திங்கள், 6 ஜூன், 2022

சிலேடையும் , தமிழ் பாடலும்

 பிடித்த வரிகள் !!! 

"சிலேடை" 

இரு நபர்களின் பொதுவான


குணாதிசயங்கள் ஒரு பொருள் பட எடுத்துரைப்பது. 


நீரையும் , பெண் இருவரின் குணாதிசயங்கள் ஒரு சேர சேர்த்து  அமைந்த ஒரு தமிழ் பாடல். ரிதம் திரைபடத்தில் கவிஞர் வைரமுத்து வால் , எழுதபட்டிருக்கும்.


காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்

நீரின் அருமை அறிவாய் கோடையிலே

வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்

நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ

தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ


வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே

வளைவுகள் அழகு, உங்கள் வளைவுகள் அழகு

ஹோ.. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல்

நதிகளின் குணமே, அது நங்கையின் குணமே


நீர் பெருமையை பெண்ணோடு ஒப்பிட்டு தமிழ் இலக்கணத்தை காலத்தால் அழியாத படைப்புகளில் சேர்த்த பெருமை

வைரமுத்து வை சாரும் !!!


இவன்

ராஜா.க


#ரிதம் #தமிழ்பாடல்கள் #சிலேடை #இலக்கணம் 


வெள்ளி, 3 ஜூன், 2022

விக்ரம் திரை விமர்சனம்

 


தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் எப்போதும் உண்டு , அன்றைய இயக்குனர் ஸ்ரீதர் தொடங்கி இன்றைய இயக்குனர் நெல்சன் வரை இந்த பட்டியல் நீளும். 


அந்த பட்டியலில் இக்காலத்தில் உள்ள முக்கியமான இயக்குனர் திரு. லோகோஷ் கனகராஜ் , தன் முந்தைய மூன்று படங்கள் மூலம் அதை நிரூபித்து காட்டியுள்ளார். அதனால் தான் என்னவோ நான்காம் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு .மேலும் இந்த முறை அவர் கை கோர்த்து உள்ளது உலகநாயகன் கமல்ஹாசனிடம்.


இயக்குனர் ஷங்கர் க்கு மூன்றாவது படத்தில் கமலை இயக்கும் வாய்ப்பு கிட்டியது. அது போன்றதொரு வாய்ப்பு லோகேஷ் க்கு நான்காம் படத்தில் கிடைத்துள்ளது. இயக்குனரிடம் முழு பொறுப்பை கொடுத்தால் வெற்றி உறுதி என்பதை ஷங்கர் இந்தியனில் நிரூபித்ததை போல் லோகேஷ் கனகராஜ் விக்ரமில் நிரூபித்தாரா ?


இந்த முறை விமர்சிக்கும் படம் விக்ரம் , படத்துக்கு போலாமா ?


கால ஓட்டத்திற்கு ஏற்ப மாற்றம் தன் படைப்புகளில் அமைக்க வேண்டியது இயக்குனர் கட்டாயம் , அப்படி ஒரு மாற்றம் தன் முந்தைய படத்தை தற்போது உள்ள படத்தோடு லிங்க்(connect) செய்வது. தன் முந்தைய படமான கைதி யை இதில் இணைந்துள்ளார்.


கைப்பற்ற பட்ட கஞ்சாவை உற்பத்தி செய்ய உதவும் மூலப்பொருளை , காவல்துறை அதிகாரி பத்திரமாக வைக்கிறார் என்று தொடங்குகிறது இந்த படம், அவரை கொன்று அவரோடு நில்லாமல் மேலும் அதில் தொடர்புடைய காவல் அதிகாரிகள் கொல்ல படுகிறார்கள் மேலும் கர்ணன் எனும் போதை ஆசாமி (போலீஸ் அதிகாரியின் தந்தை) கமலும் கொல்லப்படுகிறார் , கொலையாளிகளை பிடிக்க காவல்துறை ஒரு ரகசிய குழுவை அமைக்கிறது  அதற்கு தலைமை வகிக்கிறார் ஃபஹத் ஃபாசில் , 


ஃபஹத் ஃபாசில்  அந்த கும்பலை கண்டுபிடித்தாரா ? அந்த கஞ்சா மூலப்பொருளை எப்படியாவது மீட்டு ஒரு அரசாங்கத்தையே உருவாக்க முடியும் என நினைக்கும் சந்தானத்தின் கனவு நிறைவேறியதா ? மகனை பறி கொடுத்த தந்தை என்ன செய்தார் ? இந்த மூன்று கேள்விகளுக்கான விடையை 3 மணி நேரம் சுவாரஸ்யமான அதே நேரத்தில் தொய்வில்லாத திரைக்கதை யால் நம்மை கஞ்சா Mafia உலகத்திற்கு அழைத்து செல்கிறார் இயக்குனர்.


ஃபஹத் ஃபாசில் நடிப்பு , அவரின் பேச்சு அவரின் பார்வை , action காட்சிகள் எல்லாமே நடிப்பின் வேறு பரிமாணம் , தமிழ்சினிமா விற்கு  புதிது அவரின் கண்களே நடிக்கிறது. 


சந்தானமாக விஜய் சேதுபதி அவருக்கே உரித்தான இயல்பான நடிப்பு சில படங்களில் பார்த்தது தான் ஆனாலும் தன் பங்கை நிறைவாக செய்கிறார்.  போதை வஸ்து வை கடித்த பிற்பாடு அவரினுள் வெளிப்படும் மிருகதனமான நடிப்பு பகீர் ரகம்.



கர்ணனாக கமல் , மகனை இழந்த ஒரு தந்தை யின் மனது எப்படி பரிதவிக்கும் என தனக்கே உரிய நடிப்பு அவரின் குரல் சிங்கத்தின் கர்ஜனை நினைவு படுத்துகிறது. பிற்பாடு மது, மாது , கஞ்சா என வாழ்க்கை தடம்மாறி மகனை கொன்றவனை அவர் பழிவாங்கினாரா ? அவரின் குடும்பதிற்கும் வருங்கால சந்ததிகும் அவர் அளிக்கும் பங்கு என்ன என்பதை தன் நடிப்பால் விடை கூறுகிறார்.


இந்த மூவரின் நடிப்பு க்கு தீனி போடுவது சவாலானது அதை தனக்கே உரிய தனித்துவமான இயக்கத்தால் வெளிக்கொணர்ந்து வெற்றி வாகி சூடியுள்ளார் லோகேஷ் கனகராஜ். Trendsetter movie in kollywood.


அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் , பத்தல பத்தல பாடல் கமல் தன் ரசிகர்களுக்கு கொடுக்கும்  மினி ட்ரீட். படத்தின் இடைவேளை காட்சி , சின்ன சின்ன twist , action sequence களில் கேமரா கண்களால் தன் பங்கை சரியாக செய்துள்ளார்

கிருஷ் கங்காதரன்.


தியேட்டர் க்கு செல்லுமுன் இயக்குனர் கூறியது போல கைதி படத்தை பார்த்து விட்டு செல்வது பரீட்சை க்கு செல்லும் முன் படித்துவிட்டு செல் என்று ஆசிரியர் கூறுவது  போல ஒரு அறிவுரை.


விக்ரம் விக்டரி 

ராஜா .க 


#விக்ரம் #Vikram #vikramreview

#Vikramreview #Vikraminaction