செவ்வாய், 7 நவம்பர், 2023

இறுகபற்று விமர்சனம்


 இறுக பற்று - தியேட்டர் சென்று பார்க்க முடியல , அதனால் தான் என்னவோ நல்ல படமா இருந்தது. அதை விட ஆச்சரியம் அந்த படத்தை Netflix வாங்கி வைத்துள்ளது. மூன்று கதைகள். இரண்டு கதைகளை இணைக்கும் மூன்றாம் புள்ளி. சம காலத்தில் உள்ள கதை என்பதால் என்னவோ , எளிதாக ஒன்றி விடுகிறது. 


கல்யாண சாப்பாட்டில் சாம்பார் எப்படி கம்பள்சரியோ ,இந்த மாதிரி கதைகளில் software வேலை செய்யும் ஒருவர் compulsory போல. சும்மா சொல்ல கூடாது விதார்த் நடிப்பு படு எதார்த்தம் , ஜிம் மில் வழிய போய் பேசுவது , மனைவியிடம் கோபப்டுவது ,தனக்கு என்னை வேண்டும் என்பதை குமுறும் இடத்தில் பின்னி பெடல் எடுக்கிறார் , அவரின் மனைவியாக வரும் (Abarnathy) பவித்ரா செம்புடன் சேர்ந்த தங்கமாக ஜொலிக்கிறார். இப்படி ஒருவர் வேண்டும் என நினைக்க வைத்துவிடுகிறார். 




Saniya Iyappan - sri ஜோடி வழக்கமான ஈகோ என்றாலும் , ஸ்ரீ தன் தவறை உணரும் காட்சி ஐயக்குனர் திரைக்கதை திறமை க்கு எ.கா.



Shraddha Srinath - விக்ரம் பிரபு கதை தொடக்கத்தில் சலிப்பு தட்டினாலும் நேரம் செல்ல செல்ல , சபாஷ் போட வைக்கிறது. விக்ரம் பிரபு பாந்தமான நடிப்பில் மிளிர்கிறார். காய்ச்சல் வரும் முன்னே மாத்திரை ஏன் சாப்பிடனும் என கேட்க்கும் இடம் எதார்த்தம். மொத்தத்தில் குடும்ப சகிதம் பார்க்கலாம்.


இவன்

ராஜா. க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக