சுவாதியால் ரோகிணிக்கு என்ன பயன் ?
கடலில் உள்ள சிப்பி என்னாலும் முத்துக்களை தர இயலாது; சுவாதி நட்சத்திரதிர நாளில் தான் சிப்பி தன் வாயை பிளந்து மழை நீரை உட்கொண்டு முத்தாக மாறும்; ஆதலால் சுவாதிக்கு எப்போதும் தன்னால் தான் முத்து உருவாகும் என்ற பெருமை.
அத்தோடு நிற்காமல் தன் தோழியான ரோகினியை பகடி செய்யும், உனக்குரியா நாளில் யாது ஒரு சிறப்பும் இல்லையே என்று. மன வருத்தம் அடைந்த ரோகினி பெருமாளை நோக்கி கடும் தவம் புரிந்தாள்.
பெண்கள் தவம் புரிய கூடாது என்பதால், மனமுருகிய பெருமாள் ரோகினியிடம் எதற்காக என கேட்க நடந்தை கூற பெருமாள் ஒரு வரம் அளித்தார். என் அடுத்த அவதாரமான கிருஷ்ணா அவதாரத்தில்
“ முத்து கிருஷ்ணனாக“ ரோகினி நட்சத்திரத்தில் அவதரிக்கிறேன் என்றார்.
மகிழ்ச்சி அடைந்தாள் “ரோகிணி”
அனைவருக்கும் கோகுல அஷ்டமி நல்வாழ்த்துகள் 😊
இவண்
ராஜா கண்ணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக