திங்கள், 22 ஜனவரி, 2024

ராமரும் , முருகனும் !!

 இன்று (22-01-2024) அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை அலுவலக நண்பர் ஒருவருடன் Mobile பார்த்து கொண்டு இருந்தோம். விழாவை பார்த்து கொண்டிருக்கும் போதே அவரை அறியாமல் அவர் கண்களில் கண்ணீர் வந்தது , அவரை தேற்றினேன் பிறகு சகஜ நிலைக்கு திரும்பினார். பிறகு அவரிடம் நான் கூறினேன்.



நான் பல முறை எங்கள் ஊர் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமியை வணங்குகையில் என்னை அறியாமல் சில நேரங்களில் கண்ணீர் சிந்தியது உண்டு , ஆனால் இன்று சக்கரவர்த்தி திருமகன் ஸ்ரீ ராமரை கண்ட பொழுது அந்த மாதிரியான உணர்ச்சி மிக்க வழிபாடு இல்லையே என அவரிடம் கூற அலுவலக நண்பர் (North Indian) உங்களுக்கு இங்கே


நிறைய கடவுள் ,  கோயில்கள் உள்ளது , சென்னையில் மட்டுமே இவ்வளவு கோயில் நீங்கள் கொடுத்த லிஸ்ட் நான் நினைத்து ஆச்சரியபட்டுள்ளேன். எங்கள்  பகுதியில் அப்படி அல்ல ஒன்று சிவன் இல்லையேல் ராமர் மட்டும் தான் என்றார் , அங்கே உங்கள் ஊரில் உள்ளது போல கோயில்கள் இல்லை மிகவும் கம்மியே ,



அவரை புரிந்து கொண்டேன்.சில மணி நேரத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு வந்து விட்டார் ஆனால் அவர் கண்களில் அவ்வளவு மகிழ்ச்சி சிலவற்றை நாம் புரிந்து கொள்ள முயற்சி க்க வேண்டும்இல்லை என்றால் கடந்து விட வேண்டும்.அதை விடுத்து எல்லாம் தெரிந்தது போல மற்றவர்கள் நம்பிக்கையை பகடி செய்வது அபத்தம்.


இவன்

ராஜா.க 



#RamMandirPranPrathistha

#RamLallaVirajman

#Rammandhir



வியாழன், 18 ஜனவரி, 2024

ஹாஸ்டலும் , பொங்கலும்

 இப்படி சொல்லலாம் , 

ஹாஸ்டல் னா எல்லா ஊர் காரர்களும் இருப்பாங்க எப்போதும் அமளி , துமளி யா இருக்கும் , கல கலன்னு இருக்கும் .ஏதாவது பண்டிகை க்கு எல்லாரும் அவங்க அவங்க சொந்த ஊர் க்கு போயிடுவாங்க. 


ஹாஸ்டல் சில பேர் இருக்க தான் செய்வாங்க , கொஞ்சம் அமைதி யா இருக்கும் , முதல் நாள் அட இது

நல்லா இருக்கே னு நினைக்க வைக்கும் ,கூட்டம் இல்லை ஆரவாரம் இல்லை என்று மகிழ்ச்சி படுத்தும். இரண்டாவது நாள் நல்லா போற மாதிரி இருக்கும். மூன்றாவது நாள் என்னப்பா ஆட்களே இல்லாமல் ஓரு மாதிரி இருக்கே என்று அங்கே இருப்பவர்களுக்கு வெறுமை ஏற்படும்.




அன்று இரவு ஊருக்கு சென்ற நபர்கள் வர தொடங்குவார்கள். நான்காவது நாள் ஊருக்கு சென்ற முக்கால்வாசி பேர் வந்து விடுவார்கள் , மறுபடியும் ஹாஸ்டல் தன் அடையாளத்திற்கு வந்து விடும்.வழக்கம் போல பரபரப்பாக இயங்க ஆரம்பித்து விடும். 

அந்த ஹாஸ்டல் தான் சிங்கார சென்னை தமிழ் நாட்டு மக்களுக்கு.#சென்னை Back to Normal ❤️ afte Pongal holidays.


இவன்

ராஜா.க


சனி, 13 ஜனவரி, 2024

M.H.Jewellersம் & பொங்கலும்


 இது போன்றதொரு பொங்கல்  விழா எங்கள் பாலிடெக்னிக் கல்லூரி யில் நடைபெற்றது. கிறிஸ்தவ கல்லூரி என்றாலும் இது போன்றதொரு விழாவிற்கு மாற்று மதத்தினரை Chief guest அழைப்பது வழக்கம். 


அந்த முறை இந்து மதத்தின் சார்பாக பெயர் நினைவு இல்லை சுவாமிகள் (சாமியார்) ஒருவரும் , முஸ்லிம் மதத்தின் சார்பாக நகை கடை ஓனர் (M.H. jewelers ) விருந்தினராக அழைத்து இருந்தனர்.


நகை கடை ஓனர் பேச்சு இன்றும் நினைவில் உள்ளது காரணம் அவ்வளவு இயல்பாக பேசினார் ஒரு கட்டத்தில் இப்படி பேசினார்.நான் ஏன் M.H.என்று பெயர் வைத்தேன் தெரியுமா ? 

M - Muslim குறிப்பது ,

H - Hindus குறிப்பது  என்று 

எல்லாருக்கும் ஒரு பரபரப்பு 

நான் மனத்திற்குள் நீங்க வந்துள்ளது Christen campus என்ன சார் இப்படி என்று நினைத்து கொண்திருந்தேன்.



அவர் சற்றும் யோசிக்காமல் 

கிறித்துவர்களே 

M.H.Jewellers உள்ள 

J - jesus தான் குறிக்கிறது என்றார். ஒட்டு மொத்த மாணவர்கள் பயங்கர கை தட்டல்கள்..அவரின் பேச்சு இன்றும் நினைவு இருக்கிறது.


ஒரு காலத்தில் திருநெல்வேலி டவுண் M.H.ஜவல்லர்ஸ் அவளோ பிரபலம்.

எவ்ளோ என்றால் அருணாச்சலம் படத்தில் அல்லி , அல்லி அனார்கலி பாடலில் எல்லா நகை கடை பெயர் களும் பின்னாடி தெரியும், அதில் M.H.jewelers வரும். எத்தனை முறை தெரிந்தது என்று count பண்ணி கூறினால் அந்த கடையில் gift கொடுத்தார்கள்.


அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்


இவன்

ராஜா.க 


#jewellers #Tirunelveli #Nellai #Town #PongalWishes #Pongal

வெள்ளி, 12 ஜனவரி, 2024

அயலான் review

 பூமிக்கு ஏற்பட இருக்கும் ஆபத்தை வேற்று கிரக வாசி காப்பாற்ற பூமிக்கு வருகிறார் , காப்பாற்றினாரா ?கதை என்னவோ நல்லா இருக்கு. ஆனால் திரைக்கதை ? 


குழிக்குள் இருக்கும் யானை யை காப்பாற்றி , இயற்கை விவசாயம் செய்து எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என நினைக்கும் கதாப்பாத்திரம் இந்த காட்சிகள் போதுமா ? சிவா வின் காட்டை மட்டும் அந்த பூச்சிகள் தாக்குவதற்கு சரியான காரணம் எதுவும் இல்லை. 



கதாநாயகி , காமெடி நடிகர்கள் என எல்லாமே படு சொதப்பல் , ஒரு படத்தின் வெற்றி வில்லன் கதாபாத்திரம் பொறுத்தே அமையும் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரம் கண்டு பயம் வரவில்லை பரிதாபமாம் தான் வருகிறது. 


