செவ்வாய், 18 மே, 2021

Chess ம் வாழ்க்கையும்

 சதுரங்கம் 


விளையாட்டு களில் சுவாரஸ்யமான மற்றும் மூளை க்கு அதிக வேலை கொடுக்கும் விளையாட்டு களில் ஒன்று. 


காரணம் அதில் இடம் பெற்றுள்ள காய்கள் (coin)  , ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள். 

இவை அனைத்தையும் சரியான முறையில் நாம் உபயோக படுத்தினால் எளிதில் சுலப வெற்றி பெறலாம். ஆனால் நம்மில் பெரும்பாலானோரால் எளிதில் வெற்றி பெற முடியவில்லை.


காரணம் எதிரில் நின்று விளையாடும் நபரின் ஆட்டத்தை பொறுத்து நமது ஆட்டமும் ,வெற்றியும்  வேறுபடும்.


இந்த காய்களில் (coin)களில் ராணி யின் பலம் மற்றவர்களை காட்டிலும் கூடுதல். 


சிலர் மட்டுமே ராணி யின் பலத்தை வைத்து நாம் ஏன் ஆட வேண்டும் என நினைத்து தன் மீதுள்ள அதீத அறிவு மற்றும் நம்பிக்கை யால் மற்ற காய்ன் களை மட்டுமே பயன்படுத்தி சுலபமாக  வெற்றியும் பெறுகிறார்கள்.


ஆனால் அவர்களுக்கும் தெரியும் ராணியின் பலம் என்னவென்று. இப்படி வெற்றி பெறுபவர்கள் நான் மேலே கூறியது போல ஒரு சிலரே.


இந்த சிலரை பார்த்து  நாமும் இது போன்று ஆடி வெற்றி பெறலாம் என நினைத்து தோல்வி அடைந்தவர்கள் பலர்.


சிலர் ராணி யின் பலத்தால்   மற்றவர்களை எல்லாம் காப்பாற்றி வெற்றியும் பெறுவார்கள் ஆனால் ராணியை இழந்து விடுவார்கள் இவர்களும் சிலரே.


தன் அறிவுணர்ந்து , தன் சுற்றி உள்ளவர்களின் பலம் அறிந்து, ராணி யின் பலத்தையும் சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி பெறுபவர்கள் வெகு சிலரே.


இவ்விளையாட்டின் சுவாரஸ்யமான ஒன்று   நம் வாழ்க்கையோடும் ஒத்து போகும். சுற்றி இருக்கும் படைகள் உறவுகள் மற்றும் நண்பர்கள் , ராணி என்பவள் மனைவி.


மேலே கூறியுள்ள முறைகளில்  நாம் அனைவரும்  எதாவது ஒரு  முறையை தேர்ந்தெடுத்து வாழக்கை என்னும் சதுரங்க விளையாட்டில் பெற்றி பெற முயன்று வருகிறோம். 


நீங்கள் சிலரா ? பலரா ?  வெகு சிலரா என்பதை உங்களிடம் விட்டு விடுகிறேன்.


#Chess #Queen #King

இவன்

ராஜா.க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக