திங்கள், 25 செப்டம்பர், 2017

அம்மா” என்ற வார்த்தை வெறும் வாய் வார்த்தை தானா ??


அம்மா என்ற வார்த்தை வெறும் வாய் வார்த்தை தானா ??

சமீபத்தில் பொது மேடையில் தமிழக அமைச்சர் திண்டுக்கல் திரு.சீனிவாசன் அவர்கள்அம்மா இட்லி சாப்பிட்டார்கள் என்று நாங்கள் சொன்னதெல்லாம் பொய்என்றார் மேலும் மக்களிடம் மன்னித்து விடுங்கள் என்றார்.

இதை கேட்டவுடன் வடிவேலு ஒரு பஞ்சாயத்து காட்சியில் உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு என்னை மன்னித்து விடுங்கள் என்ற காமெடி நினைவுக்கு வருகிறது

திரைப்படத்தில் அந்த காட்சியை பார்த்து சிரித்து விட்டு சென்று விட்டோம் கொடுமை என்ன வென்றால் அதே போல் நிஜத்திலும் அதை கடந்து சென்று விடுகிறோம்
பொது ஜனம் கடப்பது இயல்பு ஆனால் 2 கோடி தொண்டர்களை கொண்ட கட்சியின் ஒரு தொண்டன் கூட ஏன் இப்படி எங்களை ஏமாற்றினீர்கள் என்று கேட்க முன் வரவில்லை ???

முன்னாள் முதல்வர் ஜெ இருந்த வரை அம்மா அம்மா என்று கூறினார்கள் அவர் இறந்து  பதவி கிடைத்த பிறகு 
அம்மா அம்மா என்று அழைத்தெல்லாம்
சும்மா சும்மா என்றாகிவிட்டது.

ஒரு அமைச்சர் பதவிபிராமணம் , இரகசிய காப்பு பிராமணம் எடுக்கையில்பொய்கூற மாட்டேன் என்று தான் எடுப்பார்கள்
பொது நிகழ்ச்சியில் நான் பொய் கூறினேன் என்கிறார். சட்ட ரீதியாக என்ன செயல் எடுத்தது இந்த அரசு??

சென்ற வருடம் நடந்த விடை தெரியாத இறப்புக்கள் சுவாதி,ராம்குமார் வரிசையில் மாநிலத்தின் முதல் மந்திரி பெயரும் சேர்கையில் மனதினுள் ஒரு பயமும்,பாதுகாப்பின்மையும் எழுவதை ஏனோ தடுக்க முடியவில்லை.   

மேலும் இது போன்ற சம்பவங்களை புதிய இந்தியா தவிர்க்குமா ? மறுபடியும் பார்க்குமா


காலத்துடன் பயணம் செய்வோம் !!!

சனி, 23 செப்டம்பர், 2017

மகளிர் மட்டும் விமர்சனம்



மூன்று பள்ளி தோழிகளின் நட்பு  சிறு தவறால் (அன்றைய காலகட்டத்தில்) பிரிய நேர்கிறது. பிரிந்த தோழிகள் மறுபடியும் இணைந்து ரெக்கை கட்டி பறப்பது தான் கதை.

இந்த மூன்று புள்ளிகளையும் இணைக்கும் கோடாக 
இளைய "நிலா" ஜோதிகா.

ஊர்வசி,பானுப்ரியா,சரண்யா மூவரும் தம் கதாபாத்திரம் உணர்ந்து நம் வீட்டில் உள்ள பெண்களை பிரதிபலிக்கின்றனர்
குறிப்பாக சேச்சியின் நடிப்பு (ஊர்வசி) நடிப்பு இராட்சசி தான் போங்க.

பள்ளி பருவத்தில் தோழிகள் அடிக்கும் லூட்டி அருமை, பெண்களுக்குள் இருக்கும் நட்பை காட்டிய விதம் படு எதார்த்தம். பழைய / புதிய காட்சிகளை காட்டிய விதம் எடிட்டருக்கு ஒரு சபாஷ்.

பானுப்ரியா வை அவர் கணவர்  நடத்தும் விதம் வடக்கிள் வசிக்கும் பெண்களின் நிலையை ஒளிவுமறைவின்றி காட்டியுள்ளனர். ஒரு காட்சியில் பானுப்ரியாவிடம்  
பாட்டி இனிமேல் வரமாட்டிங்களா ? எப்படி தப்பிச்சு போனிங்க என்று கேட்கும் பொழுது பலத்த கைத்தட்டல்

உன் சோகத்திற்கு தினமும் நீ குடிக்கற நான் என்ன செய்ய என்று சரண்யா கேட்கும் கேள்வி படு அழுத்தம்

இயல்பான தன் துரு துரு நடிப்பால் கவர்கிறார் ஜோதிகா. புரட்சிகரமான செயல்களை செய்கின்ற கதாபாத்திரமாகவே வாழ்கிறார்

பெண்கள் ஆண்களுக்கு அடிமையல்ல என்பதை அழுத்தமான காட்சிகளின் மூலம் எடுத்துரைத்த இயக்குனர் பிரம்மாவின் படைப்பு
 "மகளிர் மட்டும்"  

ஆண்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய பாடம்

புதன், 20 செப்டம்பர், 2017

தமிழக அரசு பயன்படுத்துமா ???


அதிமுக 18 MLA க்கள் இடை நீக்கம் தொடர்பான வழக்கில்
இன்று திரு.தினகரன் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் திரு. துஷ்யந்த் துபே முன் வைத்த வாதங்கள் தமிழக அரசு வழக்கறிஞரை மெளன சாமியாக்கிவிட்டது.

வெகுஜனம் மனதில் எழுகின்ற கேள்வியை தான் கேட்டார்.

1)பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் OPS அணி அரசுக்கு எதிராக வாக்களித்தார்கள் அவர்களை ஏன் இடைநீக்கம் செய்ய வில்லை எண்ணிக்கை 12 ஆட்சிக்கு ஆபத்து வராது என்பதலா ?
2)முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று தான் கூறினார்கள் இதில் கட்சி தாவல் தடை சட்டம் எப்படி பொருந்தும் ?
3)கர்நாடகாவில் எதியூரப்பா மேல் மீதுருந்த அதிருப்தியிலிருந்த MLAக்கள் சபாநாயகர் இடைநீக்கம் செல்லாது என்ற தீர்ப்பை மேற்கொள்காட்டினார்.
Master stroke என்னனா?
இங்குள்ள ஆட்சியாளர்கள் டெல்லியில்  இருக்கும் ஒரு நபர் சொல்படி கேட்கிறார்கள் என்றார் பாருங்கள்

திருடனுக்கு தேள் கொட்டியது போல்
இதில் BJP குறை சொல்லாதீர்கள் என்று அரசு வழக்கறிஞர் பால் போல் பொங்கி விட்டார்.

Dushyant Dave வாதம் பேரறிஞர்
திரு.அண்ணாவின் சொற்களை நினைவு படுத்தியது.

" சட்டம் ஒரு இருட்டறை அதில் வழக்கறிஞரின் வாதம் மெழுகுவர்த்தி  என்று "

இருந்தாலும் கணம் நீதிபதி அவர்கள்  அக்டோபர் 5 வரை நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு தடை விதித்துள்ளார்.

அதாவது 2 வாரம் தமிழக அரசுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்..

தமிழக அரசு பயன்படுத்துமா ?

#ChennaiHighCourt #DushyantDave 🎉🎉🎉

திங்கள், 18 செப்டம்பர், 2017

இந்திய பிரதமருக்கு


மதிப்பிற்குறிய இந்திய பிரதமருக்கு,

நாட்டின் முதல் குடிமகன் 
குடியரசு தலைவரின் அண்மை வாக்குமூலமான இந்தி பேச தெரியாத மக்களை சமமாக மதிக்க வேண்டும் என்ற கூற்று படி இக்கடிதத்தை தமிழில் படித்து மதிக்க வேண்டுகிறேன்.

இந்தியாவின் 7வது அதிகமாக மக்கள் தொகை கொண்ட மாநிலம் தமிழ்நாடு (7கோடி) இதை ஏன் மேற்கொள்காட்டுகிறேன் என்றால்  இந்த மாநிலத்திற்கு ஒரு நிரந்தர ஆளுநரே கிடையாது.

மகாத்மா காந்தி பிறந்த மண்ணில் பிறந்த உங்களுக்கு மகாத்மா கூறிய கருத்து ஒன்றை கூற விரும்புகின்றேன். இந்தியாவின்  அடிநாதம் என்பது உள்ளாட்சி அமைப்பு என்று கூறினார். அவ் உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆகிறது. தேர்தல் கமிஷனும் தேர்தலை தள்ளி வைத்து கொண்டே போகிறது

எங்களது மாநில முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா உடல் நலம் குன்றி கடந்த டிசம்பர் 5,2016 இயற்கை எய்தினார். ஒரு MLA இறந்த ஆறு மாத காலத்துக்குள் அத்தொகுதிக்கு இடை தேர்தல் நடத்த வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்பு கூறுகிறது. இந்த நாள் வரை அத்தொகுதி மக்கள் மக்கள் பிரதிநிதி இல்லாமலே இருக்கின்றர்.

சரி வென்ற தொகுதி MLA க்கள் தங்கள் ஆட்சியை காப்பாற்றி கொள்ள  ரிசார்ட்களில் தங்கி ஒய்வெடுக்கின்றர்
வருவாய் அளவில் 3வது இடத்தில் தன் பங்களிப்பை இந்தியாவிற்கு அளித்த  எம் மாநிலம் இன்று பொருளாதாரத்தில்  எந்த இடத்தில் உள்ளது என்பதே தெரியவில்லை

தங்களின் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஆதார் கார்டு,பண மதிப்பீடு நீக்கம்,சரக்கு சேவை வரி அனைத்திற்கும் ஒத்துழைத்த மக்கள் எம் மக்கள்

60 ஆண்டுகளாமாக தேசிய கட்சிகளை தவிர்த்து மாநில கட்சிகள் கோலாச்சிய எம் மாநிலத்திற்கு மத்திய அரசால்  கொடுக்க பட்ட தண்டனையா ? நான் மேற்கோள் காட்டிய பிரச்சனைகள் அனைத்தும்

என் தமிழ்நாடு எதற்கு வம்பு ?
என் தமிழகம் மறுபடியும் தலை நிமிறுமா ?

இப்படிக்கு
உங்களை போன்று நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கும் 
இந்தியன் 🙏🏻🙏🏻🙏🏻

வெள்ளி, 8 செப்டம்பர், 2017

எங்கே என் பழைய இந்தியா ??

எங்கே என் பழைய இந்தியா ??

வந்தாரை வாழ வைத்த என் இந்திய தேசம் இன்று ரோஹிங்யா இன மக்களை அனுமதிக்க மறுப்பது ஏன் ?

யார் இந்த் ரோஹிங்யா இன மக்கள் ?
மியான்மாரில் வசித்த சன்னி இன முஸ்லீம்களின் ஒரு பிரிவு.

புத்தரின் கொள்கைகளை கடுகளவு கூட புரிந்து கொள்ளாமல் அதற்கு நேரெதிரான வன்முறையை கையில் எடுத்த பெளத்தர்களின் வெறியாட்டத்தால் வீடு வாசல் இழந்து ,நடை பிணமாக நாட்டை விட்டு வெளியேறிய அகதிகள்.

இஸ்லாமிய நாடுகள் சில கை விரிக்க சில ஆயிரம் நபர்களை அண்டை நாடான பங்களாதேஷ் ஏற்று கொண்டது.இதற்கு மேல் எங்களால் முடியாது என்று எல்லை கதவையும் மூடியாகிவிட்டது.

இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் திபெத்தியர்களையும்,பார்சிகளையும்   இரு கரம் கூப்பி  இன்முகத்துடன் வரவேற்ற  என் இந்தியா இன்று இம் மக்களை ஏற்க மறுத்ததுடன் வருபவர்களை நாடு கடத்துகின்றது. சட்டப்படி தான் எல்லாம் நடக்கின்றது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ
நீதித்துறைக்கு பதிலளித்து விட்டார்.

இந்தியாவின் அழகே பன்முகதன்மை கொண்ட மக்களை அரைவணைத்து சென்று ஜன நாயகத்தை பூத்து குலுங்க செய்வதே.

மத வெறியர்களால் அனைத்தையும் இழந்து நிற்கதியாக வரும் மக்களை இந்த நாடாவது (கடவுள்) காப்பாற்றாதா என்று ஏக்கத்துடன் வருபவர்களை திருப்பி அனுப்புவதான் அறமா ? இது தான் ராஜநியதி யா ?

நம் பாரத தேசம் என்று புகழ் போற்றுவோம் ? என்பது இப்பொழுது வெறும் பாடல் வரிகளே..

நம் போன்ற மக்களை வரவேற்கும் நாடு இந்தியா என்று ரோஹிங்யா மக்கள் நினைத்திருப்பார்கள் போலும்  அவர்களுக்கு தெரியவில்லை நாம் இருப்பது
" புதிய இந்தியாவில் "  என்று

இப்படிக்கு
 புதிய இந்தியன் 😭😭😭

திங்கள், 4 செப்டம்பர், 2017

என் ஆசிரியர்கள் 🙏🏻🙏🏻🙏🏻

என் முதல் ஆசிரியை என் அம்மா எங்கள் வீட்டு கதவை கரும்பலகையை  
மாற்றி ஒரு குவளை சாதத்தை கையில் வைத்து அன்னையாகவும்ஆசிரியையாகவும் மாறியவர்கள்.

நர்சரி பள்ளி தொடக்க பள்ளிகள் மீது பயம் களைந்து விருப்பத்துடன் பள்ளி செல்ல  காரணமானவர்கள் இருவர் திருமதி.செல்லம்மா , திருமதி.ஈஸ்வரி காலம் முழுவதும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.  

இப்படி தமிழில் சரளமாக கட்டுரைகள எழுத காரணமான எனது தமிழ் ஆசிரியியை (ஹேமாவதி) , அறிவியலில் ஆர்வம் ஏற்பட திருமதி. ஜானகி டீச்சர்

வரலாற்றையும் , அரசியலையும் (civics ) வெறும் புத்தக பாடமாக போதிக்காமல் அதன் மேல் இன்று வரை ஈர்ப்பு குறையாமல் படிக்க உதவிய திருமதி.சாந்தா , வசந்தா டீச்சர்

ஒரு உதவாக்கரையை 
இன்று 
ஒரு உதவும்கரை ஆக்கி 
இச்சமூகத்தில் பொறியாளனாக கட்டமைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

September 5  
Radhakrishnan Birthday 

#TeachersDay 👩‍🏫  👨‍🏫