ஒரு காட்சியில் கூட நாம் படத்தோடு ஒன்றி பயணிக்க முடியவில்லை ,

சென்ற முறை விஜய் சேதுபதி குரல் இந்த முறை சித்தாத் குரல் ஏலியனுக்கு அது ஒன்று தான் ஆறுதல். இசை ரகுமானா ?? 



இன்று , நேற்று ,நாளை என்ற முதல் படத்தில் எல்லாரையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் R.ரவிக்குமார் இரண்டாம் படத்தில் தடுமாறி இருக்கிறார். 


மொத்தத்தில் 

அயலான் 

அய்யோ அம்மா !!


இவன்

ராஜா.க 


#அயலான் #Sivakarthikeyan #Ayyalan #movie #review 



புதன், 3 ஜனவரி, 2024

MGR உம் , இரட்டை இலையும்

 




திருச்செந்தூர் கோயில் பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதால் கோயில் பஸ்ஸ்டாண்ட் இப்போது செயல்படவில்லை. வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் தரிசனம் முடித்து கோயிலிருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் தான் செல்ல வேண்டும் அவர்கள் ஊருக்கு செல்ல.இந்த முறை கோயிலில் இருந்து நான் பைக்கில் வெளியே வரும் போது 


பக்தர் ஒருவர் சார் , ஊருக்குள் தானே போறீங்க , நீங்கள் செல்லும் வரை அழைத்து செல்லுங்கள் அங்கிருந்து நான் நடந்து போகிறேன் என்று கூறினார். வெளியூர் இருந்து எங்கள் ஊருக்கு வரும் பக்தர்கள் எங்கள் விருந்தாளி அதனால் ஏற்றி கொண்டேன். பைக் கிளம்பியது , அவரின் செல்போன் அடித்தது அந்த ரிங்


டோன் பாடல் இப்படை தோற்பின் எப்படை வெல்லும் ?என்கிற எம்.ஜி.ஆர் பாட்டு mobile இல் பேசி விட்ட பிறகு நான் அவரிடம் கேட்டேன் , அண்ணே ரிங் டோன் சொல்லுது MGR ரசிகர் என்று ,ஏன் அவரை இன்றும் பிடிக்கிறது என கேட்டேன் ?அது என்னவோ இனம் புரியாத பாசம் , அவரையும் , அம்மா (ஜெயலலிதா) ரொம்ப பிடிக்கும் என்றார்.


அவர் சொல்லும் போது அவர் முகத்தில் இருந்த சிரிப்பு , அந்த குரல் அதெல்லாம் என்னை சிறிது ஆச்சரியபடுத்தியது. இன்று வரை இரட்டை இலை சின்னத்தை தவிர வேறு எதற்கும் போட்டது இல்லை என்றார். இப்போ திரு.EPS , திரு.OPS இவர்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்றேன் ? யாரு



வேண்டுமானாலும் இருக்கட்டும் , ஆனால் இரட்டை இலை சின்னம் தோற்று விட கூடாது அதனால் அந்த சின்னத்துக்கு தான் என் ஒட்டு என் வாழ்நாள் முழுவதும் M.GR & அம்மா க்காக தான் என்றார். ஒரு நிமிடம் எனக்கு மயிற்கோச்சரியம் (புல்லரித்து விட்டது) பாமரன் மனதில் MGR & இரட்டை இலை


சின்னம் எவ்வளவு ஆழமாக பதிந்துள்ளது என எண்ணி வியந்தேன் , பேசி கொண்டே அவரை பஸ் ஸ்டாண்ட் க்கு கொண்டு விட்டேன் , எந்த ஊர் என்று கேட்டேன் ராமேஸ்வரம் என்றார். தம்பி , வாங்க ஒரு காஃபி சாப்பிடலாம் என்றார். இருவரும் காஃபி சாப்பிடுகையில் டீ கடையில் பாடல் ஒலித்தது

 " நான் ஆணையிட்டால்" 


இவன்

ராஜா.க


#MGR #Jayalalitha #அம்மா #Amma #AIADMK #ADMK