வியாழன், 13 பிப்ரவரி, 2020

மசால் தோசையும் , Arranged Marriage ம்

மசால் தோசையும் ,
Arranged Marriage ம்

உள்துறை அமைச்சர் (மனைவி) உடன் வெளியே சென்றிருந்தேன்;
பார் புகழும் "அண்ணா சாலை"யில் நீண்ட நேர பயணத்தில்  சற்று இளைப்பாற ஒரு அடுமனை (பேக்கரி)க்குள் சென்றோம்.

இன்முகத்துடன் வரவேற்ற waiter மெனு கார்டை கொடுக்க பிரித்து பார்த்தேன்; வடிவேலு ஒரு படத்தில் கூறுவாரே Veg Roll, Spring Roll, என புதிது புதிதாக உணவு வகைகள் கண்டுபிடித்து நாட்டை முன்னேற்ற வழிய பாருங்கப்பானு சொல்லுவாரு.
அது போல அத்தனை வகைகள் இருந்தது மெனுக்கார்டில்.

சிறு வயது முதல் இன்று வரை எனக்கு Veg Puff மீது பிரியம் அதை ஆர்டர் செய்ய, உள்துறை அமைச்சரோ waiter இடம் ஆங்கிலத்தில் உரையாடி கேக் ஆர்டர் செய்தார்.

உங்களுக்கு Pineapple Pastry
கேக் பிடிக்காதா என கேட்க,
இப்படில்லாம் கேக் இருப்பதே இப்போ தான் எனக்கு தெரியும் என நான் கூற, எப்ப பாரு கிண்டல்,நக்கல் என மறுமுனையில்.

சாப்பிட்டு முடித்த பின் பில் வந்தது; எடுத்து பார்த்தேன் சிறிய அதிர்ச்சி  கேக் 99₹ என்று இருந்தது, ஏய் ஒரு கேக் 99₹  ஆ !!! என்ன ஸ்டேட் govt, என்ன central govt என மனசுக்குள் கேட்டு;

இந்த ரூபாய்க்கு ஒரு மசால் தோசையும், பில்டர் காபியும் குடிச்சிருக்கலாம் மைண்ட் வாய்ஸ் என நினைத்து வெளியே கூற;
இப்போ தெரியுது உங்களுக்கு ஏன் "arranged marriage" ஆச்சு னு என உள்துறை அமைச்சர் கூற

சட்டென கவுண்டர் மகான் போல் கவுண்ட்டர் கொடுக்க முடியாமல்,
" சொல்லால் அடித்த சுந்தரி " என விஜயகாந்தை போல் இளையராஜா பாடலை பாடி பில்லை கட்டி நடையை கட்டினோம்.

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.

இவன்
ராஜா.க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக