முதன் முதலில் பார்க்கையில் ஒரு அச்சம். தலையாட்டி கொண்டே
இடது-வலது,மேழும்-கீழும் என
கையில் கத்தி சகிதம் கம்பிரமாக தெரு வீதி உலா வருவார்.
நான்கு ரத வீதிகளில் உலா சென்று முருகனை போரில் காண போர் களத்துக்கு(கடல்) சென்றடைவார்.
நல்லவன் தானாம் பின் நாட்களில் கெட்டவனாகி எங்கள் ஊர் சக்ரவர்த்தி யுடனே போர் செய்ய தயாராகிவிட்டான் என சிறுவயதில் அன்னை கூறியது. பின் நாட்களில் அவரை வைத்து தான் அன்னை சாதம் கொடுப்பாளாம்.
இப்பொழுது பார்க்கையிலும் அவரின் வருகை, அவருடன் கூட வரும் மேல தாளங்கள் சுவாரசியத்தையும் , இனம் புரியாத மகிழ்ச்சியையம் தருகிறது.
இம்முறை மருமகளுக்கு அவரை காண்பித்து சாதம் ஊட்டினாள் தங்கை.
நல்லவரோ /கெட்டவரோ இன்று வரை மறக்க முடியாத நபர் சூரபத்மன்.
#திருச்செந்தூர் #சூரபத்மன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக