வியாழன், 12 டிசம்பர், 2019

கதாநாயகன்

கதாநாயகன்

90's களில் எங்கள் திருச்செந்தூரில் நிறைய கல்யாண மண்டபங்கள் கிடையாது, ஆதலால் அருகில் உள்ள திருநெல்வேலி யில் கல்யாண மண்டபங்கள் அதிகம் இருந்ததால் அங்கே சிறப்பாக கல்யாணம் நடத்துவார்கள்.

மிகவும் வேண்டிய ஒருவரின்   கல்யாணத்திற்காக திருநெல்வேலி செல்ல நேர்ந்தது. வெளியூர் பயணம் என்றாலே மிகவும் பிடிக்கும் பள்ளி பருவத்தில். அதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் கல்யாணம் முடிந்தவுடன் மதியம் மேட்னி ஷோ க்கு ஏதாவது சினிமாவிற்கு கூட்டி செல்வார்கள்.

அந்த சமயத்தில் சூப்பர் ஸ்டாரின் அண்ணாமலை, மற்றும் மணிரத்னதின் ரோஜா வெளி வந்த நேரம்.ஒரு கோஷ்டி ரோஜாவிற்கு சென்றது,  நாங்கள் அண்ணாமலையாரை தரிசிக்க நினைத்தோம்.

நெல்லை பூர்ணகலா அக்காலகட்டத்தில் மிக பிரபலமான திரையரங்கம். அங்கு அண்ணாமலை வெற்றி கரமாக ஓடி கொண்டிருந்தது.

நான், அப்பா,அப்பாவின் நண்பர்கள் இருவர் சகிதம் தியேட்டருக்கு சென்றாயிற்று, கடுமையான கூட்டம்.இத்தனை க்கும் படம் வெளிவந்து 75 நாளாவது ஆயிருக்கும்.

"என்னடா இது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ" என்று சிறிய வருத்தத்தோடு  முகம் சுருங்கி போனது.  அப்பா, என்னிடம் படம் பார்க்கணுமா ? என்றார் இவ்வளவு கூட்டத்தில் எப்படி டிக்கெட் கிடைக்கும் வேண்டாம் என்றேன் பவ்யமாக. டேய் நடிக்காத என்கிட்டேயேவா  என்றார் (கண்டுபிடிச்சுட்டாரே மைண்ட் வாய்ஸ்). 

பிறகு தன் நண்பரை அழைத்து தியேட்டரில் உள்ள ஒருவரை பார்த்து விட்டு வரும் படி கூறினார்.அடுத்த சில நிமிடங்களில் அந்த நபர் அப்பாவை கண்டதும் மிக மகிழ்ச்சியுடன் உரையாடி ஒரு ரூமிற்கு அழைத்து சென்றார் காபி,காரம் சகிதம் ஒரு சிறிய உபசரிப்பு. என் மனதிற்குள் ஓடுவது டிக்கெட் கிடைக்குமா / கிடைக்காதா ? என்றே அலை பாய்ந்தது.

உரையாடல் முடிந்த வுடன் சரி அவ்வளவு தான் என நினைத்தேன்.

 நேராக அழைத்து சென்று சோபா சீட்டில் (First class Ticket) அமர வைத்தனர். அப்பா டிக்கெட் எங்கே என்றேன் ? உட்கார்த்து படம் பாரு டே என்றார்.

திரையில் ரஜினி ஹீரோ வாக தெரிந்தார்,
அருகில் அப்பா  ஹீரோ வாக அமர்ந்திருந்தார்.

இவன்
ராஜா.க

செவ்வாய், 12 நவம்பர், 2019

வாழ்க ஜனநாயகம்

எஜமான் திரைப்படத்தில் நடிகர் திரு.நெப்போலியன் பேசும் ஒரு வசனம் மிக பிரபலம்.

கல்யாண வீடாக இருந்தால் நான் தான் மாப்பிள்ளை ஆக இருக்கனும், இறந்த வீடாக இருந்தால் நான் தான் பிணமாக இருக்க வேண்டும் என்று.

அது போல் எங்களுக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் எங்களுடன்
 கூட்டனி ஆட்சி அமைக்க வேண்டும், இல்லை என்றால் குடியரசு தலைவர் ஆட்சியை அமுல்படுத்தப்படும்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த, ஆளுநர் பரிந்துரை.

காஷ்மீர் தொடர்ந்து இன்று மகாராஷ்டிரா நாளை..

வாழ்க ஜனநாயகம்
ராஜா க

திங்கள், 4 நவம்பர், 2019

அவரும் நானும்

 முதன் முதலில் பார்க்கையில் ஒரு அச்சம். தலையாட்டி கொண்டே
இடது-வலது,மேழும்-கீழும் என
கையில் கத்தி சகிதம்  கம்பிரமாக தெரு வீதி உலா வருவார்.

நல்லவன் தானாம் பின் நாட்களில் கெட்டவனாகி எங்கள் ஊர் சக்ரவர்த்தி யுடனே  போர் செய்ய தயாராகிவிட்டான் என சிறுவயதில் அன்னை கூறியது. பின் நாட்களில் அவரை வைத்து தான் அன்னை சாதம் கொடுப்பாளாம்.

இப்பொழுது பார்க்கையிலும் அவரின்  வருகை, அவருடன் கூட வரும் மேல தாளங்கள் சுவாரசியத்தையும் , இனம் புரியாத மகிழ்ச்சியையம் தந்தது.

இம்முறை மருமகளுக்கு அவரை காண்பித்து சாதம் ஊட்டினாள் தங்கை.

நல்லவரோ /கெட்டவரோ இன்று வரை மறக்க முடியாத நபர் சூரபத்மன்.

#திருச்செந்தூர் #சூரபத்மன்

வெள்ளி, 1 நவம்பர், 2019

பிகிலு என் பார்வையில்

கதை

கத்தி யை கையிலேயே எப்போதும் வைத்திருக்கும் ராயபுரம் போக்கிரி  ராயப்பன் தன் பிள்ளையை காலில் பந்து டன் Sports Man ஆக்க முயற்சிக்கிறார் அவர் கனவு பழித்ததா ?

எந்த ஒரு ரவுடியும் தன் மகன் கையிலும் கத்தி இருக்க விரும்ப மாட்டார். ராயப்பன் மட்டும் விதிவிலக்கா ? ஆனால் கர்மா அவரையும் (மைக்கேல்) கத்தி யை தூக்க வைக்கிறது.

வழக்கமான மாஸ் intro சண்டை காட்சி, பிறகு பாடல் சகிதம் குஷி யாக வலம் வருகிறார் மைக்கேல்.பிறகு காமெடிக்கு கதாநாயகி யின் கல்யாண நிறுத்தம் சற்று சலிப்புட்டுகிறது.

நட்பு : மைக்கேலின் நண்பன் கதிர் (football team coach)தன் அணியுடன் சென்னை வருகிறார்,
வில்லன் : ஹீரோ வை போட்டு தள்ள வருகிறார்,செம யாக அடி வாங்கி ஒன்றும் அறியா கதிரை குத்துகிறார்.

coach இல்லாமல் டீம் அல்லோல் படுகிறது, கதிர் மைக்கேலை கை காட்ட ஒரு ரவுடி எப்படி coach ஆக முடியும்? அவர் யார் தெரியுமா  பிகிலு என நிழ்கிறது Flashback ஆரம்பம்.

காவி வேட்டி, கழுத்தில் சிலுவை, நெற்றியில் குங்குமம், salt & pepper லுக்கில் ராயப்பன் intro.
கொஞ்சம் வித்தியாசமாக Body language அசத்துகிறார் விஜய்.
தன் மகனுடன் அன்பு மழை பொழிகிறார் மனிதர்( பிகிலு கப்போடு தான் வரணும்).

ராயப்பனை வில்லன் கோஷ்டி போட்டு தள்ளுகிறது வழக்கம் போல் மகனார் ரவுடி யாகிறார். நாமும் என்னடா இழுக்கிறிங்க என கொட்டாவி விடுவது தெரிந்து தான் போல இடைவேளை க்கு கேண்டின் கதவுகள் திறக்கப்படுகிறது.

பில்டர் காபியுடன், பாப்கார்ன் ருசித்து நாம் சுறுசுறுப்பாகையில் படமும் இரண்டாம் பாதியில் சுவாரசியமாகிறது.

சமூகத்தில் பெண்கள் படும் இன்னல்களை காட்சி படுத்திய விதம் அருமை. கால்பந்து போட்டி ரசிக்கும் படி உள்ளது. (விஜய் விளையாடும் போது அது மிஸ்ஸிங்) இறுதியில் பெண்கள் ஜெயித்து வெற்றி கொடி நாட்டுகின்றனர்.

முதல் பாதி - அடேய்
இரண்டாம் பாதி - அடடே !!!

ஒரு முறை குடும்பத்துடன் ரசிக்கலாம் இந்த பிகிலை !!

#பிகில்

ஞாயிறு, 26 மே, 2019

தமிழ் சினிமா செண்டிமெண்ட்

செண்டிமெண்ட்

இந்தவார்த்தைக்கும்நம்மதமிழ்சினிமாவிற்கும்உள்ளதொடர்பு 
அம்பானிக்கும்,ஐபில்கப்பிற்கும்” உள்ளதொடர்புபோல்உறுதியானதுபிரிப்பதுகொஞ்சம்கஷ்டம்

இந்தமாதிரிசெண்டிமெண்ட்ஷங்கர்மனிரத்தனம்போன்றஆளுமைகளைபோலவிட்டுவைப்பதில்லைஇயக்குனர்மணிரத்தனம்படங்களில்பார்த்திந்திங்கனா“Bus(பேருந்து)” ஒருசெண்டிமெண்ட்

படத்தோடகதாநாயகனும்,
கதாநாயகியும்பேருந்தில்அமர்ந்துபேசிகொள்வதைபோல்சிலகாட்சிகளைவைத்திருப்பார்அந்தகாட்சிமிகஇயல்பாகவும்ரொமெண்டிக்காகவும்இருக்கும்

மெளனராகம்தொடங்கிஅலைபாயுதே,ஆயுதஎழுத்து,கடல்,
காதல்கண்மணிபடங்கள்வரைகாட்சிகள்தொடர்கிறது

இதுபோலtrain  சிலபடங்களில்வரும்,ஹீரோclean shave பண்ணியிருப்பார்இதையெல்லாம்சிலகுறியீடுனுகூடசொல்லுவார்கள்.

இயக்குனர்சுந்தர்.C யோடநிறையபடங்களில்உருட்டுகட்டைவரும் 

பொதுவாகநம்மஎல்லாருக்கும்கூடஇந்தமாதிரிசின்ன,சின்னசெண்டிமெண்ட்இருக்கும்இந்தமாதிரிபண்னினாsuccess ஆகிஇருக்கும்அதேஅப்படியேஎப்பவும்follow பண்னுவோம்

வாழ்க்கைனாசிலசெண்டிமெண்ட்ஸ்கள்இருக்கதானேசெய்யும்

இவண்
ராஜா.







வெள்ளி, 17 மே, 2019

கராச்சியும், கமல ஹாசனும்


கராச்சியும், கமல ஹாசனும்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே அவர் இந்து என்று இன்று கொக்க-கோலாவை போல் பொங்கும் அரசியல் வா(வியா)தி கமலஹாசனுக்கு ஜீரண கோளாறு.

அந்த கோளாறுக்கு எந்த இடத்தில் மருந்து கிடைக்கும் என்று நன்கு அறிந்த அறிவு ஜீவி அவ்விடத்திற்கு சென்று அவரது வயிறு குளிர தன்னுள் உள்ள நஞ்சை கக்குகிறார்.

யானைக்கும்,மனிதனுக்கும் மதம் பிடித்துவிட்டால்  பேராபத்து அவர்களை சுற்றியுள்ளவர்களுக்கு என்பது காலம் கற்று கொடுத்த பாடம்.

பாடத்தோடு நில்லாமல் அவருக்கு ஒரு குறும்படத்தையும் அதுவும் அவர் காட்டிய படத்தை அவருக்கே காட்டவேண்டியுள்ளது காலத்தின் கட்டாயம்.

ஹேராம் திரைப்படத்தில் ராமின் (கதையின் நாயகன்) நண்பனாக வரும் லால் வாலி யை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்கும் பொழுது அவர் சாப்பாடு விற்பனை செய்து கொண்டிருப்பார் (பப்பட் வாலா)

பின் குறிப்பு : லால் வாலி (இந்து) கராச்சியில் வசித்த பெரிய தொழிலதிபர்.

ஏன் ? உனக்கு என்னாயிற்று ? என்று வினவுவார் ராம் ?

பாகபிரிவினை(இந்தியா-பாக்)க்கு பிறகு அதாவது இந்திய சுதந்திரத்திற்கு பிறகு லால் வாலியின் தொழிற்சாலையை தீயிட்டு சூறையாடும் அவரின் குடும்பத்தையும் சி(ஜி)ன்னா பின்னமாக்கிவிடும் ஒரு கும்பல். அக்கும்பலை எந்த “மார்க்கத்திலும்” சேர்க்க இயலாது அவர்களுக்கு மதமும் கிடையாது.

இது போல் எத்தனை
 “லால் வாலிக்களின் குடும்பங்கள்  “ தீவிரவாதத்தால் இறையனார்கள் என்பதும் அழிக்க முடியாத சுவடுகள்.

ஓட்டுக்காக கவர்ச்சியான வாக்குறுதிகளை கூறுவது அரசியல்வாதிகளின் வாடிக்கை அத்தோடு நில்லாமல் இது போன்ற  “விஷ விதைக்களை” விதைப்பது சமூகத்திற்கு கேடு.

கமல ஹாசனின் கவனத்திற்கு
காந்தி பிறந்த இதே மண்ணில் தான்
நாது ராம் கோட்சேவும் பிறந்துள்ளார்.

இந்தியன்
ராஜா.க

சனி, 11 மே, 2019

Mother’s Day

அம்மா 

அனைகே பிள்ளைகளின் முதல்  ஆசிரியையும் அவளே
வீட்டுகதவை கரும்பலகையை 
மாற்றி,
ஒருகுவளை சாதத்தை கையில்வைத்து அன்னையாகவும்ஆசிரியையாகவும்உருமாறுபவளும்அவளே

ஒரு பிள்ளைக்குள் இருக்கும் 
நல்ல பழக்கவழக்கங்கள் அனைத்திற்கும் அன்னையின் 
பங்கு அதிகம்

அன்னைக்கு கோயில் கட்டி கும்பிட வேண்டாம்
அவளை நான்கு கோயில்களுக்கு கூட்டி சென்று கடவுளிடம் காட்டுங்கள் உன் வீட்டு கடவுளை 
பெருமிதமாக!!!

அன்னையர் தின வாழ்த்துகள் 
#MOTHERSDAY 

திங்கள், 6 மே, 2019

அட்சய திரிதியை

இன்று: அட்சய திருதியயை
சித்திரையின் வளர்பிறை இரண்டாம் நாள்
(வளர் துவிதையை).

"அட்சய" உணவு;
இந்நாளில் மாதவியின் மகள் மணிமேகலை உணவில்லா ஏழைகளுக்கு உணவு வழங்கினாள்.

கால வாக்கில் அதை அப்படியே மாற்றி தங்கம் வாங்குங்கள் எங்களிடம்
"செய்கூலி இல்லை,சேதாராம் இல்லை .." ஏனைன்றால் இது தங்கமே இல்லை !!!என்ற அளவிற்கு விளம்பர படுத்தி வரலாற்றேயே மாற்றி விட்டனர் நம் வியாபார காந்தங்கள்(Business Magnates).

ஆதலால் அட்சய திருதியை நாளான இன்று இயலாதவர்களுக்கு உணவு கொடுத்து அவர்களின் மனமும், வயிறும் நிரம்பும் படி செய்வோம்.

#அட்சயதிருதியை

இவண்
ராஜா.க

வியட்நாம் வீடு

பொதுவாக பழைய (MGR,Sivaji) 
Black & white காலத்து திரை படங்களை விருப்பப்பட்டு பார்த்ததில்லை இயக்குனர் திரு.பாலச்சந்தர் படங்கள் மட்டும் விதிவிலக்கு

வியட்நாம்காலனிகாமெடி என்று YouTube தேடுகையில்வியட்நாம்வீடுஎன்று படம் கிடைத்தது; தலைப்பு கொஞ்சம் வித்யாசமாக உள்ளதே என முடிவெடுத்த்து சரி கொஞ்ச நேரம் பார்ப்போம் என அவ்வீட்டிற்குள் சென்றேன்

கதையின் நாயகன் கடுமையாக உழைத்து புதிய வீட்டிற்கு கிரஹ பிரவேசத்துடன் நம்மையும் அவன் வீட்டிற்குள் அழைத்து செல்கிறான். படம் ஆரம்பமாகிறது

வீட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று விவாதம் நடக்கிறது,.
ஒவ்வொரு வரும் ஒரு பெயர் சொல்ல சிறிய போரே நடக்கிறது. எப்போதும் சண்டையும், சச்சரவுமாக இருப்பதால்வியட்நாம்வீடு என்று வைத்து விடுகிறான் வீட்டின் தலைவன் பத்மநாபன் sorry “prestige”பத்மநாபன்

சிறு வயதிலேயே தந்தையை இழந்து, தாய் வீட்டு வேலை செய்து இருக்கும் வீட்டை விற்று அவனை வளர்க்கிறாள், ஒரு கட்டத்தில் அவளும் இல்லை அத்தையின் உதவியுடன் வாழ்க்கையில் கரை சேர்ந்து விற்ற வீட்டயே  வாங்குகிறான். கைமாறாக அத்தையின் மகளையே மணக்கிறான்.  
(அந்த காலத்தில மாப்பிள்ளைக்கு அவ்வளவு டிமாண்ட் போல).

ஒழுக்கம்,நேரம் தவறாமை, அலுவலகத்திற்கு போன் செய்கிறாள் மனைவி, இது வீடு என்று நினைத்தாயா இது office no personal என கடித்து prestige பத்மநாபனாக வாழ்கிறார் சிவாஜி. ஒரு இடத்தில் கூட மிகையான நடிப்பு என்று கூற முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பு.

இந்த சத்யவானுக்கு உற்ற துணையாக சாவித்ரியாகவே வாழ்கிறாள் பத்மினி. மடிசார் புடவையும்,கண்களை உருட்டுவதும்,சிரிப்பு,அழுகை என கொள்ளைஅழகு.  

மனைவியை கண்டு பம்மும் ஒரு மகன், படித்து கொண்டே (பெயிலாகி ,பெயிலாகி) இருக்கும் இன்னொரு மகன், செல்ல மகள் என நாயகனுக்கு மூன்று பிள்ளைகள்


மனைவிக்கு பெட்டிலேயே காபி கொடுப்பது அவள் சொல்லிற்கு தலையாட்டுவது என இக்கால கணவனாகவே வாழ்கிறார்(ஶ்ரீகாந்த்).

காலேஜ் கட் அடித்தல்,வீட்டிலேயே திருட்டு, வட்டி காரனிடம் கடன்,
பொய் என மாணவனாக பின்னுகிறார் இன்னொரு மகன் (நாகேஷ்).

கல்லூரி காலத்தில் காதலில் விழும் செல்ல மகள் என மூவரும் முக்கோனம்.  

தன் வேலையிலிருந்து வயது மூப்பின் காரணமாக ரிட்டையர்டு ஆகிறார் பத்மாநாபன். தனிமை வாட்டுகிறது

லஞ்சம் வாங்கி மாட்டி கொள்கிறார் ஶ்ரீகாந்த். மாமனார்( நீதிபதி )உதவியுடன் தப்பித்து விடுகிறார்வீட்டில் prestige தான் போய்டுத்து என நினைத்தேன், Justice உம் போய்டுத்து போலயே என Sharp வசனங்கள்.

இவை அனைத்தும் எப்படி சீறானது  இறுதியில் என்ன நடந்தது ? என்பதை 
மிக அழகாகவும்,ரசிக்கம்படியும் கூறி பார்க்கும் நம் இதயத்தையும் சற்று பலவீனப்படுத்திவிட்டார் 
Prestige பத்பநாபன்.

ரசிகன்
ராஜா. 













வெள்ளி, 12 ஏப்ரல், 2019

அஷ்டமியும்,நவமியும்

எல்லோருக்கும் அருள் புரிபவர் பெருமாள்

இந்து மதத்தில் அஷ்டமி, நவமி நாட்களை  பெரும்பாலோனோர் புறக்கணிப்பார்கள்

எங்குள்ளான உண்டான நாட்களை யாரும் கொண்டாடுவதேயில்லை எங்களை அனைவரும் புறக்கணிக்கின்றனர் என்று அஷ்டமியும், நவமியும் பெருமாளிடம் முறையிட்டனர்

அதற்கு பெருமாள் என் அவதாரங்களில் ஒன்றான  (இராமன் )பிறப்பது நவமி திதி தினத்தன்றும், (கிருஷ்ணா) பிறப்பது அஷ்டமி திதி  தினத்தன்றும் அவதரிக்கிறேன் என்றார்

அன்று முதல் இராமன் அவதரித்த நாளை இராம நவமி என்றும், கிருஷ்ணன் அவதரித்த நாளை கோகுல  அஷ்டமி என்றும் கொண்டாடுகிறோம்

ஜெய் ஶ்ரீராம் !!!
நண்பர்களுக்கு ராம நவமி வாழ்த்துகள்
ராஜா. 


ஞாயிறு, 24 மார்ச், 2019

அஷ்டமியும்,நவமியும் !!!

எல்லோருக்கும் அருள் புரிபவர் பெருமாள்

இந்து மதத்தில் அஷ்டமி, நவமி நாட்களை  பெரும்பாலோனோர் புறக்கணிப்பார்கள்;

எங்குள்ளான உண்டான நாட்களை யாரும் கொண்டாடுவதேயில்லை எங்களை அனைவரும் புறக்கணிக்கின்றனர் என்று அஷ்டமியும், நவமியும் பெருமாளிடம் முறையிட்டனர்.

அதற்கு பெருமாள் என் அவதாரங்களில் ஒன்றான  (இராமன் )பிறப்பது நவமி திதி தினத்தன்றும், (கிருஷ்ணா) பிறப்பது அஷ்டமி திதி  தினத்தன்றும் அவதரிக்கிறேன் என்றார்.

அன்று முதல் இராமன் அவதரித்த நாளை இராம நவமி என்றும், கிருஷ்ணன் அவதரித்த நாளை கோகுல  அஷ்டமி என்றும் கொண்டாடுகிறோம்.

ஜெய் ஶ்ரீராம் !!!