercialCinema
#Hitlist
இவன்,
ராஜா.க