வெள்ளி, 23 ஜூலை, 2021

என்றோ எழுதியது

 "கற்றோருக்கு சென்ற இடமெல்லாம்               சிறப்பு"


இப்பொன் மொழிக்கு சமீபத்திய சொந்தகாரர் திரு.கமல்ஹாசன் அவர்கள். 


வழக்கம் போல்  எல்லோரையும் தூற்றும் ஒரு கும்பல் கமலுக்கு மார்க்கெட் போய் விட்டது,பணம் தேவை படுகிறது அது தான் சின்னத்திரைக்கெல்லாம் வந்துவிட்டார் என்று.


உன்னை போல் ஒருவன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் எனக்கு இடது கை,வலது கை என்ற பேதம் கிடையாது என்பார் அது போல் திரு.கமலுக்கு சின்னத்திரை , வண்ணத்திரை என்ற  பேதம் பார்க்கமாட்டார் போலும்.


உண்மை கலைஞனுக்கு தேவை ரசிகனின் மகிழ்ச்சியும், கைதட்டும்  அதை உலக நாயகன் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அடைந்து விட்டார்.

அவர் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கூறியது போல் வரும் காலங்களில் இதை பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூடும் என்று கணித்தார். வருங்காலத்தை கணிப்பதில் தான் அவர் தான் "உத்தம் வில்லன்" ஆச்சே.


பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி எழுதி வைத்த script or Reality show எதுவாகினும் 

மாணவர்களை 5 நாள் ஆடவிட்டு விட்டு சனி,ஞாயிறு களில் ஆசிரியரின் கேள்விக்கு திக்கி திக்கி விடை சொல்லும் இடத்தில் சில இடங்களில் சிலரின் உண்மை முகம் நம்முள் இருக்கும் ஆதங்கள் வெளிப்படுவதே இந்த  பிக்பாஸ் என்ற கமலின் வெற்றி.


கமல் சொல்வது போல் இது ஒரு நிகழ்ச்சி அவ்வளவே இதையும் விவசாயத்தையும் தொடர்பு படுத்தும் இனைய போராளிகளே உங்கள்  

#savefarmer👨‍🌾 என்ற Dag எங்களின் #saveoviya என்ற Dag இங்கு எதையும் மாற்ற போவது இல்லை. 


ஒரு பொழுதுபோக்காக பார்த்து விட்டு அவ்விடம் விட்டு நகர்வது அனைவருக்கும் நலம் பயக்கும்.


#Bigboss #Kamal #Vijaytv


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக