வியாழன், 28 டிசம்பர், 2017

குரு” பார்வையால் கூட்டணி மாற்றமா ?


“குரு” பார்வையால் கூட்டணி மாற்றமா ?

சமீபத்திய நிகழ்வுகள் 2G case தீர்ப்பு,
RK nagar ல் தினகரன் வெற்றி,
தமிழக முதலவ்ர் மற்றும் துனை முதல்வரை பற்றி auditor குருமூர்த்தியின் அநாகரிக ட்வீட் விமர்சனம் impotent.

இம்மூன்று நிகழ்வுகளும் எதேச்சையாகவோ , திட்டமிட்டோ நடந்த சம்பவங்களாக இருப்பினும் தமிழகத்தில் ஏற்பட இருக்கும் கூட்டணி மாற்றத்திற்கான சமிக்ஞை யாகவே தெரிகிறது.

ஆடிட்டர் குரு மூர்த்தி என்ன தான் அந்த (impotent)வார்த்தைக்கு விளக்கம் கொடுத்தாலும் வலுத்த கண்டணத்துக்குரியது.

2014 பாராளுமன்ற தேர்தல் பரப்புரையில் திரு.சல்மான் குர்ஷித் இன்றைய பிரதமரும் அன்றைய குஜராத் முதல்வரையும் இதே வார்த்தையை பிரயோக படுத்துகையில் ஓட்டு மொத்த பாஜக வும்  கொந்தளித்தது விளைவு மன்னிப்பு கோரினார் அது அரசியல் நாகரீகம்.

இன்று அதே போன்ற சம்பவம் தட்டி கேட்க வேண்டியர்வர்கள் திரு.மன்மோகன் சிங் mode ல் உள்ளனர். பிரதான எதிர்கட்சி தலைவர் கட்சி வேறுபாடு கலைந்து குரல் கொடுத்திருந்தால் அவரின் மதிப்பு கூடியிருக்கும் அதுவும் மிஸ்.

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பார்கள், சூரியனின் பார்வை தாமரை மீது விழுவது போல் உள்ளது.

அப்படி விழுவதற்கான சரியான நேரமும் தருணமும் இதுவல்ல, என்பது என் போன்ற அரசியலை பார்த்து கொண்டிருக்கும் குழந்தைக்கு தெரிந்தது எப்படி கோபாலபுரத்திற்கு தெரியாமல் இருக்கிறது என்பது வியப்பாக உள்ளது.

வடிவேலுவின் காமெடி ஓன்றில் அவரை அனைவரும் அடிப்பார்கள் ஏனேன்று கேட்கையில் வார்டன் என்றால் அடிப்போம் என்பார்கள். அது போன்று இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் பிஜேபி யுடன் கூட்டணி வைத்தால் சென்ற முறை சட்டமன்ற தேர்தலில் செய்த அதே தவறை (காங்கிரஸ் கூட்டணி ) செய்வதற்கு சமம்.

சூரியன் தன் பார்வையை தாமரை மீது செலுத்துமா ? பிரிந்த இலைகள் சேர்ந்து  கையுடன் கை கோர்க்குமா ?

காலத்துடன் பயணிப்போம்
ராஜா.க

சனி, 9 டிசம்பர், 2017

சத்யா என் பார்வையில் !!!


முன்னாள் காதலிக்கு உதவ  நினைக்கும் கதா நாயகன் வெற்றி பெற்றனா ?
என்பதை விறு விறுப்பான திரைக்கதை கொண்டு வெற்றியடைய வைத்துவிட்டார்கள்.

மகா நடிகனின் மகனான சிபிராஜ்க்கு சொல்லி கொள்ளும் படியான திரைப்படம்.

மகளாக,காதலியாக,அம்மாவாக சிறப்பான நடிப்பை வெளிகாட்டியுள்ளார் ரம்யா நம்பிசன்.

சீரியசனா,சிரிப்பு போலிசாக கலந்து கட்டி அசல்ட்டாக நடிக்கிறார் ஆனந்தராஜ்.

வரலெட்சுமி கதாபாத்திரம் கனகட்சிதம்.

சிறிது நேரம் வந்தாலும் சிரிக்க வைக்கும் யோகி பாபு.

கலாசார்த்தை சிதைத்து த்ரிலிங் க்ளைமாக்ஸ் சிறு நெருடல்.

#சத்யா

செவ்வாய், 5 டிசம்பர், 2017

தொட்டு தொடரும் பாரம்பரியமா ???

தொட்டு தொடரும் பாரம்பரியமா ???


அகில இந்தியா தேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுபேற்க  உள்ள  திரு.ராகுல் காந்தி அவர்களுக்கு வாழ்த்துகள்

இன்று இந்தியாவை உலக அரங்கில் 
ஜனநாயக நாடாக தலை நிமிர செய்ததில் காங்கிரஸின் பங்கு இன்றியமையாதது.
அக்கட்சியின் மத சார்பின்மை கொள்கை, சிறுபான்மை மக்களின் நலன் பேணுதல் அதன் மணிமகுடத்தில் ஒருவைரக்கல்

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவர்கலால் நேரு அக்கொள்கையில் சிறிதும் சமரசம் செய்து கொள்ள வில்லை.
அகதிகளாக இந்தியா வந்த பார்சிகள்,யூதர்கள்,திபெத்தியர்கள் என அனைவரையும் அன்புடன் வரவேற்று  அடைக்கலம் கொடுத்த அற்புத பூமி

இத்தகைய பெருமைகள் கொண்ட இக்கட்சியின் தலைமை பண்பும்,
இந்திய நாட்டின் உச்ச பட்ச 
அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியும் 
ஒரு குடும்பத்தில் உள்ள ஓருவருக்கே வாழையடி வாழையாக கிடைப்பது சிறிது மன்னராட்சியை நினைவுபடுத்தினாலும் ஆச்சர்யபட ஏதேதுமில்லை!!! 

நேரு தொடங்கி அவரின் மகள் திருமதி.இந்திரா அவரின் மகன் 
அமரர் திரு.ராஜிவ் அவரின் மகன்
திரு.ராகுல் என தொடர்கிறது

அக்கட்சி வரலாற்றை படிக்கையில் அதீத திறமை உள்ள நபர்களுக்கு பஞ்சம் இல்லை. திரு.வல்லபாய் படேலில் தொடங்கி, திரு.லால் பகதூர் சாஸ்திரி,திரு.காமராஜ்,
திரு.மன்மோகன் சிங்,பா.சிதம்பரம்,திரு.ராஜசேகர ரெட்டி இவர்கள் தம் தம் துறையில் சாதித்தாலும் முழுதான தலைமை பண்பை அடையவில்லை என்பதே நிதர்சன உண்மை.

நாட்டின் மற்றொரு கட்சியான பா.. இதில் சிறிது வேறு பட்டுள்ளது. தலைமையும் சரி,பிரதமர் பதவியும் சரி கட்சியிலும் மக்கள் மன்றத்திலும் தன் திறமையை நிருபித்தால் தனி அங்கிகாரம் கிடைக்கிறது

காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் நிகழ்கையில்
காங்கிரஸ் மட்டும் என்ன 
விதிவிலக்கா என்ன !!! 

காலத்துடன் பயணிப்போம்
ராஜா.