கிட்டதிட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கொரானா மீது கொண்ட பயம் சற்று விலகியதால், தியேட்டர் க்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
அது என்னமோ தெரியல, என்ன மாயமோ தெரியல,
சிகா @Siva_Kartikeyan பெரும்பாலான படம் மொக்க படமா (Mr.Local) இருந்தாலும் தியேட்டரில் தான் பார்த்துள்ளேன்.
சரி இந்த முறை சென்ற படம் டாக்டர்,
முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை சிரிக்க வைத்து அனுப்பிவிடுகிறார்கள் சிகா&co.
குறிப்பாக கிங்கிஸ்லி வரும் காட்சிகள் சிரிப்பு பட்டாசு, யோகிபாபு வேறு, படம் முழுக்க இருவரும் பயணிக்க வைக்கும் படியான திரைக்கதை அமைத்த இயக்குனர் க்கு சுபாஷ்.
சிகா வின் பெரிய ரசிகர் பலம் குழந்தைகள் மற்றும் குடும்ப ரசிகர்கள் அவர்களை திருப்தி படுத்தி அனுப்பியிருக்கிறார்.
நிறைய இடங்களில் கோலமாவு கோகிலா படத்தின் மசாலா வாசனை வீசினாலும் வெற்றி பெற்ற காம்போவான சாம்பார், கேரட் பொறியல், முட்டை கோஸ் பொறியல் மாதிரியான combo வை இந்த முறையும் சுவையாக பரிமாறியிருக்கார்கள் படக்குழுவினர்.
100% சிரிப்புக்கு உத்திரவாதம் அளிக்கிறார் இந்த டாக்டர்.
#டாக்டர் #சிவகார்த்திகேயன்
#Tamilcinema #sivakarthigeyan #movie #reviews
இவண்
ராஜா.க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக