Tea Talkies – ஒரு வெள்ளி இரவு
Tea Talkies.
A cinematic café.
இந்த பெயரே ஒரு முன்னுரை போல இருந்தது.
அங்கே நான் peri peri fries order பண்ணியிருந்தேன்.
French fries-க்கு cuisine இருக்கா என தெரியாது.
ஆனா அந்த fries, அந்த இரவு,
சென்னை குளிர்ந்த காற்றோடு
தூரல் மழை கலந்து
சரியான இடத்தில் வந்து சேர்ந்திருந்தது.
OMR சாலை.
வாரத்தில் ஐந்து நாள் வேலை செய்து
அடுத்த இரண்டு நாட்கள்
ECR-ல் செலவு செய்பவர்களின் பகுதி என்று
எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது.
இப்போது அந்த வாழ்க்கையை
நான் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தேன்.
கடையை சுற்றி கண்ணாடி.
உள்ளே… இன்னொரு கண்ணாடி அறை.
அதற்குள் நான்.
உள்ளிருந்து
வெளியே போகும் வாகனங்களை
அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன்.
வெள்ளி இரவு.
மணி 11.
முன்னால் இரண்டு நாட்கள் விடுமுறை.
இந்த freedom-ஐ monetize செய்ய
OMR-ல் இப்போது
எண்ணிக்கையில்லா கடைகள்.
கடைக்குள்
“ஒரு தடவை சொல்வாயா…”
Vintage Vijay-யின் Vaseegara
மெல்ல ஒலித்துக் கொண்டிருந்தது.
Time machine இல்லாமலே
அந்தப் படம்
என்னை தன் காலத்துக்கு அழைத்துச் சென்றது.
பாடல் முடியும் தருணத்தில்
“Sir… your order”
என்று waiter சொன்னான்.
நிகழ்காலம்
திரும்ப கை பிடித்து இழுத்தது.
அந்த waiter-க்கு வயசு ரொம்ப சின்னது.
அவன் “Sir”னு சொன்னது சரிதான்.
ஆனா “Bro”னு சொல்லி இருந்தா
என் சந்தோஷம்
இரட்டிப்பு ஆகி இருக்கும்.
சின்ன வயசுல
பெரியவன் ஆகணும்னு ஆசை படறதும்…
பெரியவன் ஆனதும்
சின்ன பையன் ஆகணும்னு ஆசை படறதும்
மனித இயல்பு தானே?
மொறு மொறு fries.
ஒரு கடி.
அட… அருமை.
எனக்கு ஒரு பழக்கம்.
சாப்பாடு உண்மையிலேயே சுவையா இருந்தா
கண்ணை மூடி
அதை ரசிப்பேன்.
அந்த இரவு
அதுவே நடந்தது.
உடனே
“Super bro…”
ன்னு சொன்னேன்.
அவன் முகத்துல
சின்ன சந்தோஷம்.
ஆனா உண்மையானது.
அம்மா சொல்வாள்:
“நீ சமைச்சவங்களை மறக்காம பாராட்டுவ.
மற்றவர்கள் மாடு போல தின்னிட்டு போயிடுவாங்க.”
அந்த வார்த்தைகள்
மனசுக்குள் மெதுவா வந்தது.
உருளைக்கிழங்கு மீது எனக்கு இருக்கும் விருப்பம்
அம்மாவிடமிருந்து தான்.
சின்ன வயசுல
அவள் ஆரம்பித்தது,
இன்று French fries வரை வந்திருக்கிறது.
அதனால்தான் என்னவோ,
நானும் இப்போது
உருளை போல
கொஞ்சம் குண்டா ஆயிட்டேன்.
வருடம் தொடங்கும்போது
“இந்த வருஷம் weight குறைக்கணும்”
ன்னு சொன்ன வாக்குறுதி,
அரசியல்வாதிகளின் வாக்குறுதி போல
ஜனவரி லேயே
காலாவதி ஆனது.
Fries கொரித்துக் கொண்டே
வழக்கம் போல
எதிர்காலத்தை பற்றி
சிந்திக்க ஆரம்பித்தேன்.
சிரிப்பு வந்தது.
“எதை இழந்தாலும்
உன் நம்பிக்கையை இழக்காதே”
ன்னு
என் பாட்டி
சின்ன வயசுல சொன்ன வார்த்தைகள்
மனசுக்குள் ஒலித்தது.
இந்த memes உலகில்,
கவுண்டமணி
ஒட்டக்கண்ணாடி போட்டுக்கிட்டு
எப்படி தைரியமா நிக்கறியோ
ன்னு
ரஜினிகாந்த் கேட்பார் இல்லையா…
அந்த மாதிரி
நானே எனக்கே
“நீ ரொம்ப தைரியசாலி”
ன்னு சொல்லிக்கிட்டு
சிரிச்சுக்கிட்டேன்.
அந்த நேரம்
கடைக்குள்
“அலையே அலையே
காட்டுல மழையே…”
ஒலித்தது.
“என் மூச்சவள்
பேச்சவள்
பேர் சொல்லும் அழகவள்
எனக்குள்ள கலக்குற
ஆக்ஸிஜன் அளவவள்…”
என்னை அறியாமலே
பாட ஆரம்பிச்சேன்.
“Super bro!”
ன்னு அந்த கடை தம்பி சொன்னான்.
இந்த முறை
“Sir” இல்ல.
“Bro”.
அந்த ஒரு வார்த்தை
இந்த வெள்ளி இரவை
முழுமையாக்கியது.
இப்படித்தான்
கடந்து போனது
ஒரு வெள்ளி இரவு.
#TeaTalkies
#FridayNight
#ChennaiNights
#OMRDiaries








