வியாழன், 31 அக்டோபர், 2024

அமரன் திரைவிமர்சனம்

 2014 க்கு முன்பு வரை காஷ்மீரில் உள்ள பிரிவினை வாதிகள் , அவர்களின் தலைவனை அழிக்கும் மேஜர்.இரண்டு அக்கா , அப்பா , அம்மா என்று வாழும் நடுத்தர குடும்பத்தில் பிறந்து 

பள்ளி வயதிலேயே இந்திய இராணுவம் மீது  கொண்ட ஈடுபட்டால் ராணுவத்தில் சேர முயல்கிறான் கதையின் நாயகன்

முகுந்தன்.


கூச்ச சுபாவம் உள்ள நாயகி க்கு தைரியம் கொடுத்து கல்லூரி போட்டி யில் வெற்றி பெற வைத்து அவளுடன் காதல். மொத்த கதை யும் தாங்குவது லா என்னமோ பலமான ஹீரோ வாகவே வாழ்கிறார் சிவ கார்த்திகேயன்.

சாய் பல்லவி இடையே நல்ல கெமிஸ்ட்ரி. காதல் காட்சிகள் காஷ்மீர் போல சில்லுனு உள்ளது.


பரபரப்பான action காட்சிகள் பஞ்சமில்லாமல் படம் முழுவதும் பயணிக்க முடிகிறது , @gvprakash பின்னணி இசை மிக பெரிய பலம்.  இறுதி காட்சி யில் நம்மை அறியாமல் கண்கள் கலங்கின. 

சிவகார்த்திகேயன் #Amaran அசுரன் வெற்றி வாகை சூடுகிறான்.

#Amaran


இவன் 

ராஜா.க


சனி, 12 அக்டோபர், 2024

வேட்டையன் திரை விமர்சனம்

 


இன்றைய தமிழகத்தில் அதிகரித்துள்ள மது , போதை பொருட்களால் சிக்கி சீரழியும் மாணவர்கள் குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் என்று படம் தொடங்குகிறது ,சட்டத்தில் உள்ள ஓட்டகளை பயன்படுத்தி வெளியில் உலாவும் கிரிமினல்களை தன் துப்பாக்கி தோட்டாக்களால்  வேட்டையாடும் கதையின் நாயகன் , 


அரசு பள்ளிகளில் போதை பொருட்களை பாதுகாத்து வைக்கும் கும்பலை துணிவாக நாயகனிடத்தில் புகார் தெரிவிக்கும் ஆசிரியை. போதை பொருள் கும்பலை Encounter செய்கிறார் நாயகன்.சிறிது காலத்துக்கு பிறகு ஆசிரியை படு கொலை செய்யப்படுகிறார் ,  ஆசிரியை கொன்றவர்கள் யார் ? எதற்காக ?க்ரைம் த்ரில்லர் தர முயற்சி செய்துள்ளார்.



இயக்குனர் ஞானவேல் அவர்கள். இன்னொரு நாயகன் பகுத்பாசில் , காமெடி க்கு guarantee அவரின் நடிப்பு அடி பொலி. 

முதல் பாதி சூப்பர் ஸ்டார் தயவால் சிறப்பாக செல்கிறது. 

இரண்டாம் பாதியில் திரைக்கதை யில் சிறுது

தடுமாற்றம் இந்திய அரசு டிஜிட்டல் தொழில் நுட்ப கல்விக்கு முக்கியத்துவம் 

மாநில அரசு தயவோடு கொடுக்க நினைக்கிறது.



மாநில அரசு தனியார் உதவியுடன் நிறைவேற்ற முயல்கிறது தவறான தனியார் நிர்வாகத்திடம் ஒப்படைத்தால் மாணவர்கள் நிலைமை என்ன ஆகும் என்கிறதை சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குனர். 

தான் இயக்குனர் நாயகன் தான் என்பதை நிரூபித்து உள்ளார் சூப்பர்ஸ்டார்.


Encounter ஆபத்தையும் பதிவு செய்கிறார் இயக்குனர்.நடிகர்  அமிதாப் ,  மஞ்சு வாரியர் தன் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். மொத்தத்தில் #வேட்டையன் 

இன்னொரு சூப்பர் ஹிட் Movie for Super Star and ஞானவேல் !!

#VettaiyanReview 

#VettaiyanTheHunter