திங்கள், 3 அக்டோபர், 2022

மண்ணின் மைந்தன்


 பத்திரிக்கையில் கார்டுனிஸ்ட் ஆக தன் வாழ்க்கையை தொடங்கும் ஒரு சராசரி மனிதன் ,  தன் மாநிலத்தின் அசைக்க முடியாத சக்தி யாக எப்படி உருவானார் ? என்பதை 2மணி நேரத்தில் சுவாரசியமாக சொல்ல முயற்சி செய்து , அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர்.


கதையின் நாயகன் தன் எண்ணங்களை கார்ட்டூன் மூலம் பேச்சு பொருளாகி புயலை கிளப்புகிறான் , பத்திரிக்கை யின் தன் உயரதிகாரி நாயகனை கண்டிக்க வேலையை உதறி தள்ளி விட்டு சினிமா செல்கிறான்,  அங்கே தன் மக்கள் கேளிக்கை பொருளாவதை கண்டு அம்மக்களுக்கு தன் முயன்றதை பத்திரிகை மூலம் செய்ய முயல்கிறார்.


எம் மண்ணில் என் மாநில

மக்களுக்கு தான் முதல் உரிமை , பத்திரிகை மூலம் பரப்புகிறான். அது வரை மனதில் புழங்கி கொண்டிருந்த மக்களுக்கு தனக்கான ஒரு நபர் / பத்திரிகை வந்தது கண்டு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கரம் நீள்கிறது (காவல் துறை உட்பட).


பத்திரிகையை கட்சி யாக மாற்றி அதிகார மையத்தை நோக்கி நகர்கிறான் , அவனது துடிப்பான பேச்சில் அனைவரும் ஈர்க்கப்படுகிறார்கள். களத்தில் இறங்கி தன் மாநில மக்களுக்கு தான் முன்னுரிமை என சுபாஷ் சந்திர போஸ் பாதையை தேர்ந்தெடுக்கிறான்.  அடி மட்ட தொண்டர்கள் வரை உதவிகள் செய்து பூஜை அறையில் தன் புகைப்படம் வைக்கின்ற 

தலைவனாக உருவாகிறான்.


கட்சி யை காங்கிரஸ் உடன் சேர்க்க கட்டாயத்த படுத்துகின்றனர். உதறி தள்ளுகிறான். எமர்ஜென்சி யை தனக்கு சாதுர்யமாக மாற்றி கொண்டு அவன் பாதையை நோக்கி காய்களை நகர்த்தி கொள்கிறான். இறுதியில் தன்

 கட்சி யை சேர்ந்த நபரை முதலமைச்சர் ஆக்கி கிங் மேக்கராக மக்கள் மனதில் நிற்கிறான்.


கதையின் நாயகன்

Nawazuddin Siddiqui அவ்ளோ நேர்த்தி யாக நடித்திருந்தார் என்பதை தாண்டி தாக்கரே வே வாழ்ந்திருந்தார். ஹிந்தி தெரியத எனக்கு கூட "ஜெய் மகாராஷ்ட்ரா" என என்னை அறியாமல் சொல்ல வைக்கும் அளவுக்கு ghoosebup நடிப்பு.பலமான பின்னணி இசை @NetflixIndia உள்ளது #Thackeray


இவண்

ராஜா.க


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக