தமிழ்நாட்டில் சிவன் , பெருமாள் , சுப்ரமணிய சுவாமி இந்த தெய்வங்களுக்கு பல கோயில்கள் மிக பிரபலம். விநாயகர் க்கு என்று பிரத்யேக மாக உள்ள கோயில். காரைக்குடி அருகில் பிள்ளையார் பட்டி யில் உள்ளது. தமிழ்நாட்டில் பல கோயில்களுக்கு சென்றுள்ளேன் , முதல் முறையாக பிள்ளையார்ப்பட்டி சென்றேன் , வியந்து போனேன்.
ஒரு கோயிலுக்கு மிக முக்கியம் ஆலயம் சுத்தமாக வைத்திருந்தல் அதனால் தான் ஆலய தூய்மை ஆண்டவன் சேவை என்பார்கள். அவ்வளவு சுத்தமாக வைத்திருந்தார்கள். கூட்ட நெரிசல் பயணிகள் வரிசையில் நிழலில் செல்ல ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. கோயில் தெப்பக்குளம் சுத்தமாக இருந்தது.
கோயிலுனுள் விநாயகர் அருகில் செல்கையில் வாங்க , வாங்க , வாங்க முன்னாடி வந்து பாருங்க என்றனர். முதல் முறை இப்படி கேட்கிறேன்.
கட்டன தரிசனம் கிடையாது. இப்படி ஒரு கோயிலா என வியந்தேன் மனதிற்கு அவ்ளோ மகிழ்ச்சி. இந்த கோயிலை #நகரத்தார் தான் பாராமரிக்கிறாகள் போலும்.
இது போல இந்த ஊரை சுற்றி 10 மேற் பட்ட கோயில்களையும் #நகரத்தார் தான் பராமரிக்கிறார்கள் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கும் சென்றேன் அவ்ளோ சுத்தமாக இருந்தது. #அறநிலையதுறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களை விட இந்த கோயில்கள் நல்ல பராமரிப்பு.அனைவரும் செல்க #கற்பகவிநாயகர் அருள் பெறுக.
#பிள்ளையார்பட்டி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக