வெள்ளி, 11 ஜூன், 2021

வலி மிகு வார்த்தை

 சென்னை யில் 2015 இல் பெய்த கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முடிச்சூரும் ஒன்று , நான் இருந்த இடம் வெள்ளக்காடானது, தீவில் இருந்தது போல சூழல். என்ன செய்யவதென்று யோசித்த நேரம், நண்பனிடம் இருந்து செல்போனில் அழைப்பு. 



ரொம்பவும் யோசிக்க வேண்டாம்,  உடனே கிளம்பி வீட்டுக்கு வந்து சேர்ந்தது விடு என்று. அவனுக்கு தெரியும் தொடர்ந்து பேசினால், ஏதாவ்து காரணம் கூறி அவன் அழைப்பை நிராகரித்து விடுவேன் என்று (12 வருட நட்பு ஆயிற்றே) 



அவன் வீட்டுக்கு சென்றேன், என் இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு நாள் ஆயிற்று. பிறகு நீண்ட நேரம் உரையாடல் , அரட்டை என்று பொழுது போனது. அவன் இருக்கும் இடத்திலிருந்தும் எனது அலுவலக பேருந்து இயக்கம் உண்டு. 


ஒரு நாள் பேருந்தில் 

பயணிக்கையில் சகஊழியர் ஒருவரை சந்திந்தேன், சிறிய ஆச்சரிய பார்வைக்கு பின் இந்த ஏரியா வில் எப்படி என்று கேட்க நண்பன் வீட்டில் உள்ளேன் என்றேன்.  பின் இரு நாட்களுக்கு பிறகு அலுவலகத்தில் காபி குடிக்கையில் சக ஊழியர்களுடன் பேசி கொள்ளும் போது 

என்னுடன் பேருந்தில் பயணித்த நபரும் அந்த அரட்டையில் பங்கு கொள்ள, ஏதோ ஒரு தருணத்தில் இப்போது ராஜா எங்கள் எரியாவில் தான் உள்ளார்.



நிலைமை சரியாகும் வரை எங்கள் ஏரியா தான் அவருக்கு "அகதி" முகாம் என்று நகைச்சுவை யாக குறிப்பிட்டார். அது வரை அந்த வார்த்தையை  

செய்தித்தாள்கள், செய்திகளில் கேட்டுள்ளேன் தவிர அந்த வார்த்தையின்  வலியை உணர்ந்தேன். 



ஒரே இடத்தில் (சென்னை) விட்டை விட்டு வேறு ஏரியா விற்கு சென்றதே நமக்கு இப்படி வலிக்குது என்றால் சொந்த நாட்டில் இருந்து 

வேறு ஒரு நாட்டிற்கு வந்து இடம் பெயர்ந்து எங்கோ தங்கி உள்ளவர்களுக்கு எப்படி வலிக்கும் என்று உணர்ந்தேன். அன்று முதல் அந்த வார்த்தையை படிக்கையில் , கேட்கையில் ஒரு இனம் புரியாத வருத்தம் ஏற்படுகிறது. 



சமீப காலமாக நமது சந்தில் அந்த வார்த்தை அதிகமாகவும் , அவர்களை திட்டியும் பதிவு செய்ய படுகிறது. யாரோ ஒரு சிலரின் தவறுக்காக அனைவரையும் அவமானப்படுத்துவது போல உள்ளது. 

#அகதி சிறிய வார்த்தை தான் ஆனால் வலி அதிகம் மிகுந்த வார்த்தை


#chennairains

#Pain