வெள்ளி, 24 நவம்பர், 2017

திருப்பதிக்கு போலாம் வாங்க ?



திருப்பதிக்கு போலாம் வாங்க ?

திருப்பதிக்கு சென்றோம் என்ற சொன்னவுடன் நம்மை நோக்கி அடுத்த வரும் கேள்வி ?
எவ்வளவு நேரம் ஆயிற்று ?
எத்தனை கூண்டுக்குள் அடைத்தார்கள்
என்பது தான்.

பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப,இக்காலத்திற்கு ஏற்றால் போல் பல மாற்றங்களை நடைமுறை படுத்தி தரிசனத்தை எளிமை படுத்தி பக்தர்களின் நேரத்தையும் மிச்ச படுத்தி உள்ளது திருப்பதி தேவஸ்தானம். அந்த நிர்வாக திறமைக்கு ஒரு சல்யூட் 👏🏻👏🏻👏🏻.

நடந்து வரும் பக்தர்களுக்கு சில சலுகைகளை கொடுத்து உள்ளது அதில் ஒன்று தான் “ஶ்ரீவாரி மெட்டு” பாதை.

திருப்பதியிலிருந்து 19KM தொலைவில் உள்ளது இந்த ஶ்ரீவாரி மெட்டு. காலை 4 மணியிலிருந்து பேருந்துகள் இயக்க படுகிறது.
சென்னையிலிருந்து காரில் வருபவர்கள் திருப்பதிக்கே செல்லும் முன்னே பைபாஸில்
 “சீனிவாச மங்காபுரம்” வழியாக இங்கு வந்து விடலாம். இங்கே கார் நிறுத்தும் வசதியும் உள்ளது.

அதி காலை 6 மணிக்கு தான் அப்பாதையை திறக்கிறார்கள் இரவில் நடந்து செல்ல அனுமதி கிடையாது. (forest area) என்பதால் இங்கிருந்து திருமலை க்கு செல்ல 2388 படிகட்டுகளே அதை கடந்து சென்றால் திருமாலை கண்டு விடலாம்.

அது என்ன சலுகை ?

தினமும் 6000 டோக்கன் இவ்வழியில் வருபவர்களுக்கு வழங்க படுகிறது. இந்த நுழைவு சீட்டு கிடைப்பது
1200 வது படிக்கட்டில் அதில் எந்த நேரத்தில் பார்க்க வேண்டும் (Timing slot ) என்ற விவரங்களுடன். இதற்கு பெயர்( த்வ்ய தர்ஷன்).

முதலில் நடப்பதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கும் படிகளுக்கு இடையே பாதைகள் இருப்பதால், 1200 படியிலிருந்து தொடர் படிகட்டுகள் இருப்பதால் இலகுவாக கடந்து விடலாம்.

அதிக பட்சமாக 2 மணி நேரம் அவ்வளவு தான். செல்லும் வழியில் நாம் இழைப்பாற குளிர்பானம் மற்றும் நொறுக்கு தீனிகளுக்கு பஞ்சமிருக்காது.

காலை 6 மணிக்கு  நடை பயணத்தை தொடங்கினோம். எங்களுக்கு கிடைத்ததது காலை 10 மணி (slot). 8 மணிக்கெல்லாம் திருமலைக்கு சென்றடைந்து விட்டோம்.

2 மணி நேரத்தில் தயாராகி சரியாக 10 மணிக்கெல்லாம் வரிசையில் நின்றோம், 11.30 மணிக்கெல்லாம் பாலாஜியை தரிசித்து விட்டு வெளியில் வருகையில் நெய் மணக்கும்
லட்டு கவுண்டர் எங்களை இன்முகத்துடன் வரவேற்றது.

பின் வந்த வழியிலேயே இறங்கி வந்து விட்டோம் படிகட்டுகளில் ஏறுவதை ஒப்பிடுகையில் இறங்குவது தான் சுலபம் ஆயிற்றே !!!

பயணங்கள் தொடரும்....
ராஜா.க

புதன், 22 நவம்பர், 2017

நாச்சியார்களின் காலமா இது ?

நாச்சியார்களின் காலமா இது

சினிமாவிற்காக எந்த வித சமரசமும்  செய்து கொள்ளாமல் தன் மனதில் உள்ளதை கேமராவின் கண்கள் வழியாக இவ்வுலகிற்கு எடுத்து காட்டும் இயக்குனர்கள் சிலரே அதில் திரு.பாலாவும் ஒருவர்

அதற்கு சான்று பாலா வின் முந்தைய திரைப்படங்கள். சேது வில் தொடங்கிய பயணம் தாரை தப்பட்டை வரை ஒவ்வொரு திரைப்படத்திலும் இப்படியெல்லாம் இருப்பார்களா இவ்வுலகில் மனிதர்கள் என்று பல தரப்பு மக்களையும் ஆச்சரியபடவைக்கும் கதாபாத்திரங்களை படைத்திருப்பார்

சமீபத்தில் பாலா இயக்கியிருக்கும் நாச்சியாரும் அதில் விதிவிலக்கலசமீபத்தில் வெளியான அப்படத்தின் டீஸர் பலரையும் விவாதிக்க வைத்துள்ளது அதில் இடம் பெற்றிருக்கிம் ஒரு வார்த்தை
 “தே..பயலே”.

வழக்கம் போல் கலாசார காப்பாளர்கள் நாம் தான் என்று நம்பிகொள்ளும்
நாம் (மட்டும் தான் )தமிழர்கள்கூட்டம் போல் பொங்கி எழுகின்றனர்


ஒரு பெண் எப்படி இந்த வார்த்தையை பேசலாம் ? பிரச்சனை அந்த வார்த்தையிலா இல்லை அதை பெண் பேசினால் என்பதிலா
அதே வார்த்தையை ஆண் பேசினால் அவனை கண்டு ஒதுங்கும் இதே சமூகம், பெண் கூறினால் சமூக சீரழிவு என்று முகம் சுழிக்கிறது.இரண்டு விதமான முக சுழிவுகள் ஆணுக்குளுக்கு ஒரு வகை 
பெண்களுக்கு ஒரு வகை

சமீப காலமாக தமிழ் சினிமா 
இது தான் பெண் சுதந்திரம் என்று தவறாக காட்டுகிறது என்று ஒரு கும்பல்
இது தான் பெண் சுதந்திரம்
இதுவல்ல பெண் சுதந்திரம் 
என்று வரையறுக்க பட்டாலே சுதந்திரம் என்பது காற்றில் கரையும் கற்பூரமாகி விடுகிறது


அக்காலத்தில் உள்ள பெண்கள் இப்படி இல்லையே பிறகு ஏன்? , அக்காலத்தில் உள்ள ஆண்களும் அப்படி இல்லை. கால மாற்றத்துக்கு ஏற்ற படி மாறவில்லையெனில் அடித்து செல்ல படுவோம்.தன்னை பாதுகாத்து கொள்ள இது ஒரு ஆயுதம் என்றால் அதை அந்த பெண் பிரயோகிப்பதில் தவறேதும் இல்லை.  

காலத்துடன் பயணிப்போம்
ராஜா. 


வெள்ளி, 17 நவம்பர், 2017

நேற்று சுவாதி, இன்று இந்துஜா, நாளை ?

நேற்று சுவாதி, இன்று இந்துஜா, நாளை ?

சென்னை ஆதம்பக்கத்தை சேர்ந்த தனியார் ஐடி நிறுவனத்தில் பணி புரியும் இந்துஜா என்ற பெண்மணி தன் பள்ளி வகுப்பு தோழனான ஆகாஷ் என்பவனால்  தீக்கறை யாக்க பட்டு பரிதாபமாக உயிர் இழந்தார்.

பள்ளி தோழன், நட்பாகி பிறகு ஒரு தலை காதலாக மாறி இன்று உயிரையே குடித்து விட்டது. ஆகாஷ் செய்தது பைத்தியகார தனத்தின் உச்சம் கடுமையாக தண்டிக்க பட வேண்டும்.அந்த தண்டனை மற்ற ஆகாஷ் களுக்கு சிறந்த பாடமாக அமைய வேண்டும் அதில் மாற்று கருத்து இல்லை

இந்துஜா தீக்கரையாக்க பட்டது அவளது வீட்டில்
உங்கள் மகளிடத்தில் நான் பேச வேண்டும் என்று சம்மதம் கேட்டுள்ளான். தாயாரும் சம்மதித்துள்ளார் என்றால் அவர்களின் நட்பு நன்கு பரிச்சயமான நட்பு என்று எண்ண தோன்றுகிறது.
பேச்சு ஒரு கட்டத்தில் எல்லை மீற திட்டமிட்ட படி கொண்டு வந்திருந்த எரிபொருளை இந்துஜா மீது ஊற்றி பற்ற வைத்து விட்டான் செய்வதறியாது திகைத்த அவளது தாயார், சகோதரி அனைவருடத்திலும் ஊற்றி தீக்கறை யாக்கி விட்டான். மருத்தவமனைக்கு செல்லும் முன்னே இந்துஜாவின் உயிர் பிரிந்தது

தவறு ஆகாஷிடம் மட்டும் தான் உள்ளதா ? ஏனென்றால் ஆகாஷ் போன்ற நட்புகளை வீடு வரை அனுமதித்ததே முதல் தவறு. இக்காலத்தில் எந்த பெண்ணும் மிக சுலபமாக புரிந்து கொள்வாள் ஆண் தன்னுடன் பழகும் பழக்கத்தை வைத்து இது நட்பா இல்லை காதலா என்று

காதல் என்று தெரியும் பட்சத்தில் இது நம் வாழ்க்கைக்கு, குடும்பத்துக்கு உகந்ததா ? என்பதை நன்கு ஆராய்தல் மிக அவசியம்

இன்றைய சமூகத்தில் கார்,பைக் இல்லாமல் இருப்பவர்களை எப்படி பார்க்குமோ அதே போல் காதலனோ / காதலியோ இல்லையென்றால் ஒரு மாதிரியாக பார்க்கும் காலம் இது

காதல் என்பது படகில்  சவாரி செய்வது    
போன்றது அக்கறையிலிருந்து இக்கறைக்கு பயணிக்கையில் மகிழ்ச்சியாகவும்,இனிமையாகவும் இருக்கும் ஆனால் பயணத்தின் நடுவிலேயே அக்கறைக்கு திரும்ப நினைக்கையில் தான் பிரச்சனை ஆரம்பமாகிறது சிலர் லாவகமாக அக்கறை திரும்புகின்றனர் சிலர் தான் நடுவில் தவித்து காட்டாறால் அடித்து செல்ல படுகின்றனர்

தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளை தோழனாக தான் பெற்றோர்கள் பார்க்க வேண்டும். அவர்களுக்காக நேரம் ஓதுக்குங்கள், விவாதியுங்கள், உங்களை அவர்களுக்கு புரியவையுங்கள்  அவர்களை நன்கு  புரிந்து கொண்டு நட்பாகி விட்டால் போதும் அவர்களுக்கு எதாவது சிக்கல்  என்றால் உங்களிடம் தான் முதலில் கூறுவர் பிரச்சனைகளையும் எளிதில் கலைந்து விடலாம்.

பிள்ளைகளும் பெற்றோர்களை நண்பர்களாக பாவித்தால் 
இந்துஜாக்களையும்,சுவாதிக்களின்   இழப்பை தடுக்கலாம் இவ்வுலகத்தில்.

நட்புடன்

ராஜா. 

சனி, 11 நவம்பர், 2017

நாமும் விஜய் சேதுபதி ஆகலாம்

விளம்பரத்தில் நடித்ததற்காக கிடைத்த ரூ.50 லட்சத்தை அரியலூர் மாவட்ட அங்கன்வாடிகளின் மேம்பாட்டுக்கு விஜய்சேதுபதி வழங்கியது பாராட்டத்தக்கது. நல்ல வழிகாட்டல்,

நம்மில் சிலர் அவர்கிட்ட இருக்கு கொடுக்கறார்.  நம் எல்லோரிடமும் செல்வம் இருக்கு அதை கொடுக்கும் மனது உள்ளதா ?

கோடி கணக்கில் சம்பாதிப்பவர்கள் இலட்சங்களையும்,
இலட்ச கணக்கில் சம்பாதிப்பவர்கள்
ஆயிரங்களையும்,
ஆயிர கணக்கில் சம்பாதிப்பவர்கள்
நூறுகளையும் கண்டிப்பாக கொடுக்க முடியும்.

கல்விக்காக செய்யும் தர்மம் கடவுளை நிச்சயம் சென்றடையும்  நம்மால் கொடுக்க முடியும் என்பதை மனதில்  விதைத்தால் அந்த விதை இச் சமூகத்தில் அது பூஞ்சோலையாக மாறும்.

வாருங்கள் விதைப்போம்...
ராஜா.க

வியாழன், 9 நவம்பர், 2017

விஸ்வரூபம் எடுக்கிறாரா தினகரன் ???

விஸ்வரூபம் எடுக்கிறாரா தினகரன் ???

இன்று தமிழகத்தில் நடந்த 
ஜெயா டிவி,சசிகலா மற்றும் அவர் குடும்ப வீடுகளில் நடந்த IT ரெய்டு மத்திய அரசின் வழக்கமான ஒன்றாக பார்க்க முடியாது

இரட்டை இலை சின்னம் முடக்கம், இரு அணிகளாக இருக்கும் அதிமுக தலைமை. இது தொடர்பான வழக்கு தேர்தல் கமிஷனின் நிலுவலையில் உள்ள இச்சமயத்தில் இன்று நடந்த ரெய்டு மத்திய பாஜக அரசின் அரசியல் காய் நகர்த்தலாகவே பார்க்க முடிகிறது.

ஒரு வேளை திரு.TTV தினகரனிடத்தில் இரட்டை இலை சின்னம் சென்று விட்டால் தமிழகத்தில் பாஜக காலூன்றும் என்ற கனவு பகல் கனவாகிவிடும்

வழக்கம் போல் தினகரனும் இந்த ரெய்டை அவருக்குரிய பாணியில் எதிர் கொண்டார். 20 வருடம் ஜெயிலுக்கு சென்றாலும் அதற்கு காரணமான கட்சியை தமிழகத்தில் காலூன்ற விடமாட்டேன் என்றபன்ச்அதிமுக அனுதாபிகளுக்கு அவர் கொடுத்த உற்சாக டானிக்

தற்பொழுதுள்ள தமிழக்த்தில் உள்ள ஆட்சி  எந்நேரமும் கவிழும் கப்பலாக உள்ளது. ஒரு வேளை ஆட்சி கவிழ்ந்தால் OPS & EPS அணியினர் TTV உடன் சேர்வது உறுதி. தற்பொழுதுள்ள தமிழகத்தை பொறுத்த வரை BJP யை எதிர்த்தால் தான் வாக்கு வங்கி உயரும் என்பதை புரிந்து கொண்டு அப்பணியை செவ்வனே செய்கிறார் திரு.தினகரன்

அமரர் திரு.MGR இறந்த பிறகு மறைந்த முதல்மைச்சர் செல்வி.ஜெயலலிதா கட்சியை திருமதி.ஜானகி யிடமிருந்து காங்கிரஸ் உதவியால் கட்சியை கைப்பற்றினார் இன்று BJP யியை எதிர்த்து அதே அதிமுக வை கைப்பற்றி விஸ்வரூபம் எடுப்பாரா திரு.TTV ? 

காலத்துடன் பயணிப்போம்

ராஜா. 

ஞாயிறு, 5 நவம்பர், 2017

என்னை மறுபடியும் விரும்பி அழைக்குமா என் “டூரிங் டாக்கிஸ்” ???



சிறிய இடைவேளைக்கு பிறகு நண்பனுடன் திரையரங்கிற்கு செல்ல திட்டமிட்டு சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் (தேவி தியேட்டர்) சென்றேன்.

நேரடியாகவே டிக்கெட் எடுக்க முடிவு செய்து கவுண்டரில் வரிசையில் நின்று எவ்வளவு என்றேன் ? ரூபாய் 414 என்றார்கள் ஒரு டிக்கெட் விலை (ரூபாய் 207) வடிவேலு கூறுவது போல் அப்படி நான் “ஷாக்” ஆயிட்டேன். (Online பதிவென்றால் Rs35 ஒரு டிக்கெட்டுக்கு எக்ஸ்ட்ரா)

அதை வெளிகாட்டி கொள்ளாமல் ஸ்டைலாக கடன் அட்டையை (Credit Card) நீட்டி டிக்கெட் பெற்று கொண்டு திகிலுடன் பேய் படம் (அவள்) சென்றேன்.

இடைவேளேயில் நாம் சும்மா இருந்தாலும் நம் வாய் சும்மா இருக்காதே !!
இரண்டு வெஜ் பப்ஸ் என்றேன்
கோலி அடிக்கடி எடுக்கும் ரன் என்றான். காந்தி படம் இட்ட பெரிய நோட்டை (Rs100) கொடுத்தேன் anything else என்றான் no thanks என்று ஸ்டைலாக சொல்லி விட்டு பயத்துடன் மீதி படத்தையும் திகிலுடன் பார்த்து முட்டித்தேன்.
நன்றி சுபம் மீண்டும் வருக என்றது தேவி வளாகம்  🙏🏻 ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டு பைக் உதைத்தேன்.
சார் பைக் Parking 30 என்றான்.

இதற்கு மேல் நின்றால் waiting charge கேட்பார்கள் என்று நினைத்து தலை தெறிக்க இடத்தை காலி செய்தேன்.

திரையரங்கிற்கு சென்ற வகைக்கு  செலவான தொகை Rs610 சராசரியாக ஒருவருக்கு Rs305.

ஒரு Middle Class கணவன்,மனைவி, குழைந்தைகளுடன் சென்றால்
 Rs1000 செலவு நிச்சயம். சில
அறிவு ஜீவிகள் சினிமா என்பது ஆடம்பரம் அது அத்யாவசியமில்லை அதனால் அதை தவிர்த்து விடுங்கள் என்பார்கள்.

தமிழகத்தில் தவிர்க்க முடியாத பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமாவும் அவசியமானது ஆனால் அது இன்று போகும் பாதை மிகுந்த ஆபத்தானது இதில் எல்லோராலும் பயணம் செய்வது கடினமே.

இதை சம்பந்த பட்ட துறையில் உள்ளவர்கள் சற்று ஆராய்ந்து சரியான நடவடிக்கை இல்லை என்றால் இப்பொழுதுள்ள திரையரங்குகளின் எண்ணிக்கை மூடு விழா காண்பதை தவிர்க்க இயலாது.