திங்கள், 14 நவம்பர், 2022

காந்தாரா என் பார்வையில் !!

 மனிதன் தான் கடவுள் , கடவுள் தான் மனிதன். கடவுள் மனிதனிடம் , 

தான் கூறியதை நிறைவேற்றியதை போல நீ கூறியதை நிறைவேற்று என கூறி தன்னை நம்பிய மக்களை எப்படி காப்பறினார் கடவுள் என்பது தான் காந்தாரா..



மலை வாழ் மக்கள் அவர்களுக்கு என ஒரு கடவுள் , அந்த கடவுள் என்னோடு வர வேண்டும் என ராஜா ஒருவர் கேட்க ? அதற்கு அந்த கடவுள, என் மக்களுக்கு என்ன என்ன கொடுப்பாய் என பதிலுக்கு கேட்க ? தனக்கு சொந்தமான இந்த நிலங்களை தருகிறேன் என கூறுகிறார்.



பேராசை கொண்ட மனிதன் தானே , ராஜாவின் அடுத்த தலைமுறை வாரிசுகள் கொடுத்த இடத்தை கேட்கிறார்கள்.

 எப்படி கடவுள் ?(மனிதர்கள் ,கோ , அரசு) காப்பாற்றினார் என்பதை சுவாரஸ்யமான திரைகதையால் 

படம் முழுக்க அந்த கிராம மக்களுடன் வாழும் உணர்வை பெருகிறோம். 


கமல் கூறுவார் சினிமாவே ஒரு மொழி தானே அந்த மாதிரி (கன்னடம் , துளு) என்று சில இடங்களில் பேசினாலும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது , கன்னட மக்களின் விளையாட்டு , அவர்கள் சாமி கும்பிடும் முறை அனைத்தும் தமிழ்நாடு மக்களோடு ஒத்துப்போகும் படியாக உள்ளதால் என்னவோ படத்தோடு ஒண்றிக்கொள்ள முடிகிறது.



இறை நம்பிக்கை உள்ளவர்கள் படம் பார்க்கும் போது அவர்களின் சிறு வயதில் கேட்ட கதைகள் பார்த்த மனிதர்கள் கதாப்பாத்திரமாக வருவார்கள். இறுதி காட்சி எல்லாம் மெய் சிலிர்த்து போகும் அளவுக்கான நடிப்பு , கடவுளின் உடல் மொழி கிராமத்து மக்களை அரசிடம் ஒப்படைத்து விடுவது போல அமைத்திருப்பது மயிர்கூச்சரியும் காட்சி (goosebumps). படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது படத்தின் தாக்கம் சிறுது நேரம் இருக்க வேண்டும் இருந்தது.



கொசுறு தகவல்:  Night Show பார்த்துவிட்டு பைக்கில் செல்கையில் 7 எட்டு நாய்கள் அருகில் செல்கையில் காந்தார மாதிரி ஓஓஓஓஓஓம்ம்ம் என்றேன் நாய்கள் தெறிந்து ஓடியது 😲😀😂





#Kantara #Kantaramovie 

இவன்

ராஜா க


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக