திருப்பதிக்கு போலாம் வாங்க!
திருப்பதிக்கு சென்றோம் என்ற சொன்னவுடன் நம்மை நோக்கி அடுத்த வரும் கேள்வி:
எவ்வளவு நேரம் ஆகிறது?
எத்தனை கூண்டுக்குள் அடைத்தார்கள்?
பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப, திருப்பதி தேவஸ்தானம் தனது தரிசன முறைகளில் பல மாற்றங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. பக்தர்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் இந்த நிர்வாகத்திறமைக்கு 👏🏻👏🏻👏🏻 ஒரு பெரிய சல்யூட்.
ஶ்ரீவாரி மெட்டு
திருப்பதியில் தரிசனம் எளிதாக்கும் வழிகளில் முக்கியமானது ஶ்ரீவாரி மெட்டு பாதை. இது திருப்பதியிலிருந்து 19 கிமீ தொலைவில் உள்ளது.
காலை 4 மணியிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து காரில் வருபவர்கள் திருப்பதிக்குச் செல்லும் முன்பே சீனிவாச மங்காபுரம் வழியாக இங்கே வந்து விடலாம். இங்கே கார் நிறுத்தும் வசதியும் உண்டு.
பாதை காலை 6 மணிக்கு திறக்கப்படுகிறது. இரவில் நடந்து செல்ல அனுமதி இல்லை (அது ஒரு காட்டு பகுதி). திருமலைக்கு செல்வதற்கு 2388 படிகட்டுகள் கடக்க வேண்டும்.
த்வ்ய தர்ஷன் – இது என்ன சலுகை?
நடந்து வரும் பக்தர்களுக்கு தினமும் 6000 டோக்கன்கள் வழங்கப்படுகிறது. 1200வது படிக்கட்டில் இந்த டோக்கன் வழங்கப்படுகிறது, அதில் தரிசனத்திற்கான சரியான நேர ஸ்லாட் குறிப்பிடப்பட்டிருக்கும்.
படிகளை ஏறுவது தொடக்கத்தில் சிரமமாக இருக்கும். ஆனால், 1200 படிக்கட்டுக்கு பிறகு தொடர் படிகள் இருப்பதால் எளிதாக நடந்து செல்ல முடியும்.
நாங்கள் காலை 6 மணிக்கு நடைபயணத்தை தொடங்கினோம். எங்களுக்கு கிடைத்த ஸ்லாட் காலை 10 மணி. 8 மணிக்கே திருமலைக்கு சென்றடைந்து விட்டோம்.
10 மணிக்கு வரிசையில் நின்று, 11.30 மணிக்கெல்லாம் பாலாஜியை தரிசித்தோம். திருப்பதி லட்டு கவுண்டரில் நெய் மணக்கும் லட்டுகளை வாங்கினோம்!
திறந்த இதயத்துடன் ஒரு சிறப்பு பயணம்
திருமலைக்கு ஏறுவது சிரமமாக இருந்தாலும், இறங்குவது மிக எளிது என்பதை அனுபவத்தில் உணர்ந்தோம்.
பயணங்கள் தொடரும்...
ராஜா.க
#Tirupati #SrivariMettu #DivineJourney #TirumalaDarshan #Pilgrimage #BalajiDarshan #Devotion #TravelTips #SacredJourney #IncredibleIndia