திங்கள், 25 மே, 2020

செண்டிமெண்ட்

செண்டிமெண்ட்

இந்த வார்த்தைக்கும் நம்ம தமிழ் சினிமாவிற்கும் உள்ள தொடர்பு
“அம்பானிக்கும்,ஐபில் கப்பிற்கும்” உள்ள தொடர்பு போல் உறுதியானது, பிரிப்பது கொஞ்சம் கஷ்டம்.

இந்த மாதிரி செண்டிமெண்ட் ஷங்கர், மனிரத்தனம் போன்ற ஆளுமைகளை போல விட்டு வைப்பதில்லை. இயக்குனர் மணிரத்தனம் படங்களில் பார்த்திந்திங்கனா “Bus(பேருந்து)” ஒரு செண்டிமெண்ட்.

படத்தோட கதாநாயகனும்,
கதாநாயகியும் பேருந்தில் அமர்ந்து பேசி கொள்வதை போல் சில காட்சிகளை வைத்திருப்பார். அந்த காட்சி மிக இயல்பாகவும், ரொமெண்டிக்காகவும் இருக்கும்.

மெளனராகம் தொடங்கி அலைபாயுதே,ஆயுத எழுத்து,கடல்,
ஒ காதல் கண்மணி படங்கள் வரை காட்சிகள் தொடர்கிறது.

இது போல train  சில படங்களில் வரும்,ஹீரோ clean shave பண்ணியிருப்பார். இதையெல்லாம் சில குறியீடுனு கூட சொல்லுவார்கள்.

இயக்குனர் சுந்தர்.C யோட நிறைய படங்களில் உருட்டு கட்டை வரும்

பொதுவாக நம்ம எல்லாருக்கும் கூட இந்த மாதிரி சின்ன,சின்ன செண்டிமெண்ட் இருக்கும். இந்த மாதிரி பண்னினா success ஆகி இருக்கும், அதே அப்படியே எப்பவும் follow பண்னுவோம்.

வாழ்க்கைனா சில செண்டிமெண்ட்ஸ்கள் இருக்க தானே செய்யும்.

இவண்
ராஜா.க

செவ்வாய், 19 மே, 2020

லவ் டுடே

90 களில் நடந்த காதலை அழுத்தமாக கூறிய படம்.

கம்யூட்டர் class, பஸ் டாப்பில் காத்திருப்பு, வாட்ச்சில் காதலியின் புகைப்படம்.

பட்டி தொட்டி எங்கும் ஒலித்த
என்ன அழகு,ஏன் பெண் என்று பிறந்தாய் பாடல்.

நம் நட்பு வட்டாரத்தில் கண்டிப்பாக இது போன்ற கணேஷ் பார்த்திருப்போம்.

இப்போது இப்படத்தை பார்த்து
சிலர் சிரிக்கலாம்,
சிலர் ரசிக்கலாம்

#லவ்டுடே

ஞாயிறு, 17 மே, 2020

திருமலையும், விவேக்கும்

திருமலை படத்தோட shooting எல்லாம் முடித்துவிட்டு first copy அடிப்படையில் படத்தோட
producer இயக்குனர் பாலசந்தர் படம் திரையிடபட்டது,
படம் பார்த்தவர் படத்தில் Relaxation மிஸ்லிங் என கூற பின்னர் விவேக்கின் காட்சி தனி track இல் படமாக்கபட்டிருக்கும்.

பெயருக்கு இரண்டு காட்சிகளில் விஜயும்,விவேக்கும் சேர்ந்திருப்பார்கள். 

அவர் கணிப்பு படி படத்தில் விவேக்கின் காமெடி நல்ல Relaxation ஆக இருக்கும்.

இயக்குனர் சிகரம்னா சும்மாவா ??

#KB

வெள்ளி, 15 மே, 2020

பசி என்னும் கலி

இந்திய நாட்டின் பட்ஜெட் தொகை
மதிப்பீடு 200 இலட்ஷம் கோடி யாம்
அதில் 10% என்பது 20 இலட்ஷம் கோடி அதை special package  திட்டம் என்று கூறி திட்டங்களை அடுக்கினார் நிதி அமைச்சர்.

சமானியனாக ஒரு கேள்வி எழுகிறது , இந்த பணம் நேரடியாக அடி மட்டத்தில் உள்ள குடிமகனாக சென்று அடைய முடியுமா ? என்றால் முடியாது. ஏன் ?

சிறிய வயதில் நாம் அனைவரும் செடிக்கு தண்ணீர் விட்டுருப்போம், அதில் சிலர் விவரம் தெரியாமல் செடியின் மேலிருந்து செடியின் இலைகளுக்கு தண்ணீரை கொட்டுவார்கள். அவ்வாறு செய்கையில் மேலை உள்ள செடிக்கு தண்ணீரில் நனையும்.ஆனால் ஒட்டுமொத்த செடியும் வளரும் என்று நினைத்தால் அது நம் தவறு.

அது போலவே அரசின் இந்த செயல்பாடும் இருக்கும் என நினைக்க தோன்றுகிறது.

என்ன செய்திருக்க வேண்டும் ?

200இலட்ஷம் கோடி அதில் 1%
2இலட்ஷம் கோடியை 
68000₹ கோடி வீதம்
மூன்று மாதங்களில் 
6000₹ (ஒவ்வொரு மாதம் )
வழங்கினால்
11ஆயிரம் கோடி குடும்பங்கள் நேரடியாக பயன்பெறும். ஒரு குடும்பத்தில் 4 நபர்கள் என்றாலும் 44000 கோடி மக்கள் பயன்பெறுவர்கள்.

அவர்கள் account இல் நேரடியாகவே பணத்தை போடலாம் அதற்கு வழி வகையும் உள்ளது பிரதமரின்( Nil Balance account ).
கீழே உள்ளவர்களிடத்தில் பணம் சென்றால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும் மேலும் பண சுழற்சியும் அனைத்து மட்டங்களிலும் நடக்கும்.

மூன்று மாதத்திற்கு பிறகு நிலைமை சீரைடையும் வழக்கமான தொழிலை
செய்து அவர்கள்  பிழைத்து கொள்வார்கள்.

நான் மேல் கூறிய உவமையோடு ஒப்பிடுகையில் செடியின் வேர்களில் தண்ணீர் விடுகையில் ஒட்டு மொத்த செடியும் வளறும். அது போல மக்களை கோரானா என்ற கொடூரனோடு அல்லாமல் பசி என்ற கலியிடமிருந்து கூட காப்பாற்றியிருக்கலாம்.

இவன்
சாமானியன்.

திங்கள், 11 மே, 2020

கோவிந்தா கோவிந்தா


தனது வங்கியில் சேமிப்பு கணக்கு
வைத்துள்ள ஒருவருக்கு மாதாமாதம் வட்டி கொடுக்க பணம் இல்லாத காரணத்தால், பணத்துக்கு நிகரான தங்கமாக வரவு வைத்துள்ளது அந்த வங்கி.

வங்கியின் பெயர் நினைவில்லை,
அந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தவர் திருப்பதி தேவஸ்தானம்.

இன்று அவர்களால் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலவில்லை என்ற செய்தி படிக்கையில், வருத்தம் கலந்த சிரிப்புடன்
இந்த பாட்டு
தான் நினைவுக்கு
வருகிறது.

"திருப்பதி, ஏழுமலை,வெங்கடேசா என்ன இது ?"
"இந்த காசு எல்லாம் வைச்சு என்ன பண்ணறது "

கொரானா என்ற கொடூரனை கூட தங்கள் தேவைக்கு உபயோக படித்தி கொள்கிறார்கள் நம் கலியுக சக்கரவர்த்திகள்.

புதன், 6 மே, 2020

மகிழ்மதியும் அஸ்தினாபுரமும்...

மகிழ்மதியும் அஸ்தினாபுரமும்...

அஸ்தினபுர நகரத்தின் கட்டமைப்பு, மன்னர்கள்,நாட்டின் இராணுவ படை,மக்கள் இவைகளை படித்து இருக்கிறேன். அதை  கண்ணுக்கு விருந்தாக்கிய "கலை இயக்குனர்" சாபு சரீல் க்கு முதல் சபாஷ்.

கதை: பங்காளி சண்டை அரியனையில் அமர்வதற்கு, (மகாபாரதம்)தான்.
அந்த ஒரு வரி கதையை தனக்குரிய தனித்துவத்துடன்; திரைக்கதையை வேகமாகவும்,விவேகமாகவும் காட்சிகளை அமைத்து; ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தன் திரைக்கதையால் வலிமை சேர்த்து,  ரசிகனை இறுதி வரை இருக்கையில் அமர வைத்த இயக்குனர்.
"இராஜ மெளலி" யே மகிழ்மதியின் சக்கரவர்த்தி.

கதா நாயகனின் வெற்றி தன்னை விட பலமுள்ள, அழுத்தமான தனக்கு நேரெதிரான எண்ணம் கொண்ட (வில்லனை) எதிரியை வெற்றி கொள்வதே; அப்படி ஒரு வாய்ப்பை நாயகனுக்கு நல்கிய
 "பல்வாள் தேவன்" ராணா வும் நாயகனே.(துரியோதனின் குணாதிசியம்).

அரசன் என்பவன் இப்படி தான் இருந்திருப்பான் என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டாக தன்னை உடலளிவிலும்,மனதளவிலும் வடிவமைத்து  கொண்ட கதையின் நாயகன் பிரபாஸ். (அர்ச்சுனனை நினைவு கூறுகிறான்)

 "ராஜ மாதா"சிவகாமி தேவி,
"இளவரசி" தேவைசேனை
நெடு நாட்களுக்கு பிறகு சினிமாவில்  ஆண்களுக்கு நிகராக அல்ல,
அதற்கும் மேலான கதாபாத்திரத்தில்
"இரட்டை குழல்" துப்பாக்கியாக
வெடிக்கின்றனர்.

கட்டப்பா கதாபாத்திரம் பிதாமகர் பீஷ்மரைய நினைவுபடுத்துகிறது. அரசின் அடிமை. மனிதர் கலக்கியிருக்கிறார் தன் வழக்கமான நக்கல் பேச்சில்.

வீரம் கலந்த விவேகமான போர் கள காட்சிகள்,கார்க்கியின் வசனம்,கீரவாணியின் பிண்ணனி இசை படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது.

பாடல்கள் மனதில் நிற்கவில்லை
தமிழ் கவிஞர்களுக்கும், தமிழ் வரிகளுக்கும் பஞ்சமா என்ன பாடல்களுக்கு ??கட்டப்பா கதாபாத்திரத்தை "நாய்" என்ற வார்த்தையை (பல முறை )தவிர்த்திருக்கலாம்.

திரைப்படம் முடிந்து எழுந்து செல்கையில் ரசிகனையும்
 "ஜெய் மகிழ்மதி" என கோஷம் போட வைத்துவிட்டான்.

இந்த "பாகுபலி ..."

அட்சய திருதியயை

அட்சய திருதியயை

சித்திரையின் வளர்பிறை இரண்டாம் நாள்
(வளர் துவிதையை).

"அட்சய" உணவு;
இந்நாளில் மாதவியின் மகள் மணிமேகலை உணவில்லா ஏழைகளுக்கு உணவு வழங்கினாள்.

கால வாக்கில் அதை அப்படியே மாற்றி தங்கம் வாங்குங்கள் எங்களிடம்
"செய்கூலி இல்லை,சேதாராம் இல்லை .." ஏனைன்றால் இது தங்கமே இல்லை !!!என்ற அளவிற்கு விளம்பர படுத்தி வரலாற்றேயே மாற்றி விட்டனர் நம் வியாபார காந்தங்கள்(Business Magnates).

ஆதலால் அட்சய திருதியை நாளான இன்று இயலாதவர்களுக்கு உணவு கொடுத்து அவர்களின் மனமும், வயிறும் நிரம்பும் படி செய்வோம்.

#அட்சயதிருதியை

இவண்
ராஜா.க

செவ்வாய், 5 மே, 2020

வியட்நாம் வீடு

பொதுவாக பழைய (MGR,Sivaji)
Black & white காலத்து திரை படங்களை விருப்பப்பட்டு பார்த்ததில்லை இயக்குனர் திரு.பாலச்சந்தர் படங்கள் மட்டும் விதிவிலக்கு.

“வியட்நாம்காலனி” காமெடி என்று YouTube தேடுகையில் “வியட்நாம்வீடு” என்று படம் கிடைத்தது; தலைப்பு கொஞ்சம் வித்யாசமாக உள்ளதே என முடிவெடுத்த்து சரி கொஞ்ச நேரம் பார்ப்போம் என அவ்வீட்டிற்குள் சென்றேன்.

கதையின் நாயகன் கடுமையாக உழைத்து புதிய வீட்டிற்கு கிரஹ பிரவேசத்துடன் நம்மையும் அவன் வீட்டிற்குள் அழைத்து செல்கிறான். படம் ஆரம்பமாகிறது.

வீட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று விவாதம் நடக்கிறது,.
ஒவ்வொருவரும் ஒரு பெயர் சொல்ல சிறிய போரே நடக்கிறது. எப்போதும் சண்டையும், சச்சரவுமாக இருப்பதால் “வியட்நாம்” வீடு என்று வைத்து விடுகிறான் வீட்டின் தலைவன் பத்மநாபன் sorry “prestige”பத்மநாபன்.

சிறு வயதிலேயே தந்தையை இழந்து, தாய் வீட்டு வேலை செய்து இருக்கும் வீட்டை விற்று அவனை வளர்க்கிறாள், ஒரு கட்டத்தில் அவளும் இல்லை அத்தையின் உதவியுடன் வாழ்க்கையில் கரை சேர்ந்து விற்ற வீட்டயே  வாங்குகிறான். கைமாறாக அத்தையின் மகளையே மணக்கிறான்.
(அந்த காலத்தில மாப்பிள்ளைக்கு அவ்வளவு டிமாண்ட் போல).

ஒழுக்கம்,நேரம் தவறாமை, அலுவலகத்திற்கு போன் செய்கிறாள் மனைவி, இது வீடு என்று நினைத்தாயா இது office no personal என கடித்து prestige பத்மநாபனாக வாழ்கிறார் சிவாஜி. ஒரு இடத்தில் கூட மிகையான நடிப்பு என்று கூற முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பு.

இந்த சத்யவானுக்கு உற்ற துணையாக சாவித்ரியாகவே வாழ்கிறாள் பத்மினி. மடிசார் புடவையும்,கண்களை உருட்டுவதும்,சிரிப்பு,அழுகை என கொள்ளைஅழகு.

மனைவியை கண்டு பம்மும் ஒரு மகன், படித்து கொண்டே (பெயிலாகி ,பெயிலாகி) இருக்கும் இன்னொரு மகன், செல்ல மகள் என நாயகனுக்கு மூன்று பிள்ளைகள்.

மனைவிக்கு பெட்டிலேயே காபி கொடுப்பது அவள் சொல்லிற்கு தலையாட்டுவது என இக்கால கணவனாகவே வாழ்கிறார்(ஶ்ரீகாந்த்).

காலேஜ் கட் அடித்தல்,வீட்டிலேயே திருட்டு, வட்டி காரனிடம் கடன்,
பொய் என மாணவனாக பின்னுகிறார் இன்னொரு மகன் (நாகேஷ்).

கல்லூரி காலத்தில் காதலில் விழும் செல்ல மகள் என மூவரும் முக்கோனம்.

தன் வேலையிலிருந்து வயது மூப்பின் காரணமாக ரிட்டையர்டு ஆகிறார் பத்மாநாபன். தனிமை வாட்டுகிறது.

லஞ்சம் வாங்கி மாட்டி கொள்கிறார் ஶ்ரீகாந்த். மாமனார்( நீதிபதி )உதவியுடன் தப்பித்து விடுகிறார்.  வீட்டில் prestige தான் போய்டுத்து என நினைத்தேன், Justice உம் போய்டுத்து போலயே என Sharp வசனங்கள்.

இவை அனைத்தும் எப்படி சீறானது  இறுதியில் என்ன நடந்தது ? என்பதை
மிக அழகாகவும்,ரசிக்கம்படியும் கூறி பார்க்கும் நம் இதயத்தையும் சற்று பலவீனப்படுத்திவிட்டார்
Prestige பத்பநாபன்.

ரசிகன்
ராஜா.க