ஞாயிறு, 23 மே, 2021

திருநெல்வேலி பாம்பே தியேட்டர்

திருநெல்வேலி பாம்பே தியேட்டர்




நண்பர்கள் சகிதம் சிரித்து, சிரித்து பார்த்து படம் சிம்பு   கதாநாயகனாக நடித்த முதல் படம்

காதல் அழிவதில்லை !!!

சிம்பு வின் இன்ட்ரோ ,அவர் பெயரை உச்சரிக்கும் படி  BGM, பாடல்கள், fight scene ,  என தன் பங்குக்கு மசாலா கலந்திருப்பார் டி.ஆர். படத்துக்கு நல்ல ஓப்பனிங்  மேலும் வணிக ரீதியாக வசூல் வெற்றி பெற்ற படம்.


அப்படத்துடன் விஜயின் பகவதி, அஜீத் வில்லன் வெளிவந்து இருந்தது இவை அனைத்தும் தீபாவளி ரிலீஸ்.


பகவதி பூர்ணகலா தியேட்டரில் , வில்லன் ரத்னா தியேட்டர் இரண்டுமே கொஞ்சம் பழைய தியேட்டர்கள்.  இரண்டு படங்களும் பார்த்தாச்சு. சரி இது வரை பார்க்காத தியேட்டரில் சென்று பார்க்கலாம் என்று ஐடியா கொடுத்தேன்.


Latest sound effects DTS  சும்மா அதிரும் சிறந்த தியேட்டர் பாரமாரிப்பு, கேண்டின் icecream என எல்லாம் சூப்பர், படம் தான் மொக்க but நண்பர்கள் படை சூழ போனதால் ஒவ்வொரு சீனும் கலாய்த்து ரசித்து பார்த்த படம். #காதல்அழிவதில்லை #

#Bombay #Theatre

#Tirunelveli

செவ்வாய், 18 மே, 2021

Chess ம் வாழ்க்கையும்

 சதுரங்கம் 


விளையாட்டு களில் சுவாரஸ்யமான மற்றும் மூளை க்கு அதிக வேலை கொடுக்கும் விளையாட்டு களில் ஒன்று. 


காரணம் அதில் இடம் பெற்றுள்ள காய்கள் (coin)  , ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள். 

இவை அனைத்தையும் சரியான முறையில் நாம் உபயோக படுத்தினால் எளிதில் சுலப வெற்றி பெறலாம். ஆனால் நம்மில் பெரும்பாலானோரால் எளிதில் வெற்றி பெற முடியவில்லை.


காரணம் எதிரில் நின்று விளையாடும் நபரின் ஆட்டத்தை பொறுத்து நமது ஆட்டமும் ,வெற்றியும்  வேறுபடும்.


இந்த காய்களில் (coin)களில் ராணி யின் பலம் மற்றவர்களை காட்டிலும் கூடுதல். 


சிலர் மட்டுமே ராணி யின் பலத்தை வைத்து நாம் ஏன் ஆட வேண்டும் என நினைத்து தன் மீதுள்ள அதீத அறிவு மற்றும் நம்பிக்கை யால் மற்ற காய்ன் களை மட்டுமே பயன்படுத்தி சுலபமாக  வெற்றியும் பெறுகிறார்கள்.


ஆனால் அவர்களுக்கும் தெரியும் ராணியின் பலம் என்னவென்று. இப்படி வெற்றி பெறுபவர்கள் நான் மேலே கூறியது போல ஒரு சிலரே.


இந்த சிலரை பார்த்து  நாமும் இது போன்று ஆடி வெற்றி பெறலாம் என நினைத்து தோல்வி அடைந்தவர்கள் பலர்.


சிலர் ராணி யின் பலத்தால்   மற்றவர்களை எல்லாம் காப்பாற்றி வெற்றியும் பெறுவார்கள் ஆனால் ராணியை இழந்து விடுவார்கள் இவர்களும் சிலரே.


தன் அறிவுணர்ந்து , தன் சுற்றி உள்ளவர்களின் பலம் அறிந்து, ராணி யின் பலத்தையும் சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி பெறுபவர்கள் வெகு சிலரே.


இவ்விளையாட்டின் சுவாரஸ்யமான ஒன்று   நம் வாழ்க்கையோடும் ஒத்து போகும். சுற்றி இருக்கும் படைகள் உறவுகள் மற்றும் நண்பர்கள் , ராணி என்பவள் மனைவி.


மேலே கூறியுள்ள முறைகளில்  நாம் அனைவரும்  எதாவது ஒரு  முறையை தேர்ந்தெடுத்து வாழக்கை என்னும் சதுரங்க விளையாட்டில் பெற்றி பெற முயன்று வருகிறோம். 


நீங்கள் சிலரா ? பலரா ?  வெகு சிலரா என்பதை உங்களிடம் விட்டு விடுகிறேன்.


#Chess #Queen #King

இவன்

ராஜா.க

வியாழன், 6 மே, 2021

ஸ்டாலின்_எனும்_நான்

 கலைஞரோட மகன் தான். ஆனா அவருக்கு எதுவுமே சுலபமாக கிடைக்கவில்லை எதுவுமே தானாகவும் வரவில்லை!


அவரிடம் என்ன ஆளுமை இருக்குனு கேட்ட நடுநிலைவாதிகளே.


10 வருஷம் ஆட்சியில் இல்லையென்றாலும் கட்சியை காப்பாற்றினார்.


2011 இல் மிக பெரிய தோல்வி,

எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லை, அதை தொடர்ந்து நடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் தோல்வி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட இல்லை,


இப்படி ஓர் இக்கட்டான சூழ்நிலையை  திமுக என்ற கட்சியும் அதன் தலைவர் கலைஞர்  கூட சந்திந்தது இல்லை.


2016 சட்டமன்ற தேர்தல் பலமான எதிர்க்கட்சி, அதை தொடர்ந்து 2019 கலைஞர் இல்லாமல் திமுக சந்தித்த முதல் தேர்தல், இந்தியா ஓர் முடிவெடுக்க தமிழ்நாடு மட்டும் வேறுமுடிவு எடுத்தது. 


அதனை தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தல் , எத்தனையோ சாணக்கியர்கள் திமுக வின் கூட்டனி உடையும். கண்டிப்பாக இந்த முறையும் ஆட்சி க்கு வர முடியாது என்று ஆருடம் கூறினார்கள்.


மேலும் ஜாதகம் சரியில்லை, கட்டம் சரியில்லை என்று பிரம்மரிஷி அளவுக்கு ஓரு பில்டப்.


வாட்ஸப், முகநூல் என்று எங்கு திரும்பினாலும் பல அவதூறுகள். பாஜக என்ற பலமான எதிர்க்கட்சி யை எதிர்ப்பது அவ்வளவு சுலபமல்ல. பாஜக வின் ஒரே நோக்கம் திமுக வெற்றியை தடுப்பது மட்டுமே ஒரே இலக்கு. அதில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள்.


மேலும்  அன்று தொடங்கிய அதிமுக முதல் நேற்று தொடங்கிய மையம் வரை திமுக வையே வசைபாடினார்.


உழைப்பு உழைப்பு உழைப்பு!!

தன் 50 வருட உழைப்பு 

என்ற கருவியால் இவை அனைத்தையும் முறியடித்து தனி பெரும்பான்மையுடன் திமுக என்ற கட்சியை ஆறாவது முறை ஆட்சி கட்டிலில் அமரவைத்து  முதல்வர்  ஆகியுள்ளார் திரு.ஸ்டாலின்.


அவர் முன் இருக்கும் சவால்கள் ஏராளம், இது வரை கண்டிராத நிதி நெருக்கடி, கொரானா என்ற 

பெருந்தொற்று இந்த தடை கற்களை படி கற்களாக மாற்றுவார் என்று நம்புவோம்.


வாழ்த்துக்கள் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் !!! 


#ஸ்டாலின்_எனும்_நான்