அதிமுக 18 MLA க்கள் இடை நீக்கம் தொடர்பான வழக்கில்
இன்று திரு.தினகரன் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் திரு. துஷ்யந்த் துபே முன் வைத்த வாதங்கள் தமிழக அரசு வழக்கறிஞரை மெளன சாமியாக்கிவிட்டது.
வெகுஜனம் மனதில் எழுகின்ற கேள்வியை தான் கேட்டார்.
1)பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் OPS அணி அரசுக்கு எதிராக வாக்களித்தார்கள் அவர்களை ஏன் இடைநீக்கம் செய்ய வில்லை எண்ணிக்கை 12 ஆட்சிக்கு ஆபத்து வராது என்பதலா ?
2)முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று தான் கூறினார்கள் இதில் கட்சி தாவல் தடை சட்டம் எப்படி பொருந்தும் ?
3)கர்நாடகாவில் எதியூரப்பா மேல் மீதுருந்த அதிருப்தியிலிருந்த MLAக்கள் சபாநாயகர் இடைநீக்கம் செல்லாது என்ற தீர்ப்பை மேற்கொள்காட்டினார்.
Master stroke என்னனா?
இங்குள்ள ஆட்சியாளர்கள் டெல்லியில் இருக்கும் ஒரு நபர் சொல்படி கேட்கிறார்கள் என்றார் பாருங்கள்
திருடனுக்கு தேள் கொட்டியது போல்
இதில் BJP குறை சொல்லாதீர்கள் என்று அரசு வழக்கறிஞர் பால் போல் பொங்கி விட்டார்.
Dushyant Dave வாதம் பேரறிஞர்
திரு.அண்ணாவின் சொற்களை நினைவு படுத்தியது.
" சட்டம் ஒரு இருட்டறை அதில் வழக்கறிஞரின் வாதம் மெழுகுவர்த்தி என்று "
இருந்தாலும் கணம் நீதிபதி அவர்கள் அக்டோபர் 5 வரை நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு தடை விதித்துள்ளார்.
அதாவது 2 வாரம் தமிழக அரசுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்..
தமிழக அரசு பயன்படுத்துமா ?
#ChennaiHighCourt #DushyantDave 🎉🎉🎉
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக