செவ்வாய், 5 மே, 2020

வியட்நாம் வீடு

பொதுவாக பழைய (MGR,Sivaji)
Black & white காலத்து திரை படங்களை விருப்பப்பட்டு பார்த்ததில்லை இயக்குனர் திரு.பாலச்சந்தர் படங்கள் மட்டும் விதிவிலக்கு.

“வியட்நாம்காலனி” காமெடி என்று YouTube தேடுகையில் “வியட்நாம்வீடு” என்று படம் கிடைத்தது; தலைப்பு கொஞ்சம் வித்யாசமாக உள்ளதே என முடிவெடுத்த்து சரி கொஞ்ச நேரம் பார்ப்போம் என அவ்வீட்டிற்குள் சென்றேன்.

கதையின் நாயகன் கடுமையாக உழைத்து புதிய வீட்டிற்கு கிரஹ பிரவேசத்துடன் நம்மையும் அவன் வீட்டிற்குள் அழைத்து செல்கிறான். படம் ஆரம்பமாகிறது.

வீட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று விவாதம் நடக்கிறது,.
ஒவ்வொருவரும் ஒரு பெயர் சொல்ல சிறிய போரே நடக்கிறது. எப்போதும் சண்டையும், சச்சரவுமாக இருப்பதால் “வியட்நாம்” வீடு என்று வைத்து விடுகிறான் வீட்டின் தலைவன் பத்மநாபன் sorry “prestige”பத்மநாபன்.

சிறு வயதிலேயே தந்தையை இழந்து, தாய் வீட்டு வேலை செய்து இருக்கும் வீட்டை விற்று அவனை வளர்க்கிறாள், ஒரு கட்டத்தில் அவளும் இல்லை அத்தையின் உதவியுடன் வாழ்க்கையில் கரை சேர்ந்து விற்ற வீட்டயே  வாங்குகிறான். கைமாறாக அத்தையின் மகளையே மணக்கிறான்.
(அந்த காலத்தில மாப்பிள்ளைக்கு அவ்வளவு டிமாண்ட் போல).

ஒழுக்கம்,நேரம் தவறாமை, அலுவலகத்திற்கு போன் செய்கிறாள் மனைவி, இது வீடு என்று நினைத்தாயா இது office no personal என கடித்து prestige பத்மநாபனாக வாழ்கிறார் சிவாஜி. ஒரு இடத்தில் கூட மிகையான நடிப்பு என்று கூற முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பு.

இந்த சத்யவானுக்கு உற்ற துணையாக சாவித்ரியாகவே வாழ்கிறாள் பத்மினி. மடிசார் புடவையும்,கண்களை உருட்டுவதும்,சிரிப்பு,அழுகை என கொள்ளைஅழகு.

மனைவியை கண்டு பம்மும் ஒரு மகன், படித்து கொண்டே (பெயிலாகி ,பெயிலாகி) இருக்கும் இன்னொரு மகன், செல்ல மகள் என நாயகனுக்கு மூன்று பிள்ளைகள்.

மனைவிக்கு பெட்டிலேயே காபி கொடுப்பது அவள் சொல்லிற்கு தலையாட்டுவது என இக்கால கணவனாகவே வாழ்கிறார்(ஶ்ரீகாந்த்).

காலேஜ் கட் அடித்தல்,வீட்டிலேயே திருட்டு, வட்டி காரனிடம் கடன்,
பொய் என மாணவனாக பின்னுகிறார் இன்னொரு மகன் (நாகேஷ்).

கல்லூரி காலத்தில் காதலில் விழும் செல்ல மகள் என மூவரும் முக்கோனம்.

தன் வேலையிலிருந்து வயது மூப்பின் காரணமாக ரிட்டையர்டு ஆகிறார் பத்மாநாபன். தனிமை வாட்டுகிறது.

லஞ்சம் வாங்கி மாட்டி கொள்கிறார் ஶ்ரீகாந்த். மாமனார்( நீதிபதி )உதவியுடன் தப்பித்து விடுகிறார்.  வீட்டில் prestige தான் போய்டுத்து என நினைத்தேன், Justice உம் போய்டுத்து போலயே என Sharp வசனங்கள்.

இவை அனைத்தும் எப்படி சீறானது  இறுதியில் என்ன நடந்தது ? என்பதை
மிக அழகாகவும்,ரசிக்கம்படியும் கூறி பார்க்கும் நம் இதயத்தையும் சற்று பலவீனப்படுத்திவிட்டார்
Prestige பத்பநாபன்.

ரசிகன்
ராஜா.க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக