வெள்ளி, 6 செப்டம்பர், 2024

GOAT திரை விமர்சனம்

 சாதாரணமான கதை ,

special anti-terrorist squad  leader விஜய் தன் குடும்பத்தையும் , அவர் நண்பர்களையும் எப்படி காப்பாற்றுகிறார் ? 

விஜய் போன்ற மாஸ் ஹீரோ களுக்கு கதையை விட திரைக்கதை முக்கியம். அதிரடி சண்டை காட்சி யுடன் ஹீரோ அறிமுகம் ,ஆடல் , பாடல் , காமெடி என முதல் பாதி செல்கிறது.


கல்லூரி மாணவனாக விஜய் கலக்கிய காலம் போய் , இன்று கணவனாக கலக்கி உள்ளார் 

விஜய்-சினேகா கெமிஸ்ட்ரி கண்களுக்கு குளிர்ச்சி.

தன் மகனை பறிகொடுத்த தந்தை யின் வலியை விஜய் நடிப்பால் உணர்த்துகிறார். வேலையை உதறி தள்ளுகிறார். தன் உயர் அதிகாரி  கொலை செய்யப்படுகிறார்.


அதை கண்டு பிடிக்க தொடங்குகிறது இரண்டாம் பாதி. 

வில்லன் vs விஜய் நல்லாவே உள்ளது.சில ,பல ட்விஸ்ட் களுடன்

இயக்குனர் வெங்கட்பிரபு படத்தை நகர்த்துகிறார். 

ATM க்கு பிறகு விஜய் க்கு நெகடிவ் role நடிப்பில் 2K kids ஆதர்ஸ நாயகனாக score செய்கிறார்.அவர்களுக்கும் பிடித்த மாதிரி பின்னி பெடல்

எடுக்கிறார் தளபதி.


நடிகர் அஜீத் வைத்து VP  இயக்கிய மாங்காதா இன்றும் பேச பட காரணம் அஜீத் நெகடிவ் ரோல். அது போல விஜய் க்கும் ஓரு 

படம் எடுக்க நினைத்து வெற்றி பெற முயன்று உள்ளார். 

இரண்டாம் பாதி கொஞ்சம் கத்திரி போட்டு இருக்கலாம். மற்றபடி one more பக்கா கமர்ஷியல் movie. #GOAT

#விஜய் #Vijay #GOAT