தீபாவளி பண்டிகை க்கு முந்தைய வாரங்களில்( குறிப்பாக கடைசி இரு நாட்களுக்கு முன் )கடை தெருக்களுக்கு செல்வது வழக்கம், அனைத்து கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழியும் குறிப்பாக துணி கடைகளில் பல அதிரடி offer களை காணலாம்.
துணி கடைகள் மட்டுமின்றி நகை கடை, ஸ்விட் (லாலா) கடைகள் வரைக்கும் இது பொருந்தும். அனைவரும் இது போன்றதொரு உணர்வை உணர்திருப்போம்.
இது வரையில் பொங்கலுக்கு புது துணி எடுத்தது கிடையாது. சரி இந்த முறை ஒரு மாற்றத்திற்காக எடுப்போம் என்று பொங்கலுக்கு முந்தைய நாட்களில் கடைகளுக்கு சென்றேன், சற்று சிறிய அதிர்ச்சி. தீபாவளி பண்டிகையை போல் அல்லாமல் குறைவான மக்கள் நடமாட்டமே இருந்தது. அதிரடி offer களையும் காணமுடியவில்லை.
ஒரு காலத்தில் பொங்கலுக்கு தான் தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் புது துணி எடுத்து மகிழ்ச்சி பொங்க பொங்கல் கொண்டாடியது நினைவுக்கு வந்தது.
ஒருவேளை சென்னை போன்ற பெருநகரங்களில் பொங்கலுக்கு, தீபாவளிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கொடுக்கவில்லையா ? இல்லை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாறும் ஆட்சி மாற்றத்தை போல மாறுகின்ற கலாச்சார மாற்றமா ? இல்லை உலக மயமாக்கலுக்கு பிறகு( 1991க்கு பிறகு) பெருகி வரும் பண்டிகைகளால்( New Year, Christmas, ஆடிக்கழிவு, weekend shopping) இவற்றின் வருகைகளுக்கு அப்பால் தன் அடையாளம் மறக்கிறானா தமிழன் என என்ன தோன்றுகிறது.
அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
இவன்

ராஜா க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக