சனி, 30 அக்டோபர், 2021

கோடியில் ஒருவன் விமர்சனம்

 இப்படிலாம் நடக்குமா என சில விஷயங்களை நினைத்திருப்போம், அப்படி நாம் நினைப்பதை நினைவில் நிறுத்துவது ஒன்று நம் கனவு, நம் செயல், மற்றோன்று நம் பார்க்கும் சினிமா திரைப்படம்.


மலைவாழ் பகுதியில் வசிக்கும் பெண் சந்தர்ப்ப சூழ்நிலை யால் அரசியல் வாதி அவதாரம் எடுத்து அந்த கிராமத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்க தீர்த்து கட்ட நினைக்கும் அரசியல் வா(வியா)திகள் அந்த அன்னையின் கனவு நிறைவேறியதா ?


தாய்க்கு தமையன் விஜயராகவனாக விஜய் ஆண்டனி வழக்கமான தன் பந்தாமன நடிப்பில் மிளிர்கிறார்.


 தன் லட்சிய பயணத்தை அடையும் வழியை 

யதார்த்தத்துடன் கற்பனையும் கலந்துகட்டி திரைக்கதை யால் வெல்ல முயன்று வெற்றயும் பெற்றுள்ளார் இயக்குனர்.


"கோடியில் ஒருவனை "   டிவியில் தாராளமாக

பார்க்கலாம்.


இவண்

ராஜா க


#amazonprime #கோடியில்ஒருவன் #விமர்சனம்


வியாழன், 28 அக்டோபர், 2021

Oh மணப்பெண்ணே

 செம ஜாலியா , ஜில்லுனு ஒரு காதல் கதையோடு வந்திருக்கிற படம் தான்

"ஓ மணப்பெண்ணே "

OTT வெளியீடு Hot Star 


நான் பொண்ணு, 


நான் பையன்,

நாயகன், நாயகி இருவரும் சந்திக்கும்  முதல் காட்சி அழகிய ஹைக்கூ. 


கதாநாயகன் ஹரீஷ் கல்யாண் 2K kid நடிக்கல , வாழ்ந்திருக்கார். நடிப்பு மிக யதார்த்தம் , அவர் கூடவே வரும் நண்பன் பல இடங்களில் சிரிப்பை வர வைக்கிறார்.


Engineering முடிச்சு அரியர்ஸ் எடுத்து வேலைக்கு முயற்சி செய்யும் நாயகன்.


மகன் வேலையை நம்பி தான் குடும்பம் இல்லை  ஆனாலும் மகனை வறுத்தெடுக்கும் Elite அப்பா வாக வேணு அரவிந்த், நடிப்பும் செம.


MBA கோல்டு மேடலிஸ்ட் வெளிநாடு செல்ல துடிக்கும் கதாநாயகி பிரியா பவானி சங்கர். இல்லை, இல்லை கல்யாணத்தை முடித்து தன் கடமையை நிறைவேற்ற துடிக்கும் நாயகியின் அப்பா.


இந்த இருவருக்குமான காதல் கை கூடியதா ??


காதல், Breakup, youtube channel, own business என பெரும்பாலான 2K kid's வாழ்க்கை, கனவுகளை திரையில் அழகான  திரைக்கதை யால் கோர்த்து ஜாலியாக ஒரு படம்.


நாயகனுக்கும் , நாயகிக்கும் காதல் காட்சிகள் இல்லாமல் காதல் வருவது தான் திரைக்கதையின் வெற்றி 

அதற்கு இயக்குனர் கார்த்திக் சுந்தர் க்கு ஒரு சபாஷ்.


2K kid இருந்திருக்க மாட்டோமா என 90's kid சற்று பொறாமை பட வைத்துள்ளது இந்த படம். பாடல்கள் கேட்கும் ரகம் !!!



இவண்

ராஜா.க


#ohmanapenne #reviews #movie #tamilmovie

வியாழன், 21 அக்டோபர், 2021

உடன்பிறப்பே ஒரு பார்வை

 


அன்று சிவாஜியின் " பாசமலர்" தொடங்கி நேற்று வந்த 

சிகா வின்  "நம்ம வீட்டுபிள்ளை" வரை திரையில் வெற்றி பெற்ற அண்ணன் தங்கை பாசத்தை வைத்து 

இன்று வெளி வந்துள்ள மற்றோரு திரைப்படம் "உடன்பிறப்பே ".


நாளையும் இது போன்று படம் வரும் காரணம்  நம் மக்களும் நம் மண்ணில் இன்றளவும் உளவும் அண்ணன்-தங்கை இடையிலான பாசமும்.


உலக சினிமா பார்ப்பவர்கள் சிலர் இப்படத்திற்கான  விமர்சனத்தில் கிரிஞ்ச் (cringe ) என்று மேற்கோள் காட்டியிருந்தனர். 


 சரி என்னதான் இன்று  உலக சினிமா வெல்லாம் நாம் பார்த்தாலும் ஒரு காலத்தில் திருச்செந்தூரில் கிருஷ்ணா டாக்கீஸ் "கிழக்கு சீமையிலே" பார்த்து கண் வேர்த்த பயலுக தானே நாம என்று முடிவு செய்து பார்க்க ஆரம்பித்தேன்.


அமேசான் ப்ரைமில் வெளி வந்துள்ளது சூர்யா வின் தயாரிப்பில் அவரின் மனைவி ஜோ வின் 50தாவது திரைப்படம். 


பெரும்பாலான அண்ணன் தங்கை பாச படங்களில் தங்கையின் கணவன் மற்றும் அவனது குடும்பத்தாரை வில்லன்களை கொடூரமாக காட்டுவது தமிழ் சினிமா செண்டிமெண்ட் அந்த செண்டிமெண்ட் இதில் இல்லை என்பது ஆறுதல்.


சசிகுமார்-ஜோ இருவரும் சேர்ந்து திரையில் தோன்றும் காட்சி  குறைவே,

 மாறாக திரைக்கதை யில் அவர்களின் பாசத்தை காட்டிய இயக்குனர் க்கு சபாஷ்.


அடி,தடி யை நம்பும் அண்ணன் சசிகுமார்,

அகிம்சை போதிக்கும் மாப்பிள்ளை சமுத்திரகனி இவர்களுக்கு இடையேயான கொள்கை முரண்பாடால் பிரிவு பிறகு காலமும் நேரமும் எப்படி இவர்களை சேர்த்து வைத்தது என்பதை கொஞ்சம் அடி தடி நிறைய பாசம் கலந்து கொடுத்திருக்கிறார்கள்.


அண்ணனால் வளர்க்க பட்ட  தங்கை கள் இப்படத்தை பார்த்தால் கண்ணீர் க்கு guarantee.  மற்ற அண்ணன் - தங்கைகளுக்கு இப்படி ஒரு அண்ணன் கிடைக்காதா இப்படி ஒரு தங்கை கிடைக்காதா என படம் பார்க்கும் போது நினைக்க வைப்பது தான் பார்க்கும்  சினிமா விற்கு வெற்றி.


அந்த வெற்றியை இப்படம் பெற்றுள்ளது. குடும்பத்துடன் பார்க்கலாம் தாராளமாக.


இவண்

ராஜா.க


#Tamilcinema #udanpirape #Jothika #sasikumar

வெள்ளி, 15 அக்டோபர், 2021

டாக்டர் MBBS

 கிட்டதிட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கொரானா மீது கொண்ட பயம் சற்று விலகியதால், தியேட்டர் க்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.


அது என்னமோ தெரியல, என்ன மாயமோ தெரியல, 

சிகா @Siva_Kartikeyan பெரும்பாலான படம் மொக்க படமா (Mr.Local) இருந்தாலும் தியேட்டரில் தான் பார்த்துள்ளேன்.


சரி இந்த முறை சென்ற படம் டாக்டர்,

முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை சிரிக்க வைத்து அனுப்பிவிடுகிறார்கள் சிகா&co. 


குறிப்பாக கிங்கிஸ்லி வரும் காட்சிகள் சிரிப்பு பட்டாசு, யோகிபாபு வேறு, படம் முழுக்க இருவரும் பயணிக்க வைக்கும் படியான திரைக்கதை அமைத்த இயக்குனர் க்கு சுபாஷ்.


சிகா வின் பெரிய ரசிகர் பலம் குழந்தைகள் மற்றும் குடும்ப ரசிகர்கள் அவர்களை திருப்தி படுத்தி அனுப்பியிருக்கிறார்.


 நிறைய இடங்களில் கோலமாவு கோகிலா படத்தின் மசாலா வாசனை வீசினாலும் வெற்றி பெற்ற காம்போவான  சாம்பார், கேரட் பொறியல், முட்டை கோஸ் பொறியல் மாதிரியான combo வை இந்த முறையும் சுவையாக பரிமாறியிருக்கார்கள் படக்குழுவினர்.


100% சிரிப்புக்கு உத்திரவாதம் அளிக்கிறார் இந்த டாக்டர்.


#டாக்டர் #சிவகார்த்திகேயன்

#Tamilcinema #sivakarthigeyan #movie #reviews


இவண்

ராஜா.க


சனி, 2 அக்டோபர், 2021

கடனும், தனியார் வங்கியும்

 அரசு வங்கி ஊழியர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள், என்று சவால் விடுகின்றனர் தனியார் நிறுவன வங்கி ஊழியர்கள்.


கடனை அடைக்க வங்கி க்கு சென்று இருந்தேன் வழக்கமான E-Token , social distance maintaining,  ஆங்கிலத்தில் விசாரணை என ஒரு gowtham ஷார்ட் மூவி படம் போல இருந்தது.


மீதி தொகை இவ்வளவு என Bank ஆபீசர் கூற , 

இந்த மாத EMI கழித்து கொள்ளவில்லையே என   ஆபிசரிடம் நான் கூற,

என் கணக்கில் பிழையா என ஆபீசர் திருவிளையாடல் சிவாஜி போல கூற,

ஆங்கிலத்தில் பேசினாலும் குற்றம் குற்றமே என நக்கீரர்  போல நானும் கூற, 


ஒரு நிமிட பார்வைக்கு பின் ஆமாம் சிறு தவறு என ஒத்துக்கொண்டு

திருத்திய தொகையை கட்ட கூறினார் ஆபீசர்.


தனியார் வங்கி ஊழியர்களே ஏதோ  படித்த (சுமராக) நான் தப்பித்து கொண்டேன் எல்லோரும் இது போல கேட்க மாட்டார்கள். ஆதலால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டுகிறோம்.


உனக்கும் எனக்குமான தொடர்பு இத்தோடு முடியாது அடுத்த கடன் முடியும் வரை தொடரும் என்று ஹரி பட ரேஞ்சில் ஒரு பன்ச் சொல்லிட்டு வங்கியை விட்டு நடையை கட்டினேன்.

#Bank #PrivateBank #PublicBank #Bank #operation

இவண்

ராஜா.க