புதன், 8 ஜூலை, 2020

பழைய குற்றாலம்

பழைய குற்றாலம் வரலாறு

வருடா வருடம் குற்றாலம் செல்வது வழக்கம்.இந்த முறை சனிக்கிழமை சென்றதால் கூட்டம் கொஞ்சம் அதிகம் மேலும் அருவிகளில் நீர்வரத்தும் கொஞ்சம் கம்மி, ஆதலால் பழைய குற்றாலத்தில்லேயே  வரிசையில் நிப்பாட்டி தான் குளிக்க அனுமதிக்க பட்டோம்.

எல்லாம் நன்மைக்கே என்பது போல் வரிசையில் நடந்து கொண்டே சென்றோம், அதில் ஒரு கல்வெட்டு பொறிக்க பட்டிருந்தது. படிக்க ஆரம்பித்தேன் இந்த அருவி 1960ல் தமிழக முதலமைச்சர் திரு.காமராஜர் அவர்களால் திறக்க பட்டதென்று..

சற்று வியந்து தான் போனேன்,பிறகு பாறைகளை அழகாக வெட்டி அருவியை உருவாக்கி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். இன்று அந்த அருவியால் அரசுக்கு டோல் கட்டணம், நிறைய கடைகள் அதை நம்பும் வியாபாரிகள் அவர்களது குடும்பம் என்று அனைவரையும் இன்று வரை வாழவைக்கிறார் கர்ம வீரர் திரு. காமராஜ்.

இவண்
ராஜா.க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக