செவ்வாய், 4 ஜனவரி, 2022

ஆர்கானிக் உணவு வகைகள்

 


ஒரு காலத்தில் நெல்  சோறு(அரிசி) சாதம்  , பால் , முட்டை, அசைவ உணவு (கோழி கறி) அனைவருக்கும் கிடைக்கவில்லை பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்தது.

(காதலர் தினம் படத்தில் குணால் அப்பா கூறுவார் என்னடா படிக்கணும் ஆசை 

படற நாளைக்கு நெல்லு சோறு தின்ன ஆசை படுவ ஒழுங்கா இரு என்பார் )


பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி இந்தியாவில் தலை எடுக்கும் முன் எல்லாமே ஆர்கானிக் உணவு தான்.

அதனால் தான் அரிசி சாப்பாடு பெரிய விசயமாய் கருதப்பட்டது. 


நம் அனைவருக்கும் இப்போது கிடைக்கும் அரிசி சாப்பாடாக இருக்கட்டும், அசைவ உணவாக இருக்கட்டும், இவற்றை உண்பவர்கள் சராசரி வயது அப்போது ஆர்கானிக்காக இருந்த காலத்தின் சராசரி வயதை விட இப்போது கூடுதலாகத்தானிருக்கிறது.


என் பாட்டி காலத்தில் வீட்டிற்கு சில பிள்ளைகள் இறந்து கொண்டே தான் இருக்கும். 

ஒப்பீட்டளவில் இந்த மரணம் எல்லாம் குறைந்துள்ளன.


ஆர்கானிக் என்பது இப்போதய வெற்றிகரமான வியாபாரம் மேலும்,

 மக்களிடையே ஒரு பாகுபாட்டைக் கொண்டு வரும் ஆயுதமும் ஆகும்.


அதனால் நமக்கு கிடைத்த உணவை நன்கு உண்டு இன்புற்றிருக்கலாம்.


இவண்

ராஜா.க

1 கருத்து: