இது போன்றதொரு சுதந்திர தினத்தில் காலை 6 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து ஒரு படையோடு புறப்பட்டு 7 மணிக்கெல்லாம் அருகில் உள்ள ஆத்தூர் க்கு சென்றாகிவிட்டோம்.
மூன்று ஆண்டுகள் இடைவெளி க்கு பிறகு,
மேலும் இது தான் கடைசி என்று ஒரு பேச்சு எதிர்பார்ப்பை மேலும் இரட்டிப்பாக்கியது.
8 மணிக்கு முதல் காட்சி,
ஆத்தூர் பம்பையா திரை அரங்கம் முழுக்க படையப்பனின் படை !!!
ஆம் இந்த முறை பாபா முத்திரை யுடன் பாபா, பாபா என்ற கூக்குரல் !!!
பாட்ஷா புகழ் சுரேஷ்கிருஷ்ணா ரஜினி யுடன் இணைகிறார்,
ரகுமான் இசை ,
நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி யுடன் ரஜினி,
பூஜை போட்ட நாள் முதல் வெளிவரும் ஒவ்வொரு ஸ்டில் வேற லெவல் இருந்தது.
பாடல்களில் வழக்கமான அரசியல் வாடை
"உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்" ,
"உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடி விட மாட்டேன்,"
"கட்சிகளை பதவி களை நான் விரும்பமாட்டேன்,
காலத்தின் கட்டளை நான் மறுக்க மாட்டேன் "
என்று டாப் கியர் போட்டு ரசிகர்களின் BP யை ஏத்தியிருப்பார்
கவி பேரரசு.
படம் ரிலீஸ் நேரத்தில் பாமக கட்சி யுடன் மோதல் என பரபரப்பு க்கு பஞ்சம் இல்லாமல் ஆகஸ்ட் 15 ல் வெளியானது பாபா.
ரஜினியின் அறிமுக காட்சி, ரகுமான் பின்னணி இசையில் பலத்த ஆரவாரம்.
நொடி பொழுதில் ஆரவாரம் கலைந்தது ஆம் ரஜினி பூவ்வாவா என்று டிப்புக்குமாரி பாடலை பாடுவார் ரஜினியின் முதல் பாடல் செண்டிமெண்ட் பெரும்பாலும் spb தான் பதில் இந்த முறை சங்கர் மகாதேவன்.
ரஜினியின் பீடி பிடித்தல், சாராயம் குடித்தல், அந்த தலைப்பாகட்டு, பாபா கத்தி, பாபா counting, இப்போ ராமசாமி யிடம் பேசும் வசனம் என முதல் பாதி
நன்றாக தான் சென்றது.
இரண்டாம் பாதி கொஞ்சம் இல்லை ரொம்ப மெதுவாக சென்றது இறுதியில் இமயமலை க்கு செல்லாமல் இங்கேயே இருப்பது போன்ற காட்சி. சுஜாதா தான் அன்னை செண்டிமெண்ட் வழக்கம் போல இந்த படமும் சுமார் ரகமே இதற்கு முன் (கொடி பறக்குது,உழைப்பாளி)
படம் முடிந்து வெளியே வருகையில் ஒரு ரஜினி ரசிகர் குரல் , இந்த படம் ஓடாதது ஒரு வகையில் நல்லது தான் அப்போ தான் தலைவர் அடுத்த படம் நடிப்பார் என்று.
நினைவுகளுடன்
ராஜா.க