புதன், 25 ஜனவரி, 2023

கடனும் , நண்பனும்

 ரொம்ப நாளாக எழுதணும் நினைத்த த்ரெட்.

இன்று நேரம் அமைந்ததால் பதிவிடும் வாய்ப்பு கிடைத்தது. 

" கடன்"இந்த வார்த்தை பலரின் வாழ்க்கையில் மிகவும் பரிச்சயமான வார்த்தை.



இந்த கடனால் புதிய நபர்கள் அறிமுகமாவார்கள் , பழைய நண்பர்கள் விலகுவார்கள்.

ஒரு பக்கம் மகிழ்ச்சி , மறு பக்கம் துன்பம் என்று இதனால் இரண்டு வகையான உணர்வுகளையும் அதிகமாகேவே கொடுக்க வல்லது. 


அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது கடனுக்கும் பொருந்தும். தன் சக்தி க்கு மீறி கடன் வாங்கும் பலர் சுனாமி அலைகள் போல அடித்து சென்று கடலின் கோர பசிக்கு இறையான சான்று இன்றும் உள்ளது சிலர்  மட்டுமே கறை சேருவார்கள். 


உலகமயமாக்களின் விளைவு பெரும்பாலானோர் எங்கோ , யாரிடமோ கடன் வாங்கியிருப்பார்கள். சிலர் வெளியே தெரிந்து (தனி நபர்களிடம்) சிலர் வெளியே தெரியாமல் (வங்கிகளிடம்).  மேலே கூறியது போல நம் சக்தி க்கு மீறி கடன் வாங்கினால் இழப்பு வாங்கியவருக்கும் அவரின் சுற்றத்தாருக்கும்.


இந்த கடனால் பல நட்புகள் பரம எதிரிகளாக மாறிய வரலாறை இந்த பூமி கண்டுள்ளது. 


கடனும் நானும் : 

இன்று வரை நண்பர்களுக்கு மொபைலில் அழைத்தால் attend செய்வார்கள் , அப்போது எடுக்க முடியாமல் போனால் மறுபடியும் அழைபபார்கள். அதற்கான மிக முக்கியமான காரணம் நண்பர்களிடத்தில் பணம் வாங்கவோ கேட்டதோ கிடையாது. இதை எனக்கு உணர்த்தியதே ஒரு நண்பன் தான் , ஒரு முறை அவனிடம் நேரில் பேசி கொண்டு இருக்கையில் 



ஒரு முறை அவனிடத்தில் நேரில் பேசி கொண்டு இருக்கையில் அவனுக்கு மொபைலில் அழைப்பு வந்தது , பெயரை பார்த்தவுடன் நெற்றி சுருக்கி அழைப்பை எடுக்க வில்லை , ஏன் டா ? என நான் கேட்க , இவன் லாம் பணம் கேட்க தான் அழைப்பான் என்றான்.  வேணும் னா பாரேன் , திருப்பி அழைப்பு வந்தது.



நண்பன் விஜய் போன்று இப்போ உனக்கு live demo கொடுக்கறேன் என்று சொல்லி அந்த அழைப்பை எடுத்து பேசினான் ,speaker போட்டு விட்டான். அவன் கூறிய படி கடன் தான் கேட்டான்.நாளை க்கு பேசறேன் இப்போ driving இருக்கேன் என்று அழைப்பை துண்டித்தான் சிரித்து கொண்டே என்னை பார்த்து demo ஓகே வா என்றான்.



ஏன் டா இவனுக்கு கொடுக்க விருப்பமில்லையா என நான் கேட்க ; இவனுக்கு இதற்கு முன் கொடுத்த பணத்தையே தரவில்லை , உனக்காக தான் call attend பண்ணினேன் என்றான் casual ஆக. அப்போது தான் எனக்கு புரிந்தது பாடம் கடன் வாங்கினால் நட்பு என்ன செய்யும் என்று 🤔 engineering இதெல்லாம் சொல்லி தரவில்லை.



மேற்கூறிய இரு நபர்களும் கல்லூரியில் அவ்வளவு நெருக்கம்.  ஆம் கல்லூரி கால வாழ்க்கை வேறு , கல்லூரி பிறகு வாழ்க்கை வேறு. இந்த சம்பவம் எனக்கு உணர்த்தியது ஒன்று தான் நண்பர்கள் இடத்தில் கடன் வாங்க கூடாது என்று. நாம் ஒரு கொள்கை யில் இருக்க முயன்றால்  அதில்


 குஷ்பு போல சின்ன , சின்ன movement கூடிய dance ஆட காலம் நினைக்கும் அதை விதி என்றும் கூறலாம். ஒரு property வாங்குவதற்கு Bank லோன் எல்லாம் ஏற்பாடு செய்தாகிவிட்டது. வடிவேலு சொல்வது போல எல்லாம் பிளான் பண்ணினாலும் திடிரென்று 1 இலட்சம் துண்டு விழுந்தது.


என்ன செய்ய என்று யோசித்து சரி இதில் என்ன ஈகோ என அப்பா விடம் கேட்க , அவரோ சிரித்து கொண்டே தருகிறேன் ஆனால் உனக்கு ஒரு பாடம் ; ஏதோ கூறுவாயே உன் நட்பு , நட்பு என்று ,சும்மா அவர்களிடம் கேள் நீ யார் என்று அவர்கள் உனக்கு உணர்த்துவார்கள் என்று.



சூரியன் படத்தில் கவண்டர் மகான் கூறுவது போல " சத்ய சோதனை " என்று கூறி கொண்டு , யாரிடம் கேட்க ? எப்படி கேட்க என இரவு முழுவதும் யோசனை , அவன் என்ன நினைப்பான் , இவன் என்ன நினைப்பான் என ஏகப்பட்ட திரைக்கதை கண் முன் ஓடியது.



நமக்கென்று நாலு பேர் இருக்கிறார்கள் அவர்களில் ஒவ்வொரு நபரிடமும் 25 ஆயிரம் என முடிவு செய்து. முதலில் அழைத்தது" Haja " மறுமுனையில் சொல்லுடா என கூற சற்று தயங்கி பிறகு ஏதோ ஒரு தைரியத்தில் பேச; எவ்வளவு வேணும் என கேட்க என் plan சொல்ல அரை மணி நேரம் கழித்து பேசுகிறேன் என்று கூறி விட்டான்.


ஏகபட்ட கேள்வி கேட்டு கொண்டேன் , நாம் கேட்டது சரியா / தவறா என்று. சரி இன்றைக்கு இது போதும் எதுவாகினும் நாளை மற்றவர்கள் இடத்தில் பேசி கொள்ளலாம் என்று நினைத்து கொண்டேன். அடுத்த 15 நிமிடத்தில் sms வந்தது பார்த்து சற்று அதிர்ச்சி ஆனேன்.



ஆம் 1 இலட்சம் credited to tour account என்ற குறுந்தகவல் மிகப்பெரிய மகிழ்ச்சி யை கொடுத்தது. அவனும் நானும் ஒரே வங்கியில் கணக்கு வைத்திருந்தோம் , சொல்ல போனால் அவனை பார்த்து தான் அந்த வங்கியில் கணக்கை தொடங்கினேன் அது ஒரு சுவராஸ்யமான சம்பவம் அதை வேறு த்ரெட்டில் எழுதுகிறேன்.



நண்பனிடம் நன்றி கூற அழைத்த போது " சரிடா யப்பா போதும் " என்று கூறி call ஐ cut செய்தான். தந்தை யிடம் சவாலில் வெற்றி பெறுவது சின்ன சங்கடம் தான் என்றாலும் அவர் சிரித்து கொண்டே உனக்கு இப்போது தான் பொறுப்பு கூடியுள்ளது . கவனமாக இரு என்று ஒரு சின்ன எச்சரிக்கை அதில் அர்த்தம் இருந்தது.



அந்த கடனை அடுத்த 10 நாட்களில் கொடுத்து விட்டேன் , அதன் பிறகு முடிந்த வரை நண்பர்கள் இடத்தில் கடன் வாங்குவது இல்லை. வழியே இல்லாத நிலையில் credit card என்கிற பிரம்மாஸ்திரம் எடுத்து கொள்வேன். ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு சூழ்நிலை உருவாகும்.



முடிந்த வரை கடன் வாங்காமல் ஓட முயற்சி செய்வோம் நட்பு வட்டத்தை பெருக்கி கொள்வோம். 

#கடன் #நண்பன் #credit #loan #loans #personalloan #homeloan

இவன்

ராஜா.க 










சனி, 14 ஜனவரி, 2023

துணிவு திரைவிமர்சனம்

 நடிகர்கள் தங்கள் நடித்து வெளி வரும் படங்களில் சமுதாயத்திற்கு ஒரு கருத்து சொல்ல வேண்டும் என்று நினைப்பது அறம் சார்ந்தது அதை பெரும்பாலானோர் செய்ய தவறினாலும் சிலர் தயங்காமல் செய்கின்றனர்.



தனக்கான ஒரு பெருங்கூட்டம் இருப்பது தெரிந்ததால் தான் என்னவோ ,  அவர்களுக்கு தன்னால் முடிந்த அறிவுறையை திரையின் வாயிலாக கூற இயலும் நடிகர்களில் அஜித்குமாரும் ஒருவர். 



அஜித்குமார் , மஞ்சுவாரியர் , சமுத்திரகனி , பக்ஸ் ,இன்னும் பலர் நடித்து , ஜிப்ரான் இசையில் , H.வினோத் இயக்கத்தில் தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு  திரைக்கு வந்துள்ள படம் துணிவு. 



நகரத்தின் முக்கியமான இடத்தில் இருக்கும் வங்கியை கொள்ளையர்கள் கொள்ள அடிக்க முயல்கிறார்கள் அவர்கள் எண்ணம் நிறைவேறியதா ? அந்த வங்கியின் பின்னணி என்ன ? வங்கியில் உள்ள மக்களை எப்படி அரசு காக்க முயலும் என்பதை சமகால நிகழ்வுகளோடு சுவார்ஸமாக சொல்லி வென்று விட்டார் படத்தின் இயக்குனர் வினோத்.



கொள்ளையர்களிடமிருந்து வங்கியில் உள்ள பிணைய கைதிகளை காப்பாற்ற முயலும்  அஜீத்தை கைதட்டி வரவேற்கும் மக்களிடம் சிரித்து கொண்டே நானும் கொள்ளையடிக்கத்தான் வந்துள்ளேன் என்று கூறி அமர்க்களமான ஆரம்ப காட்சி முதல் No Guts No Glory என்று கூறி இறுதி காட்சி வரை அஜீத் தன் கொடி பறக்க விடுகிறார் திரைப்படம் முழுவதும்.



சென்னை கமிஷனராக சமுத்திரகனி கனகச்சிதமாக பொருந்துகிறார் , குறிப்பாக கமெண்டோ chief இடம் இது வடக்கு அல்ல தமிழ்நாடு என்று கூறுகையில் தன்னை அறியாமல் கைதட்டல் சத்தம் இடுகிறார்கள்.


வெள்ளித்திரையில் முதல் முறையாக அறிமுகமாகும் மோகன சுந்தரம் (மை பா ) பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் அதகளம் செய்கிறார் பக்ஸ் (போலீஸ் அதிகாரி )உடன் அவரின் பேரம் கலந்த journalism சிரிப்பு க்கு உத்தரவாதம்  நடப்பு journalism கண் முன் நிறுத்துகிறார்கள் இருவரும். 



வெளியில் நடப்பதை வேவு பார்த்து அஜித் க்கு உதவியாக சொல்லப்போனால் வலதுகரமாக இருந்து படம் முழுவதும் stylish  பயணிக்கிறார் கண்மணி என்கிற

மஞ்சு வாரியர்.  


சில்லா , சில்லா என்ற பாடலில் ஜிப்ரான் இசை , வைசாக் வரிகள் , அனிருத் குரலில் இன்றைய ரசிகர்களை ஆட வைக்கிறது ,  பின்னணி இசையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.


நிரவ்ஷா வின் கேமரா ஒவ்வொரு frame ம் கண்களுக்கு விருந்து , வங்கியை அவ்வளவு லாவகமாக எடுந்திருந்தார் , சண்டை காட்சிகளில் அவ்வளவு தத்ரூபம். 



முதல் பாதி முழுக்க அஜித் தின் ஆட்டம் , இரண்டாம் பாதியில் இயக்குனர் வலுவான திரைக்கதையால் வலு சேர்கிறார் வங்கிகளின் அத்துமீறல் , share market , mutual fund உள்ள அப்தங்களின் தோலுரித்து காட்டுகிறார். பொது மக்களுக்குள்ள பொறுப்பை உணர அறிவுறுத்துகிறார். 


துணிவு - அஜித்தின் துள்ளல். 


இவண்

ராஜா.க 



வெள்ளி, 6 ஜனவரி, 2023

குழந்தை தனம் !!

 உங்களுக்குள் இருக்கும் குழந்தையை தொலையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.!-ஜாக்கி சான். இதை படிக்கும் போது எனக்கு தோன்றிய ஒன்று , சின்ன வயதில் சில விஷயங்களை பண்ணும் போது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் , திரும்ப திரும்ப பண்ண தோணும் , but நம்மால் பண்ண முடியாது.


அப்படி ஒரு பழக்கம் தான் lift இல் (பயணிப்பது) செல்வது , மேலும் செல்வோம் , மறுபடியும் கீழே இறங்கி வருவோம். ஆனால் சின்ன பசங்க என்பதால் அனுமதிப்பதில்லை. இன்று மேலே ஜாக்கிசான் கூறிய quote படித்தவுடன் lift இல் பயணிக்க தொடங்கினேன். என்னுடைய 7th floor வந்ததும் lift வெளியே வரமாமல்


Ground floor பட்டனை அழத்தினேன். எனக்குள்ளே சிரித்து கொண்டேன். நம்மை யாரும் இப்போது திட்ட மாட்டார்கள் , ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்க மாட்டராகள். இருந்தாலும் என் மகிழ்ச்சி க்கு இரண்டு முறை மேல் நோக்கி சென்று கீழ் நோக்கி வந்தேன். ஆம் ஜாக்கிசான் கூறியது உண்மை தான்.


நமக்குள் இருக்கும் குழந்தை யை தொலையாமல் பார்த்த் கொள்ள வேண்டும்.

நன்றி ஜாக்கிசான் 😀😀😀

#குழந்தை #நினைவுகள்