வியாழன், 31 டிசம்பர், 2020

வைகுண்ட ஏகாதசி யும், அதிபரும்

 இது போல ஒரு வருடத்தின் கடைசி நாள் டிசம்பர் 31. அன்று: வைகுண்ட ஏகாதசி. காலையில் எழுந்த வுடன் தொலைக்காட்சி முகத்தில் விழித்தேன்.இன்று போல் அன்று மொபைல் க்கு முக்கிய துவம் இல்லாத காலகட்டம். 

தொலைக்காட்சி யில் அன்றைய தலைப்பு செய்தி ஈராக் முன்னாள் அதிபர் சதாம்முசைன் பற்றியது. 


அப்போது எனக்கு இருந்த வாசிப்பு அறிவுக்கு அவர் சிறந்த நிர்வாகி. எண்ணெய்க்கு உணவு வழங்கும் திட்டம் மூலம் இந்தியாவிடம் நல்ல நட்பு. 

 தன் நாட்டை திறம் பட வழிநடத்தியவர்.


 அமெரிக்க வுக்கு எதிரான பின் நடந்த போரில் தோல்வி யடைந்து சிறை பட்டிருந்தார். யாரும் எதிர்பாராத நிகழ்வு என்று நான் நினைத்த தருணம். காலையில் செய்தி பார்த்த பின் எனது டியஷன் சாரிடம் இதை பற்றி பேசி கொண்டிருந்தேன். இறுதியில் அவர் கூறினார் இன்று வைகுண்ட ஏகாதசி வைதாரையும் வரவேற்கும் வைகுண்டம்.


ஆம் , இன்று டிசம்பர் 31 ஒரு நாட்டின் அதிபர் தூக்கிலிடபட்டு இறந்த நாள். நான் நம்புகிறேன் வைகுண்டத்தில் சதாமுசைன் இருப்பார் என்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக