செவ்வாய், 12 ஜனவரி, 2021

பொங்கலும் வாழ்த்துகளும்

 என் சிறு வயதில் தீபாவளி என்றவுடன் சட்டென்று நம் மனதில் மத்தாப்பாய் மலர்வது பட்டாசு தான். இன்றைய நாள் வரை இதன் மேல் உள்ள ஈர்ப்பு சிறிது குறைந்திருக்குமே தவிர முழுவதுமாக இல்லை. 



அது போல் பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருவது பல வண்ணங்கள் கொண்ட  

“பொங்கல் வாழ்த்து அட்டைகள்” பொங்கலுக்கு இரு வாரங்களுக்கு முன் இதன் சீசன் தொடங்கி விடும்.  


எங்கள் ஊரில் உள்ள 

அன்பு ஸ்டோர்,வள்ளுவன் ஸ்டோர்,லதா ஸ்டோர் கடைகள் இதற்கு பெயர் பெற்றது. கடைக்கு வெளியே பெரிய பலகைகள் அமைத்து அதில் அனைத்து விதமான வாழ்த்து அட்டைகளை பரப்பியிருப்பார்கள். 


MGR தொடங்கி ரஜினி, கமல், என அனைத்து நட்சந்திரங்களும் நம் பார்வைக்குள் அடங்கியிருப்பார்கள்.

50 பைசா முதல் ஐந்து ரூபாய் வரை வித வித மான அட்டைகள். 


சிறு வயதில் அனைவர் போல ரஜினி வெறியன் நான் . எனக்கு பிடித்த ரஜினி அட்டைகள் தான் பெரும்பாலும்

நான் என் நண்பர்களுக்கு கொடுப்பது. பள்ளி ஆசிரியர்களுக்கு பொங்கல் பானையுடன் கூடிய அட்டைகள் நடிப்பை அப்பொழுதே தொடங்கி ஆயிற்று. 


நமக்கு மிகவும் பிடித்த,எதிர்பார்த்த நபர்களிடமிருந்து வரும் அட்டைகள் தரும் மகிழ்ச்சியை எத்தனை increment கடிதத்தாலும் தர இயலாது.

நண்பர்களுக்கிடையே யாருக்கு அதிகமாக அட்டைகள் வந்துள்ளது என்ற சிறு போட்டியும் இருக்கும்.


அன்று மனமும்,நேரமும் நிறையவே இருந்தது பணம் கம்மியாக இருந்தது. இன்று பணம் இருக்கிறது மனமும்,நேரமும் இல்லை. 

சுஜாதா கூறியதை போல் வாழ்க்கையிலும் TV remote  இல் உள்ளது போல் rewind பட்டன் இருந்தால் எவ்வளவு அழகாக இனிக்கும். 


நண்பர்கள் அனைவருக்கும் இனிப்பான பொங்கல் வாழ்த்துகள். 


இனிப்புடன் 

ராஜா.க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக