சனி, 11 ஏப்ரல், 2020

IPl ம் மசாலாவும்

சினிமாவில மட்டுமல்ல எல்லாவற்றிலும்   மசாலா கேட்கறாங்க நம் மக்கள் என்று கூறுவார் நம்மவர் கமல்
வசூல் ராஜா MBBS திரைப்படத்தில்.

அது போல் IPL கிரிக்கெட்டிலும் cheers girls, dance,வீரர்களுகிடையே சண்டை,அழுகாட்சி என மசாலாக்களை தூவி திறம்படி வெற்றிகரமாக நடத்தி வருகிறது IPL நிர்வாகம்.

இது மட்டும் போதாது என்று நினைத்து உள்ளது போலும், மேலும் சில பல சுவாரசிய நிகழ்ச்சிகளை அறங்கேற்றுகிறது. எந்த ஒரு விளையாட்டிலும் சில rules and regulations இருக்கும் அதையும் மீறுகையில் தான் அது விவாத பொருளாகிறது.

நமக்கு பிடித்த அணி, நமக்கு பிடித்த ஆட்டகாரர் என்பதால் அவர் செய்தது சரி என்றாகிவிடாது.

அவுட் ஆகி சென்றவர் மீண்டும் மைதானத்துக்குள் வருவதே தவறு. அதிலும் ஒரு கேப்டன் உள்ளே வந்து அம்பையரிடம் வாக்குவாதம் செய்வது தவறான எடுத்துகாட்டு .

பிறகு களத்தில் எதற்கு இரண்டு நடுவர்கள் ? 3ம் நடுவர் எதற்கு ?  வெறும் 50% அபராதத்துடன் அதிலிருந்து வெளியே வரவேண்டுமெனில், அந்த கேப்டன் தோனியாக இருக்க வேண்டும். மேட்ச் இந்தியாவில் தான் நடக்க வேண்டும்.

கிரிக்கெட்டில் பல நல்ல நுட்பங்களை சக வீரர்களுக்கு கற்று கொடுக்கும் வீரர் இது போன்றவைகளை தவிர்த்துருக்கலாம். நாளை இது போல் மற்ற அணி வீரர்களும் இதை பின் தொடர்ந்தால் gentlemen game சிறுபிள்ளை விளையாட்டாகி விடும்.

விசில் போடுவோம்
ராஜா.க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக