செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

குன்றத்தூர் முருகனும் , நானும் !!




 என்ன முருகா ?

உன்னை இன்று நான் காண வேண்டும் என நினைத்தை போல பலரையும் நினைத்துள்ளாய் போல ? இன்று குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நல்ல கூட்டம்.


நண்பன் : அது என்ன எப்படி அவர் காண வேண்டும் என நினைத்தால் தான் முடியுமா ? 

நான் : அட ஆமாம் பா , அவர் அப்படி தான். 

நண்பன் : உனக்கு திருச்செந்தூர் தானே , நீ நினைத்தால் எப்போதும் வேண்டுமானாலும் பார்த்து விடலாமே ? பிறகு என்ன..


நான் : உன்னை போல தான் ஒரு முறை நானும் , நம்மூர் காரர் தானே எப்போது வேண்டுமானலும் பார்க்கலாம் (மனதிற்குள் அகங்காரம்) என நினைத்து சென்னையில் இருந்து வெள்ளி கிழமை இரவு கிளம்பி சனிக்கிழமை காலை ஊருக்கு செல்வோம். காலை சுப்ரமணியசுவாமி சந்திப்போம் என்று திட்டம்.



வெள்ளி இரவு திட்டமிட்டபடி பயணபட்டு சனிக்கிழமை காலை ஊருக்கு வந்து வீட்டிற்கு சென்றேன். வாப்பா வா, என்ன திடீர் விஜயம் என் வீட்டில் கேட்க உங்களை எல்லாம் பார்த்து விட்டு அப்படி நம்ம சுப்ரமணிய சுவாமி யையும் , ஷண்முகரையும் பார்க்கலாம் என்று வந்தேன். என் வீட்டில் சிறிது ஷாக்.



என்ன ? என நான் கேட்க , நம் சொந்தக்காரர் களில் ஒருவர் (வயதானவர்) இன்று காலை தான் இறந்தார். அதனால் 10 நாட்கள் நாம் எந்த கோயிலுக்கும் செல்ல கூடாது என்றார்கள். திட்டம் எல்லாம் பனால் , மனதில் உள்ள அகங்காரம் சுக்கு நூறானது. அன்று முதல் அவர் (முருகன்) நினைத்தால் தான் அவரை காண முடியும் என உணர்ந்தேன். 


 நன்பனிடம் இந்த கதையை கூறி குன்றத்தூரிலிருந்து விடை பெற்றோம்.

 

இவன்

ராஜா.க

#குன்றத்தூர் #Kundrathur #Muruga #Tiruchendur 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக