நம்முடைய பண்டிகை நாட்களுக்கும் தமிழ் சினிமா பாடல்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும்.
Happy New Year ஆரம்பித்து, பொங்கல், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி,( ஹோலி, தசரா) சொல்லி வைப்போம் இல்லை நீ இந்தியனா கேள்வி கேட்பாங்க எதுக்கு வம்பு.
அப்படி ஒரு நல்ல நாள் தான் போகி இந்த நாள் பற்றி நினைக்கியில் நம் முன்னே ஒலிக்கும் முதல் பாட்டு,
மார்கழி தான் ஓடிப் போச்சு போகியாச்சு
நாளைக்குத் தான் தை பொறக்கும் தேதியாச்சு
போகி இது போகி இது நந்தலாலா
பொங்கல் வைப்போம் நாளைக்குத் தான் நந்தலாலா....
1991 இல் தளபதி படத்தில் உள்ள பாடல் மணிரத்னம் இயக்கதில் , வாலி யின் வாலிப வரிகளில், இளையராஜா இசையமைத்த பாடல்,
கிட்டதட்ட 31 வருடங்கள் உருண்டோடிவிட்டது ஆனால் இந்த பாடலை சமன் செய்ய வேறு எந்த பாடலும் இன்று வரை வரவில்லை என்பது கற்பனை பஞ்சம் தான் என்றாலும் வருங்காலத்தில் வரும் என்று நம்பிக்கை யோடு
இந்த வருடமும் இந்த பாட்டோடு போகியை கொண்டாடுவோம்.
அனைவருக்கும் போகி வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக