வெள்ளி, 31 மே, 2024

Hit list movie Review

 சென்னை யின் பிரபல ரவுடி யை Warning செய்யும் கமிஷனர் அவரை பொருட்படுதாமால் அவர் டிவிஷன் க்குள் அடுத்த கொலை செய்யும் அந்த ரவுடி , பதிலுக்கு கமிஷனர் என்ன செய்தார்?  உயிர்களை நேசிக்கும் நாயகன் , அசைவ உணவை தவிர்த்து வாழ்பவன் ஆட்களை கொலை செய்கிறான் ,

ஏன் ? எதற்கு ?


என்பதை முதல் பாதியில் சுவராஸ்யமா சொல்ல முயன்று வெற்றி பெற்று , இரண்டாம் பாதியில் கதை யின் முடிச்சுகளை சுவாரஸ்யமாக அவிழ்த்து நல்ல ஒரு படம் பார்த்த feel.

கமிஷனராக @realsarathkumar , 

Fitness செம , குரலில் கர்ஜிக்கிறார்.

நாயகனாக Vijay Kanishka அப்பாவி , ஆக்ரோஷமாக

என கலந்து கட்டி நடிக்கிறார்.



 ரவுடி க்கும் நாயகனுக்குமான சண்டை காட்சிகள் அருமை.

நாயகனை கொலை செய்யும் தூண்டும் Mask Man யார் ? என்பதை சுவாரஸ்யமாக சொல்லி நல்ல thriller படம் பார்த்த உணர்வு. செண்டிமெண்ட் , action ,பழிவாங்கல் என இயக்குனர் சூர்யா & கார்த்திகேயன் கலந்து


கட்டி ஒரு பக்கா கமர்சியல் , த்ரில்லர் படம் பார்த்த உணர்வு. 

@ksravikumardir தயாரிப்பாளர்  கண்டிப்பாக நல்ல படமாக தான் இருக்கும் என்கிற நம்பிக்கை யை பூர்த்திசெய்தார் இயக்குனர் & தயாரிப்பாளர் #KSRavikumar


இவன் 

ராஜா.க



வெள்ளி, 24 மே, 2024

சாமானியன் திரை விமர்சனம்

அந்த காலத்த்தில் சொல்லுவாங்க ராமராஜன் படம் னா நல்ல கதை இருக்கும் , குடும்பத்துடன் படம் பார்க்கலாம் என்று.

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்த மாதிரி நல்ல கதை களத்துடன் வந்து உள்ளார் ராமராஜனின் சாமானியன். வங்கியை துப்பாக்கி , வெடி குண்டு முனையில் கடத்துகிறார்கள் அங்குள்ள பொது ஜனம்

என்ன ஆனது , ஏன் அந்த வங்கி யில் ?என்பதை சுவராஸ்யமா சொல்ல முயன்று உள்ளார்கள். திரைக்கதை அமைப்பு சற்று நாடகம் பார்ப்பது போல அமைந்தது ஆனால் தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.60வயது கடந்தவராக படத்தில் நாயகன் ராமராஜன் வருகிறார் ,அதனால் தான் என்னவோ action காட்சிகளை ஏற்று கொள்ள முடியவில்லை

மற்ற படி சமூகத்திற்கு நல்ல ஒரு message சொல்ல முயன்று இருக்கிறார்கள் இதுவே ரஜினி யோ/கமலோ இந்த கதை களத்தில் நடித்து இருந்தால் வேற லெவல்ரீச் ஆகியிருக்கும்.தனியார் வங்கிகள் அத்துமீறல்கள் தகுதி க்கு மீறி கடன் வாங்கினால் ஏற்படும் விளைவுகளை கூறி சாமானியன் வெற்றி பெற முயற்சி செய்துள்ளான்


இவன்

ராஜா. க




ஞாயிறு, 19 மே, 2024

இங்க நான் தான் கிங் விமர்சனம்

 மும்பை யில் நடந்த குண்டு வெடிப்பு போல , சென்னையிலும் நடத்த திட்டம் திட்டுகிறார்கள் தீவிரவாதிகள் அவர்கள் திட்டம் நிறைவேறியதா?  கல்யாணம் நடக்காமல் தள்ளிப்போகும் 90s kid கதையின் நாயகன்  அவனுக்கு கல்யாணம் நடந்ததா?நாயகன் தீவிரவாதிகளின் செயலை முறியடித்தானா ? என்பதை முழு நீள காமெடி படமாக கொடுக்க முயற்சி செய்து இருக்கிறார்கள்.



நாயகன் சந்தானம்  oneline காமெடி நல்லworkout ஆகி உள்ளது , இமானின் இசையில் இரண்டு பாடல்கள் இதம் , @Bala_actor ,தம்பி ராமாய்யா ,காமெடி நன்றாக வந்துள்ளது.

எந்த லாஜிக் இல்லாமல் சிரிக்க மட்டுமே முயன்று அதில் வென்றுள்ளது
படக்குழு


ஞாயிறு, 12 மே, 2024

ஸ்டார் movie review

 சினிமா நம்ம எல்லாருக்கும் பிடிச்ச ஒன்னு , காரணம் நாம் ரியல் life இல் செய்ய முடியாத சில விஷயங்களை நாம கற்பனை பண்ணி , இப்படி நடந்தா நல்லா இருக்குமே என்று மகிழ்ச்சி அடைவோம். இது தான் சினிமாவும் கூட. 


நம்மை போன்ற ஒருவன் , நாம் சந்திந்த சமூகத்தை அப்படியே திரையில் காணும் போது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி நாயகன் திரைபடத்தில் வெற்றி பெறும் போது. அப்டி ஓரு படம் தான் கவின் நடித்த ஸ்டார்.


சிறு வயது முதல் நடிக்கணும் என்கிற நாயகன் ஆர்வம் அதற்கு பக்கபலமாக இருக்கும் அவன் குடும்பம் இருந்தும் அவனால் அவ்வளவு எளிதில் அவன் இலக்கை ஏன் அடைய முடியவில்லை என்பதை வெகு இயல்பாக சொல்லி உள்ளார் இயக்குனர்.


நாயகன் பள்ளி பருவம் , கல்லூரி பருவம் என்று வரும் முதல் பாதி கோடைகாலத்தில் ஜில்லுன்னு AC room இல் இருப்பது போல ஒரு feel. கவின் யதார்த்த மாகவும் , மாஸ் நடிப்பு. சமூகத்தோடு ஒட்டி செல்லனும் என்பதற்காக எல்லோர் போல  engineering படிப்பு அங்கே கேம்பஸ் interview வில் சினிமா பற்றிய கனவு சொல்வதும் அதற்கு அந்த interviewer செய்வது அழகிய ஹைக்கூ.


யுவனின் இசையில் பாடல்கள் பின்னனி இசை படத்துக்கு மிகப்பெரிய பலம், இரண்டு நாயகிகள் கதைக்கும் பலம் நாயகனுக்கும் பலம், கவின் அப்பாவாக வரும் லால் நடிப்பு செம. கவினின் நடிப்பு மேலும் மேருகேறி உள்ளது. 



சினிமா வை ரசிக்கும் ரசிகர்கள், தன் பேஷன் நிறைவேற்ற துடிக்கும் இளைஞர்களுக்கு கண்டிப்பாக இந்த படம் பிடிக்கும்.


இவன்

ராஜா.க